Wednesday, 30 October 2013

இன்போஸிஸ் நிறுவனம் ரூ.215 கோடி அபராதம் செலுத்த ஒப்புதல்!


இன்போஸிஸ் நிறுவனம் அமெரிக்காவிற்கு சாப்ட்வேர் என்ஞ்னியர்களை அனுப்புவதில் விசா விதிமுறைகளை சரியாக பின்பற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டிய அமெரிக்க அரசு ரூ.215 கோடி (35 மில்லியன் டாலர்) அபராதம் விதித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் இன்போஸிஸ் நிறுவனம் ரூ.215 கோடி அபாரதம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்காவில் அந்நாட்டினரை ஒதுக்கிவிட்டு குறைவான சம்பளம் கொடுத்து வெளிநாட்டைச்சேர்ந்தவர்களை பணியில் அமர்த்துவதாக அமெரிக்க தரப்பில் இருந்து இன்போஸிஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று வல்லபாய் படேல் பிறந்த தினம்!

 

Sardar patel (cropped).jpg
31 October 1875 – 15 December 1950 (aged 75)

தற்போது நாட்டில் 28 மாநிலங்கள்,7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இது, இவர்


இல்லையென்றால் இருந்திருக்காது.


சிதறுண்டு கிடந்தஇந்தியாவை ஒரே குடையின் கீழ்
கொண்டு வந்தவர். அவர் தான் இந்தியாவின் “இரும்பு மனிதர்’ என அழைக்கப்படும் சர்தார்
வல்லபாய் படேல்.


இன்று இவரது பிறந்ததினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் இதய நலம் தாய்மார்கள் கையில்!


உலகம் எவ்வளவு வேகமாக மாறிவருகிறதோ அதற்கு ஏற்ப வாழ்க்கை முறையும் மாறிவருகிறது. உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த காலத்திலும் நோய்கள் இருந்தன. ஆனால் அவை பெரும்பாலும் இயற்கை வைத்தியத்துக்கு கட்டுப்பட்டன.

தற்போது பலர் செய்யும் வேலையை ஒரு எந்திரமே செய்து விடுகிறது. சிந்திக்கும் விஷயங்களுக்கு கம்ப்யூட்டர் இல்லாமல் காரியம் நடக்காது என்ற நிலை உருவாகிவிட்டது. வீடியோ கேம் முன்பு உட்கார்ந்து வீணாகும் நேரம்பற்றி கவலைப்படாமலும் உடல் நலம் பாதிக்கப்படுவது தெரியாமலும் குழந்தைகள் உட்கார்ந்து இருக்கிறார்கள்.

குழந்தை நன்றாக சாப்பிடுவதும், கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதும் தான் பெற்றோரின் கடமை என்று நினைக்கிறார்கள். குழந்தையை உடல் நலத்துடன் வளர்க்க வேண்டும் என்பது பற்றி யாரும் சிந்திப்பது இல்லை.

குழந்தை கொழு கொழு என்று இருக்க வேண்டும் என்றால் நன்றாக சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று தான் பெரும்பாலான தாய்மார்கள் நினைக்கிறார்கள். அளவுக்கு அதிகமாக உணவு கொடுப்பதால், குழந்தை சராசரி எடையை விட உடல் பருமனாக வளர்கிறது.

இது குறைந்த வயதிலேயே இதயத்தை பாதிக்கும் நிலையை உருவாக்குகிறது என்கிறார் இதய நல மருத்துவர் பிரியா சொக்கலிங்கம். அவர் சொல்வது இதுதான்... இந்த காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்கிறார்கள்.

தாய்-தந்தை இருவருமே சம்பாதிப்பதால் குழந்தை மீது அளவுக்கு அதிகமாக பாசத்தை பொழிவதாக நினைத்துக் கொண்டு வித விதமான உணவு வகைகளை வாங்கி கொடுக்கிறார்கள். பச்சிளம் குழந்தைக்கு முழுமையான தாய்ப்பால் கொடுத்தாலே போதுமானது என்பது பற்றி சிந்திப்பதே இல்லை.

வளரவளர தேவையான அளவு சத்துள்ள உணவுகளை கொடுக்காமல் கொழுப்பு மற்றும் ருசிக்காக சேர்க்கப்பட்ட ரசாயன உணவு வகைகளை கொடுக்கிறார்கள். இதனால் சிறு வயதிலே குழந்தைகளின் உடல் எடை அதிகமாகி விடுகிறது.

20 வயது ஆவதற்குள் சர்க்கரை வியாதி, ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வது, இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பலவித நோய்கள் ஏற்பட இது காரணமாகி விடுகிறது. குழந்தைகள் போதிய உடற்பயிற்சி இல்லாமல் அதிக உணவு உண்பதால், பிற்காலத்தில் அதிக உணவு சாப்பிடும் மனநிலை நீடிக்கும்.

இதனால் உடல் எடை பலமடங்கு அதிகரிக்கும். 30 வயதிலேயே மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நிலை உருவாகலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். ஆஸ்துமா வருவதற்கும் வாய்ப்பு உருவாகும். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் போவதால் பேக்டீரியா, வைரஸ் போன்றநோய் கிருமிகள் எளிதில் தாக்க இடம் கொடுத்து விடும்.

எனவே, சிறுவயது முதலே குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அளவில் சத்தான உணவுகளை மருத்துவர்களின் ஆலோசனைப்படி கொடுக்க வேண்டும். இயற்கை உணவுகளை கொடுக்க பழக்க வேண்டும். வெளியில் இருந்து வாங்கும் உணவுகளை, டின்னில் அடைத்து வைத்திருக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

சரிவிகித உணவை கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட வயது வரை தாய்ப் பால் கொடுத்தால், குழந்தை உடல் பருமன் ஆகாமல் ஆரோக்கியமாக வளரும். சமையல் செய்யும் பெண்கள் கணவர், குழந்தையுடன் தானும் நல்ல உடல் நலத்துடன் இருக்க உணவில் எண்ணெய் சத்து அவசியம்.

