Saturday 18 May 2013

PenDrive Tricks: தர்மசங்கடமான சூழ்நிலையை தவிர்க்க....




PenDrive Tricks: Hide your personal files 





           இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் அனைத்து பயனாளர்களும் தனக்கென்று PenDrive வைத்திருக்கிறார்கள். உங்களது பென் ட்ரைவில் உங்கள் அலுவல் சம்பந்தமான கோப்புகள், கோப்புறைகள் மட்டுமின்றி உங்களது தனிப்பட்ட கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் வைத்திருப்பீர்கள். 





          ஒரு சில சமயங்களில் உங்கள் பென் ட்ரைவை மற்றவர்கள் அவசரமாக பயன்படுத்த கொடுக்கலாம். அல்லது உங்கள் மேலதிகாரி முன்னிலையில் உங்கள் பென் ட்ரைவை கணினியில் திறக்க வேண்டிய சூழல்உருவாகி, அப்படி திறக்கையில் அதில், அவர் பார்க்ககூடாத புகைப்படங்களை அவர் பார்த்துவிடும் சூழ்நிலையும் வரலாம்.



         இது போன்ற தர்மசங்கடமான சூழ்நிலையை தவிர்க்க ஒரு  இலவச மென்பொருள் கருவி WinMend Folder Hidden எனும் சிறிய சக்திவாய்ந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 

 

        இந்த மென்பொருள் கருவியை பயன்படுத்தி உங்கள் பென் ட்ரைவில் Hide  செய்த கோப்புகளை, பிற கணினிகளிலும், குறிப்பாக விண்டோஸ் தவிர வேறு இயங்கு தளங்களிலும் கூட திறக்க இயலாது என்பது மிக முக்கியமான சிறப்பம்சமாகும். மேலும் பென் ட்ரைவ் மட்டுமின்றி உங்கள் வன் தட்டில் உள்ள கோப்புறைகளையும் இதை பயன்படுத்தி கடவு சொல் கொடுத்து மறைத்து வைக்க இயலும்.







         இந்த கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி, முதல் முறையாக அதனை இயக்கும் பொழுது, உங்களுக்கான கடவு சொல்லை (கடவு சொல்லை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்) கொடுங்கள்.











         அடுத்து திறக்கும் WinMend Folder Hidden பயன்பாட்டுத் திரையில், Hide Folder அல்லது Hide File(s) பொத்தானை க்ளிக் செய்து, மறைக்க வேண்டிய கோப்புகள் மற்றும் கோப்புறைகளை உங்கள் பென் ட்ரைவிலிருந்து அல்லது உங்கள் கணினியிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.






        அவ்வளவுதான் இந்த விண்டோவை மூடிவிடலாம். இனி நீங்கள் மறைத்து வைத்த கோப்புகளை உங்கள் கணினி மட்டுமின்றி வேறு எந்த கணினியிலும் பார்க்க இயலாது. மறுபடியும், Unhide செய்ய இதே மென்பொருளை இயக்கி சரியான கடவுசொல்லை கொடுத்து,






தேவையான கோப்புறைகள்/கோப்புகளை Unhide செய்து கொள்ளலாம்.





பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும்?







          பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும்.




        இத்தகைய பென்டிரைவ்கள் (pendrives)நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும்.அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். 


இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி




        உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.




      1.  உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E) கொடுத்து (அ) MY COMPUTER செல்லவும்.




      2. அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.




      3. தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWAREஎன்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name(eg. SanDisk Curzer Blade USB Device) என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத் தேரந்தெடுக்கவும்.




      4. பிறகு கீழிருக்கும் Propertiesஎன்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.




      5. அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.




     6. அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.




      இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை கருத்துரையில் சொல்லுங்கள். 




      மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும்

 

       இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்...!

Gmail, +1s, Blogger, Contacts and Circles, Drive, Google+ Profiles, Pages and Streams, Picasa web albums, Google Voice and YouTube - கணக்குகளை உங்கள் இறப்புக்குப் பின் மாற்றலாம்! வாருங்கள்...



INACTIVE  ACCOUNT  MANAGER





         மின்னஞ்சல் பயன்படுத்தி வருபவர்கள் திடீரென இறந்து விட்டால் அவர்களின் கணக்கில் உள்ள தகவல்கள் அனைத்தையும் என்ன செய்வது எனத் தீர்மானிக்கும் வசதியை கூகிள் கொண்டு வந்திருக்கிறது.   


                Google Inactive Account Manager  என்ற இந்த வசதியின் மூலம் குறிப்பிட்ட காலம் நமது கணக்கைத் தொடர்ச்சியாக பயன்படுத்தாமல் இருந்தால் நமது கணக்கை என்ன செய்ய வேண்டும் என அமைக்கலாம்.





          இதன் படி குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் இணையத்தில் உங்கள் மின்னஞ்சல் கணக்கு பாதுகாப்பான முறையில் அழிக்கப்படும் அல்லது நீங்கள் குறிப்பிடும் நம்பகமான நபருக்கு தகவல்கள் மாற்றப்படும்.







                     
                   Notify Contacts->Add Trusted Contact ->  இந்த வசதியின் மூலம் உங்கள் கணக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால் அதிகபட்சமாக 10 பேருக்கு  Notification   செய்தி அனுப்பலாம்.   மேலும் உங்களின் கூகிள் கணக்கின்  Contacts  மற்றும் தகவல்களை அனைத்தையும் நம்பகமானவர்களுக்கு அனுப்பி பகிர்ந்து கொள்ள முடியும்.  


                உதாரணத்திற்கு உங்களுக்குப் பின் உங்கள் மனைவிக்கோ குழந்தைகளுக்கோ தகவல்களை கிடைக்கச் செய்யலாம்.




கீழ்க்கண்ட சேவைகளை அடுத்தவருக்கு அனுப்பலாம்.



+1sBloggerContacts and CirclesDriveGmailGoogle+ ProfilesPages and Streams,  Picasa web albums,  Google Voice  and  YouTube



.


                    Timeout Period ->   இதற்கான  காலமாக  3, 6, 9  மாதங்கள்,  1 வருடம்  என அமைக்கலாம்.  

                 கூகிள் இந்த வசதியை செயல்படுத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு உங்களின் மொபைல்க்கு  SMS  ஒன்றும் நீங்கள் கொடுத்திருக்கும் இரண்டாவது மின்னஞ்சல் முகவரிக்குமெயிலும் அனுப்பி தகவல் தெரிவிக்கும். உங்களிடமிருந்து பதில் வரவில்லையெனில் இந்த செயல்பாட்டினை கூகிள் செய்து விடும் 


.



         இதனைச் செயல்படுத்த Google Account Settings பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

 (அல்லது)
 
நேரடியாக கீழுள்ள சுட்டியைக் கிளிக் செய்து செல்லுங்கள். எல்லா அமைப்புகளையும் செய்து விட்டு Enable பட்டனைக் கிளிக் செய்து விடவும்.