இதற்கு நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் எண்ணெய் வகைளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தினமும் உணவில் 4 அல்லது 5 தேக்கரண்டி எண்ணெய் பயன்படுத்த வேண்டியது அவசியம். எண்ணெய்யை ஒரேயடியாக தவிர்க்க கூடாது. ஒரே எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது.

நல்லெண்ணை, சூரிய காந்தி எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். கொழுப்பு சத்து அதிகம் உள்ள நெய், தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

பழைய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உணவில் உப்பு குறைவாக சேர்க்க வேண்டும் பயன்படுத்தும் உப்பின் அளவு 2 கிராமுக்குள் இருக்க வேண்டும். உப்பு அதிகம் சேர்ப்பது ரத்த கொதிப்பு ஏற்பட காரணமாகிவிடும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.

இனிப்புக்காக சர்க்கரை (சீனி)க்குப் பதில் தேன், வெல்லம் போன்றவற்றை குறைந்த அளவு சேர்ப்பது நல்லது. இளநீரில் உள்ள தேங்காய் வழுக்கை சாப்பிடலாம். பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம். வளரும் குழந்தைகளுக்கு தேவையான அளவு சரிவிகித உணவு, கொடுப்பதுடன் ஓடி விளையாடுவது, சைக்கிள் ஒடுவது நீச்சல் அடிப்பது போன்ற உடற்பயிற்சிகள் செய்யவும் ஊக்குவிக்க வேண்டும்.

அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, சோம்பேறித்தனமாக இருப்பது, கொழுப்பு மிகுந்த உணவு சாப்பிடுவது, சாப்பிடும் உணவுக்கு தகுந்த உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் உடல் எடை அதிகமாகும். ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படலாம், ரத்த குழாய் சுருங்கலாம்.

இதனால் ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதற்காக இதயத்தின் வேலை அதிகமாகும்.இதயம் பாதிக்கப்படும் நிலை உருவாகும். ஆரோக்கியமாக உணவுகளை உண்பதற்கு தாய்மார்கள் குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

இதயம் சிறப்பாக இயங்கும். சரியான உணவு, உடற்பயிற்சி மூலம் இதயத்தின் வேலைப்பளு குறையும் இதயம் பாதுகாக்கப்படும். இளம் வயதில் மாரடைப்பை சந்திக்கும் அபாயம் வராது.  குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தையும், இதயத்தையும் பாதுகாப்பது தாய்மார்களின் கையில் தான் இருக்கிறது.

இதை ஒவ்வொரு தாயும்- தந்தையும் மனதில் கொண்டு குழந்தைகளை வளருங்கள். உங்கள் பாசம் உங்கள் குழந்தையின் இதயத்துக்கு பலமும் பாதுகாப்பும் அளிப்பதாக இருக்கட்டும். உங்கள் குழந்தையின் நலமான ஆரோக்கிய வாழ்வு உங்கள் ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும்.

மனதை சமநிலையில் வைக்க பழகுங்கள். எந்த பிரச்சினையையும் பதட்டம் இல்லாமல் அணுகுங்கள். உங்கள் குழந்தையை மகிழ்ச்சியான மனநிலையில் வளரச் செய்யுங்கள் நீங்களும் உங்கள் வாரிசுகளும் ஒரு நூற்றாண்டை சுலபமாக ஓடி கடக்க முடியும்.

சாப்பிடும் வழிமுறைகள் :

சாப்பாட்டில் வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம், மஞ்சள்தூள், வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது உடல் நலத்துக்கு நல்லது. சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆன பிறகு சாப்பிட்டால் நோய் வராது என்பது வள்ளுவர் வாக்கு. இதை நாம் கடைபிடித்தால் உடல் நலம் பேணலாம். முழுவயிறும் நிரம்பும் அளவுக்கு சாப்பிடக்கூடாது.

அரை வயிறு உணவு-பழவகைகள் சாப்பிட வேண்டும். கால்வயிறு காலியாக இருக்க வேண்டும். வேகமாக சாப்பிடக் கூடாது. காலையில் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. சாப்பிடும் போது சிந்தனை சாப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும். சாப்பாட்டில் கண்டிப்பாக காய்கறி பழங்கள் இடம் பெற வேண்டும்.

இரவு தூங்குவதற்கு முன்பு வயிறு நிறைய சாப்பிடக்கூடாது. இதனால் இதயத்தின் பழுகுறையும், சீராக செயல்படும். சாப்பிடும்போது புரை ஏறிவிட்டால், யாரோ நினைக்கிறார்கள் என்று சொல்வது தவறு. சாப்பாட்டில் கவனம் இல்லாமல் வேறு எதையோ பற்றி நினைப்பதால் அல்லது பேசுவதால்தான் புரை ஏறுகிறது.

புரை ஏறினால் தலையில் தட்டக் கூடாது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தலையில் தட்டுவதற்கு பதிலாக குனியச் சொல்லி முதுகில் தட்டினால் தொண்டையில் சிக்கிய உணவு வெளியேறி விடும். இரவு தூங்குதவற்கு முன்பு ஆப்பிள் பழம், ஆடை நீக்கிய பால் குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.

அதிக இனிப்பு ஆபத்து :

இனிப்பு அதிகம் உள்ள உணவு வகைளை சாப்பிட்டால் ரத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவை சரி செய்ய மிகுந்த உடற்பயிற்சி தேவைப்படும். ஒரு குளோப் ஜாமூன் சாப்பிட்டால் ரத்தத்தில் கலக்கும் சர்க்கரையை சரிசெய்ய 4 கிலோமீட்டர் நடக்க வேண்டும். ஒரு ஜஸ்கீரிம் சாப்பிட்டால் 3 கி.மீ ஓட வேண்டும். இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடாமல் தவிர்ப்பது உடல் நலத்துக்கு நல்லது.

குழந்தையுடன் விளையாடுங்கள் :

தாய்மார்கள் உடற்பயிற்சிக்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டியது இல்லை. குழந்தையுடன் விளையாடுங்கள் அது உங்களுக்கும், குழந்தைகளுக்கும் நல்ல உடற்பயிற்சி. இயற்கையான சூழ்நிலையில் குழந்தையுடன் நடக்கலாம். இளம் வயது பெண்கள் ஜாக்கிங் செய்யலாம். மாரடைப்பு வராமல் தவிர்க்க இதுவும் ஒரு வழி.

உடல் பருமன் ஆன பெண்கள் உடல் எடையை குறைக்க சாப்பிடாமல் இருக்க கூடாது. மருந்து சாப்பிட்டு உடலை குறைப்பது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்து பெண்கள் உடலை குறைக்க முயற்சி செய்வது தற்காலிக பலனைத் தான் கொடுக்கும். பயிற்சி செய்வதை விட்டு விட்டால் மீண்டும் உடல் எடை அதிகரித்து விடும்.

இயற்கையான உடற்பயிற்சி தான் நிரந்தர பயன்தரும். காலையில் நடக்க நேரம் இல்லையென்றால் இரவு சாப்பிட்ட பின்பு ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்யலாம். மாடி வீட்டில் குடியிருப்பவர்கள் பலமுறை படி ஏறி இறங்குவதும் நல்ல உடல் பயிற்சிதான்.

இதனால் ரத்த ஓட்டம் சீராகும். மூட்டு வலி இருப்பவர்கள் வேகமாக ஓடக்கூடாது. மூட்டு வலியை போக்க நீந்துவது நல்லது. நீந்த தெரியாதவர்கள் இடுப்பு அளவு தண்ணீரில் இறங்கி நடை பயிற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 

திரையுலகில் சரித்திர, புராண படங்கள் மீண்டும் ஆதிக்கம்!

திரையுலகில் சரித்திர, புராண படங்கள் மீண்டும் ஆதிக்கம்
திரையுலகில் சரித்திர புராண படங்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க நடிகர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ரஜினியின் கோச்சடையானும், செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் படமும் இதே கதையம்சத்தில் வருகின்றன. தமிழ், தெலுங்கில் அனுஷ்கா நடிப்பில் தயாராகும் ருத்ரமாதேவி படமும் சரித்திர கதையம்சம் கொண்டது.

கோச்சடையான் படத்தில் ரஜினி மன்னன், இளவரசன் என இரு வேடங்களில் வருகிறார். புராண காலத்தில் சிவ பக்தனாக வாழ்ந்த ஒரு அரசனை பற்றிய கதையே இப்படம். மன்னர் காலத்து ஆடை அணிகலன்கள், யுத்த கருவிகள் இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யாவின் கெட்டப் காட்டுவாசியை நினைவூட்டுவதுபோல் அமைந்துள்ளது. அனுஷ்கா வாள் சண்டையிடும் வீரப்பெண் போல் தோற்றமளிக்கிறார். ஏற்கனவே செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தையும் இதே சாயலில்தான் எடுத்து ரிலீஸ் செய்தார்.

ருத்ரமாதேவி படத்தில் அனுஷ்கா மகாராணி வேடத்தில் வருகிறார். சரித்திர காலத்தில் வீரதிரத்தோடு வாழ்ந்த ஒரு ராணியை பற்றிய கதையே இப்படம். ஏற்கனவே அருந்ததி படம் அனுஷ்காவுக்கு பெயர் வாங்கி கொடுத்ததால் இப்படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

தெலுங்கில் தயாரான மகதீரா சரித்திர படமும் நயன்தாரா நடித்த ஸ்ரீராம ராஜ்ஜியம் புராண படமும் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இப்படங்கள் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது.

பிருதிவிராஜ், பிரபுதேவா, ஜெனிலியா, நித்யாமேனன் நடித்த உருமி படமும் சரித்திர கால கதையம்சம் கொண்டது. இப்படம் தமிழ், மலையாளத்தில் வெளியானது. இது போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில், வரவேற்பு ஏற்பட்டு உள்ளதால் நிறைய படங்கள் இனிமேல் இதே கதைசம்சத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமலின் மருதநாயகம் படத்தையும், ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ டிராப் ஆனது?

சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ டிராப் ஆனது?
நடிகர் சிம்பு ‘வாலு’, ‘வேட்டைமன்னன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களையும் நீண்டகாலமாக கடத்தி வந்த சிம்பு சமீபகாலமாக ‘வாலு’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, கிட்டத்தட்ட முடித்துக் கொடுத்துவிட்டார். இன்னும் ஒரேயொரு பாடல் காட்சி மட்டும் எடுக்க வேண்டி உள்ளது. படத்தை டிசம்பரில் வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படத்தைத் தொடர்ந்து ஒப்புக்கொண்ட ‘வேட்டை மன்னன்’ படம் குறித்து சிம்பு வாய் திறக்காமலே உள்ளார். இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடிக்கிறார். புதுமுக இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.

இந்நிலையில், சிம்பு பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்நிலையில், பொறுத்திருந்த பார்த்த நெல்சன் தன்னுடைய அடுத்தப்படத்துக்கு தயாராகிவிட்டார். ஹாரர் படத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்ட இவர் அடுத்த படத்தை இயக்க ரெடியாக வருகிறார். விரைவில் நெல்சன் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குழந்தைகள் உலகம்.....தொடர் பதிவு




இன்று குழந்தைகள் ..அந்த வயதில் நாம் இருந்ததைவிட புத்திசாலியாகத்தான் இருக்கிறார்கள்.அவர்களை வழி நடத்திச் செல்ல பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியவைகளே அதிகம்.ஆகவே இத் தொடர் பதிவில் பெற்றோர்கள் பற்றியே எழுதியுள்ளேன்.

மழலையர் உலகம்.....

ஆஹா..சூது..வாது இல்லாத உலகம்...மழலைச்சொல்..இசையைப்போல மனதை மயக்கக்கூடியது...அதனால் தான் வள்ளுவனும்

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
                       -   என்றான்......

குழந்தைகள் மனம் நாம் சொல்வதை ' பளீச் ' என பிடித்துக் கொள்ளும்...பசுமரத்தாணிப்போல ...
அதனால் தான் பெரியவர்கள் குழந்தைகளிடம் பார்த்து பேசவேண்டும்.

குழந்தையிடம் 'பொய் பேசக்கூடாது' என்று அறிவுரை சொல்லிவிட்டு ...நாம் வீட்டிலிருந்தபடியே நம்மைத் தேடி வருபவரிடம் ' இல்லை' என்று சொல்லுமாறு குழந்தையைப் பணித்தால்...அந்தக் குழந்தைக்கு நம்மிடம் இருக்கும் மரியாதையும் போகும்..அதுவும் பொய் சொல்ல ஆரம்பிக்கும்.

தனியார் சேனல் ஒன்றில் சூப்பர் சிங்கர் போட்டிக்கு வரும் குழந்தைகளில் எத்தனைப் பேர் உண்மையில் மனமுவந்து வருகிறார்கள்.பெற்றோர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வருகிறார்கள்...அதற்கு குழந்தைகளை எவ்வளவு பாடுபடுத்துகிறார்கள் என்பதை ..அக்குழந்தை தேர்வு ஆகவில்லையெனில் கண்டிக்கும் பெற்றோரையும் காணமுடிகிறது.

ஆனால் அதே சமயம்..என்னமாய் சுருதி பிசகாமல் பாடுகின்றனர் அவர்கள்...நம்மால் முடியாததை அவர்கள் சாதித்தை ஒவ்வொரு பெற்றோர் முகமும் காட்டியது.

குழந்தைகள் திறமை எதில் உள்ளதோ அதில் ஈடுபடுத்தவேண்டும்.அதை விடுத்து நாம் விரும்பும் துறையில் அவைகளை திசை திருப்பக்கூடாது.

குழந்தையின் மீது பெற்றோர் முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.உங்கள் குழந்தை உங்களுக்கு உயிர் என அக்குழந்தை உணருமாறு நடந்து கொள்ளவேண்டும்.

குழந்தையின் சாதனைகளை,திறமைகளை உடனுக்குடன் பாராட்டவேண்டும்.

சின்ன சின்ன தவறுகள் குற்றமல்ல என்று அவர்களுக்கு உணர்த்தி திருத்தவேண்டும்.

குழந்தைகளின் ரசனைகள் ஆச்சிரியமானவை.அவர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே தங்களால் எது முடியும் எது முடியாது என புரிந்து கொள்கிறார்கள்.

அவர்களின் திறனை வளர்க்க வாய்ப்புகளை பெற்றோர் ஏற்படுத்தித் தரவேண்டும்.

அவர்கள் பின்னால் என்றும் நின்று பொறுமையுடன் இருந்து அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

அவர்கள் வேலையை அவர்களே செய்து கொள்ளும் திறனை பெற்றோர்கள் அவர்களிடம் ஏற்படுத்தவேண்டும்.

இதைச்செய்...உனக்கு அதை வாங்கித்தருகிறேன் என்றெல்லாம் சொல்லி வளர்க்காதீர்கள்...இப்பழக்கம்தான் பின்னாளில் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க ஆதாயம் உள்ளதா என்று அவர்களை நினைக்க வைக்கிறது.

இன்றைய குழந்தைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக பரவலாக ஒரு செய்தி உள்ளது.அவர்களிடம் பேசி அதை மாற்ற வேண்டியது பெற்றோர் கடமை.
ஆதரவாக பேசி அவர்கள் மன அழுத்தத்தை போக்குவதோடு அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

எப்போதும் குழந்தைகளை குறை சொல்லிக்கொண்டே இருக்கக்கூடாது...குழந்தை செய்யும் செயலை பாராட்டுங்கள்.இதனால் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை அவர்களிடம் அகலும்.

நம் குழந்தையை...அவையில் முந்திருப்பச் செய்ய வேண்டியது பெற்றோர் கடமை.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

அப்படி தந்தை செய்தால் மகனும்(மகளும்)

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்

என்பதற்கேற்ப நடப்பார்கள்.

அப்போதுதான் அவனை(ளை)ப் பெற்ற தாயும்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோர் எனக்கேட்ட தாய்

என்பதற்கேற்ப மகிழ்ச்சியடைவாள்.

ஒரு ஜோக்:

குழந்தை: (வீட்டிற்கு வரும் விருந்தினரைப்பார்த்து) அம்மா..
          நேற்று இந்த மாமாவுக்கு இரட்டை நாக்கு என்று
           சொன்னே'''ஆனா ஒரு நாக்குத்தானே இருக்கு....
(மேற் சொன்ன துணுக்கில் தவறு யாருடையது?..)

அணைப்பு

அலுவலகத்திலிருந்து
அம்மா வருவதை
எதிர்பார்த்த குழந்தை..
அலுப்பாய் வந்த
அம்மாவிடம் திட்டும்,
ஆத்திரத்துடன் வந்த
அப்பாவிடம்
அடியும் வாங்கி
அழுதபடியே - பாசத்துடன்
அணைத்தது..தன்
இளவரசி சிண்ட்ரெல்லாவை...

ஆச்சரியப்படுத்தும் ஆக்ரா கோட்டை - சுற்றுலாத்தலங்கள்!

ஆச்சரியப்படுத்தும் ஆக்ரா கோட்டை

ஆச்சரியப்படுத்தும் ஆக்ரா கோட்டை

"பளிங்கினால் ஒரு மாளிகை...பவளத்தால் மணிமண்டபம், உயரத்தில் ஒரு கோபுரம்...உன்னை அழைக்குது வா..." என்ற பாடலை முணுமுணுப்-பவரா நீங்கள்? அப்படியென்றால் நீங்கள் நின்று பாடவேண்டிய சரியான இடம் ஆக்ரா கோட்டைதான். இது ஒரு அரண்மனை நகரம். இங்கு சுமார் 100ஏக்கர் நிலப்பரப்பில் எழுந்து நிற்கும் கலைப்பொக்கிஷங்கள் வேறெங்கும் காணக்கிடைக்காதவை.

வரலாற்றின் வளமான பக்கங்கள்பல மொகலாய மன்னர்களின் வசந்தமான வாழ்க்கையால் நிரப்பப்பட்டவை. 

அவர்களது வாழ்க்கைக்கும், அப்போது நடந்த பல ஆச்சரியங்களுக்கும் சான்றாக திகழ்ந்து கொண்டிருக்கிறது இந்தக்கோட்டை. யமுனை ஆற்றின் கரையோரத்தில் தாஜ்மகாலில் இருந்து சுமார் இரண்டரை கி.மீ தொலைவில் அமைந்துள்ள இது, ஆக்ராவின் செங்கோட்டை, லால் கிலா, போர்ட் ரூய்ஜ் என்றும் அழைக்கப்படுகிறது. அப்போது நாட்டின் மிகப்-பெரிய கஜானா, நாணயசாலையை இந்தக் கோட்டை கொண்டிருந்தது. பாபர், ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான், அவுரங்கசீப் ஆகியோர் இங்குதான் வசித்துள்ளனர்.

முதலில் ராஜபுதனத்து சௌகான்கள் வசம் கோட்டை இருந்துள்ளது.  அப்போது இந்த இடம் பஸல்கார், படல்கார் (badalgarh) என்றழைக்-கப்பட்டுள்ளது.  டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு தலைநகரை மாற்றி இங்கு வாழ்ந்த முதல் டெல்லிசுல்தான் சிக்கந்தர் லோடி (1487-1517). இதனால் இது நாட்டின் இரண்டாவது தலைநகராகக் கருதப்பட்டுள்ளது.

சிக்கந்தர் லோடிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவரது மகன் இப்ராகிம் லோடி சுமார் 9ஆண்டுகள், அதாவது 1526ல் பானிபட் போரில் கொல்லப்படும் வரை இங்குதான் வாழ்ந்துள்ளார். இவரது காலத்தில்தான் இங்கு புதிய அரண்மனைகளும், மசூதிகளும், கிணறுகளும் வெட்டப்பட்டுள்ளன.

 இந்தநிலையில், பானிபட் போரில் வெற்றிபெற்ற மொகலாயர்கள் இந்த கோட்டையையும் கைப்பற்றினர். இங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த பெரும் செல்வங்கள் அவர்கள் வசமானது. இதில் பிரபலமான கோஹினூர் வைரமும் அடங்கும்.

மொகலாயர் வசம் வந்த பிறகு கோட்டை சீரமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான சுற்றுச்சுவரை பாபர் எழுப்பினார். பாபரின் மகன் ஹுமாயூன் 1530ம் ஆண்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். பிள்ளைப்பருவத்தில் தண்ணீரில் விழுந்த ஹுமாயூனை, நீர்சுமக்கும் தொழிலாளியான நஜாம் என்பவர் காப்பாற்றியுள்ளார். இளவரசரின் உயிரைக் காப்பாற்றிய நஜாம், அரைநாள் மன்னராக ஆக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார். அந்தச் சம்பவம் நடந்ததும் இங்குதான்.

1558க்கு பிறகு ஆக்ராவுக்கு வந்த அக்பர் இந்தக் கோட்டையை புனரமைக்க உத்தரவிட்டுள்ளார். தினமும் சுமார் 4ஆயிரம் கட்டிடக்கலைஞர்கள் பணியாற்றி 8ஆண்டுகளில் (1565-1573) புதிய கோட்டையை கட்டி முடித்துள்ளனர். மண்டபங்கள், மசூதிகள், மாடமாளிகைகள் என அட்டகாசப்படுத்தப்பட்டது அக்பர் காலத்தில்தான். அக்பரின் முக்கிய அமைச்சரும், அக்பர்நாமாவை எழுதியவருமான அபுல்பஸல் இந்தக்கோட்டைக்குள் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டதாக குறிப்பெழுதியிருக்கிறார்.

அன்றைய கட்டடங்கள் இப்போது இல்லை. அக்பர் கட்டியவற்றில் பல கட்டிடங்களை பளிங்கு மாளிகைகள் அமைப்பதற்காக ஷாஜகான் அகற்றியுள்ளார். ஆங்கிலேயர் வசம் கோட்டை வந்த பிறகும் சில கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது.

ரசனைமிக்க ஷாஜகான் காலத்தில்தான் இங்கு பளபள பளிங்கு கட்டிடங்கள் பல எழுப்பப்பட்டுள்ளன. இவற்றில் மோத்தி மஸ்ஜித், நஜினா மஸ்ஜித், மினா மஸ்ஜித் போன்ற மசூதிகள் குறிப்பிடத்தக்கவை. அதே நேரத்தில் ஷாஜகானை அவரது மகன் அவுரங்கசீப் சிறைவைத்த இடமும் இந்த கோட்டைதான். எட்டு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்த ஷாஜகான் மரணமடைந்த பிறகு அவரது உடல் அருகில் உள்ள தாஜ்மகாலுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஷாஜகானுக்குப் பிறகு கோட்டை களையிழந்தது. இப்படியாக பல வரலாறுகளில் வலம் வந்து கொண்டிருந்த கோட்டை, 1803ம் ஆண்டில் ஆங்கிலேயர் வசம் வந்தது.
 
ஆக்ரா கோட்டைக்குள் திராட்சைத் தோட்டம் என்றழைக்கப்படும் ஆங்குரி பாக், பொதுமக்களிடம் குறைகள் கேட்கும் திவான்-இ-ஆம் மண்டபம், பிறநாட்டு மன்னர்கள் மற்றும் பிரபலங்களை வரவேற்கும் திவான்-இ-காஸ் மண்டபம், மாட மாளிகையான கோல்டன் பெவிலியன்ஸ், பளபள பளிங்கு மாளிகைகளான ஜஹாங்கிர் மஹால், காஸ் மஹால், மச்சி பவன், முஸம்மான் பர்ஜ், மினா மஸ்ஜித், பியர்ல் மசூதி, நஜினா மஸ்ஜித், பெண்கள் மட்டும் ஷாப்பிங் செல்வதற்காக கட்டப்பட்ட செனானா மினா பஜார், அரசவைக் கலைஞர்கள் இசைநிகழ்ச்சி நடத்தும் நவ்பத் கானா, மன்னரின் அந்தப்புரமான ரங்மஹால், ஷாஜகானி மஹால், காலத்தால் அழிக்க முடியாத கண்ணாடி வேலைப்பாடுகள் நிறைந்த அரச ஒப்பனைக்கூடமான ஸீஸ் மகால் போன்றவை இன்றளவும் கலைப்பொக்கிஷங்களாக காட்சி-யளித்துக் கொண்டிருக்கின்றன.

கோட்டைக்குள் செல்ல கட்டணம் உண்டு. இந்திய குடிமக்களுக்கும் SAARC, BIMSTEC அமைப்பின் உறுப்புநாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கும் நுழைவுக்கட்டணம் நபருக்கு 10ரூபாய்தான். பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஐந்து அமெரிக்க டாலர் அல்லது ரூபாய் 250 கட்டணமாகும்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஆக்ரா கோட்டை, டெல்லியில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ளது. ஆக்ராவில் விமான நிலையமும்,  ரயில்நிலையமும் அமைந்துள்ளன. யுனெஸ்கோவின் பாராம்பரியச் சின்னங்கள் பட்டியலில் ஆக்ரா கோட்டை 1983ல் இடம் பெற்றது.

இது நம்ம தலைவர் பத்த வெச்ச ராக்கெட்!

சரக்கு உள்ளே போயிட்டா, தலைவர் பண்ற
 அழிச்சாட்டியம் தாங்க முடியல…
-
என்ன பண்றார்?
-
பட்டாசு கடையில போய்ஊறுகா வெடி
 இருக்கான்னு கேட்குறார்..!
-
——————————————————————–
-
இது நம்ம தலைவர் பத்த வெச்ச ராக்கெட்
 வெடின்னு எப்படிச் சொல்றே?
-
கரெக்டா புறம்போக்கு நிலத்துல போய்
 விழுந்திருக்கே…!
-
——————————————————
-
என்னதான் பட்டாசு கடைக்காரர் தேர்தல்ல நின்னாலும்
 அவருக்கும் வோட்டுதான் விழும், வேட்டு விழாது..!

சத்தான மாவிலே அத்தனையும் செய்யலாம் செம ருசியாக!

சத்துமாவு தயார் செய்ய… 


தானியங்கள் அனைத்தும் ஒரே அளவு எடுத்துக்கொள்ளவும். கம்பு, கேப்பை (கேழ்வரகு), வெள்ளைச் சோளம், தினை, கோதுமை, புழுங்கலரிசி, பச்சரிசி சிறு தானியங்கள் அனைத்தையும் தனித்தனியாக மண் நீக்கி, கழுவி, வெயிலில் உலர்த்தி, வறுத்து ஆற வைத்து, ஒன்றாகக் கலந்து மில்லில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் பொட்டுக்கடலை, நிலக்கடலையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இந்த மாவு சத்துமாவு கஞ்சிக்கு மட்டும் பயன்படுத்த என்றால், இதனுடன் நாலுக்கு ஒரு பங்கு என முந்திரி, பாதாம் பருப்புகளும், வாசனைக்குத் தேவையெனில் சிறிது ஏலக்காயும் சேர்க்கலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள மற்ற வகை பதார்த்தங்கள் செய்ய மு.பருப்பு, பா.பருப்பு, ஏலக்காய் சேர்க்க வேண்டியதில்லை.

1. சத்துமாவு கஞ்சி 



என்னென்ன தேவை?

சத்துமாவு, பனங்கற்கண்டு அல்லது வெல்லம், பால்.
எப்படிச் செய்வது?

சத்துமாவில், தூசி நீக்கிய வெல்லம் அல்லது பனங்கற்கண்டு தேவையான அளவு சேர்த்து, மாவு அளவில் 4 மடங்கு நீர் சேர்த்துக் கிளறவும். நீர்க்க இருந்தது கஞ்சி போல கெட்டியாகும் போது, தேவையான பால் விட்டு லேசாக கிளறி இறக்கவும். ஹார்லிக்ஸ் போல சூடாகக் குடிக்கலாம்.

* கூல் கஞ்சி: ஆற வைத்து ஃபிரிட்ஜில் வைத்தும் கூல் கஞ்சியாக ஸ்பூனில் எடுத்தும் சாப்பிடலாம்!

2. சத்துமாவு உருண்டை 

என்னென்ன தேவை?

சத்துமாவு, வெல்லம், நெய் அல்லது நல்லெண்ணெய், ஏலக்காய் தூள் சிறிது.
எப்படிச் செய்வது?

இதை அடுப்பில் வைக்க வேண்டியதில்லை. மாவை வறுத்து அரைத்திருப்பதால் அப்படியே சாப்பிடலாம். பச்சை வாடை தெரியாது.
வெல்லத்தில் நீர்விட்டு தூசு எடுத்துவிட்டு சத்து மாவு, ஏலக்காய் தூள் சேர்க்கவும். நன்றாக கெட்டியாகப் பிசைந்து சிறிதளவு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து உருண்டை பிடிக்கவும்.

3. புட்டு

என்னென்ன தேவை?

சத்துமாவு, தேய்காய்த் துருவல், லேசாக வறுத்த வெள்ளை எள்.
எப்படிச் செய்வது?

சிறிது வெந்நீரை லேசாக மாவில் தெளித்து உதிரியாக பிசறிக்கொள்ளவும். வெள்ளை எள்ளை லேசாக வறுத்துக் கொள்ளவும். இட்லி தட்டில் வெந்நீர் விட்டு உதிரியாகப் பிசைந்து வைத்த மாவை வைக்கவும். தேங்காய்த் துருவலையும், வறுத்த எள்ளையும் மாவின் மேல் போட்டு வேக வைக்கவும்.

இறந்தும் வாழ்கிறார்கள் பொதுநலவாதிகள்..!


உறவுகள் மட்டுமல்ல
 ஊரும் மரணத்திற்கு அழுதால்
 வாழ்வாங்கு வாழ்ந்துள்ளார் !
-
—————–
-
இறப்பு இல்லை
 இறந்தும் வாழ்கிறார்கள்
 பொதுநலவாதிகள் !
-
——————
-
வராது நோய்
 பசித்த பின்
 புசித்தால் !
-
———————
-
உச்சரிக்க வேண்டாம்
 முன்னேற்றத்தின் எதிரிகள்
 முடியாது தெரியாது நடக்காது !
-
———————-
 -
நாளை என்று
 நாளைத் தள்ளிட
 நாள் உன்னைத் தள்ளும் !
-
——————
-
உடலை உருக்கும்
 உருவமில்லா நோய்
 கவலை !
-
——————–
-பெறுவதை விட
 கொடுப்பதே இன்பம்
 பொதுநலம் !
பெறுவதை விட
 கொடுப்பதே இன்பம்
 பொதுநலம் !
-

உலகில் உள்ள சில விசித்திரமான அடிமைத்தனங்கள்!!!

உலகில் உள்ளோர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அடிமைத்தனங்கள் இருக்கும். அதில் அடிமைத்தனம் என்று சொல்லும் போமு, பெரும்பாலும் அனைவரது நினைவுக்கும் வருவது புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல், வீடியோ கேம்ஸ் விளையாடுதல் போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் உலகில் இன்னும் சில விசித்திரமான, அதிசயப்படக்கூடிய வகையில் சில அடிமைத்தனங்களும் உள்ளன.

அவற்றில் சிலவற்றைக் கேட்டால், அருவெறுப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கும். ஆனால் அவற்றையும் மக்கள் அன்றாடம் மேற்கொள்கின்றனர். மேலும் அத்தகைய அடிமைத்தனத்தால், இத்தனை நாட்கள் உயிர் வாழ்கின்றனரா என்று சற்று யோசித்தால், ஆச்சரியப்படக்கூடிய வகையில் தான் இருக்கும்.

இப்போது அவற்றில் அந்த மாதிரியான சில விசித்திரமான அடிமைத்தனங்களைப் பற்றி கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து பாருங்களேன்...

சிறுநீர் அடிமை

கேர்ரி என்பவருக்கு சிறுநீரின் சுவை மிகவும் பிடித்துவிட்டது. எனவே அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக, தனது சொந்த சிறுநீரில் சுமார் 900 கேலன்களை குடித்துள்ளார்.

கார் அடிமை

அனைவருக்குமே கார் என்றால் மிகவும் பிடிக்கும். மேலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கார் பிடிக்கும். அந்த வகையில் நதானியேல் என்பவர், தனது சிவப்பு நிற 1998 மான்டே கார்லோ என்ற காருக்கு சேஸ் என்று பெயரிட்டு, தனது வாழ்க்கையின் அன்பு கிடைத்துவிட்டது என்று அதனுடன் வாழ்கிறார். மேலும் அவர் அந்த கார் வாங்கிய தினத்தை அதற்கான பிறந்தநாளாக கருதி, அதற்கு பரிசுகளை வாங்கி மகிழ்வார்.
 
பூனை அடிமை

43 வயது பெண்மணியான லிசா என்பவர், தனது செல்லப்பிராணியான பூனையின் மயிர் சுவைக்கு அடிமையாக உள்ளார். மேலும் இவர் தனது சொந்த பூனையின் மயிரை மட்டுமின்றி, எந்த ஒரு பூனையின் மயிரையும் சாப்பிடுவார்.

இரத்த அடிமை

உண்மையிலேயே இரத்தக்காட்டேரியைப் பார்த்திருக்கிறீர்களா? ஆம், இரத்தத்திற்கு அடிமையாக உள்ளவர்கள் உண்டு. அதிலும் 29 வயதான மிச்செல் என்னும் பெண், மனித இரத்தம் மற்றும் பன்றியின் இரத்தத்தை கடந்த 15 ஆண்டுகளாக குடித்து வருகிறார்.

அழுக்கு அடிமை


இதுவும் வித்தியாசமான ஒரு அடிமைத்தனம் தான். அதிலும் ஹெய்டி சேரிகளில் வாழும் மக்கள், தினமும் அழுக்குகளை தண்ணீரில் கலந்து குடித்து வருகிறார்.

இறுதிச்சடங்கு அடிமை

என் புரியவில்லையா? சிலருக்கு மரண நிகழ்ச்சியில் பங்கேற்கும் பழக்கம் இருக்கும். அதில் 42 வயதான லூயிஸ் ஸ்குவாரிஸி என்பவர், கடந்த 20 ஆண்டுகளாக, அவர் வசிக்கும் பகுதியில் நடக்கும் அனைத்து இறுதிச்சடங்கிலும் தவறாமல் கலந்து கொள்கிறார். மேலும் இந்த மாதிரியான விருப்பம் உள்ளவர்களும் இவ்வுலகில் உண்டு

ஐஸ் அடிமை

ஐஸ் கட்டிகளை சாப்பிடும் பழக்கம் சிலருக்கு உண்டு. அதிலும் ஐஸ் கட்டிகளை இடைவெளியே இல்லாமல் சிலர் மென்று சாப்பிடுவார்கள். இவ்வாறு இதற்கு அடிமையாவதற்கு காரணம், உடலில் இரும்புச்சத்து அளவுக்கு குறைவாக இருப்பது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

காஸ்மெட்டிக் சர்ஜரி அடிமை

உலகில் மில்லியன் கணக்கில் மக்கள் காஸ்மெட்டிக் சர்ஜரி செய்து கொள்வார்கள். அதே சமயம், சில மில்லியன் மக்கள் அந்த காஸ்மெட்டிக் சர்ஜரிக்கு அடிமையாக இருக்கிறார்கள். உதாரணமாக, இதில் ஒரு பிரபலமான அடிமை என்று சொன்னால் ஜாய்ஸ்லின் வில்டென்ஸ்டீன் என்பவர், காஸ்மெட்டிக் சர்ஜரிக்காக ஒரு வருடத்திற்கு 4,000,000 டாலர்கள் செலவழித்துள்ளார்.

டாய்லெட் பேப்பர் அடிமை

சிலருக்கு டாய்லெட் பேப்பரின் வாசனை மற்றும் சுவை மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அதிலும் இத்தகைய பழக்கமானது சிறு வயதில் இருந்து தான் ஆரம்பமாகும்.

டேனிங் அடிமை

பெரும்பாலான மக்கள் கடற்கரை ஓரங்களில் செய்யப்படும் டேனிங்கிற்கு அடிமையாக இருப்பார்கள். இந்த அடிமைக்கு டேனோரேக்ஸியா என்று பெயர்.

உடலில் துளையிடுதல்...


தற்போதுள்ள மக்கள் ஃபேஷன் என்ற பெயரில், உடலில் வலியை ஏற்படுத்தக்கூடிய விதவிதமான டாட்டூக்கள் மற்றும் தொப்புள் வளையம், நாக்குகளில் வளையம் போன்றவற்றிற்கு அடிமையாக உள்ளனர்.

சமூக வலைதளங்கள்

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, அனைவரது மத்தியிலும் இருக்கும் ஒருவிதமான அடிமைத்தனம் தான் சமூக வலைதளங்களில் உலாவுதல். அதிலும் ஃபேஸ் புக், டுவிட்டர் போன்றவற்றில் இருப்பது மிகவும் பிரபலமானது.

முடியை பிடுங்குதல்...

உலகில் 11 மில்லியன் மக்கள், முடியின் நுனியில் உள்ள வெடிப்புக்களைப் பிடுங்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.

டிடர்ஜெண்ட் அடிமை

எப்போதாவது டிடர்ஜெண்ட்டை சுவைத்துள்ளீர்களா? பொதுவாக டிடர்ஜெண்ட்டுகளை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். ஆனால், 19 வயதான டெம்பஸ்ட் என்பவர், டிடர்ஜெண்ட்டின் சுவைக்கு அடிமையாகியுள்ளார்.

கண்ணாடி டம்ளர்கள்

ஜோஷ் என்பவருக்கும் கண்ணாடி டம்ளர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். உடனே ஒயின் குடிப்பதற்கு என்று நினைக்காதீர்கள். கண்ணாடி டம்ளர்களை சாப்பிடுவதற்கு மிகவும் பிடிக்குமாம். மேலும் அவர், கடந்த நான்கு ஆண்டுகளில் 100 மேற்பட்ட கண்ணாடி டம்ளர்களையும், 250 பல்ப்புக்களையும் சாப்பிட்டிருப்பதாக சொல்கிறார்.

மலமிளக்கும் மாத்திரை (Laxative)

இந்த மாத்திரையானது 15 வயதான கிம்பர்லி என்னும் பெண்ணுக்கு சாக்லெட் போன்றது. அதிலும் ஒருநாளைக்கு 100 மாத்திரைகளை சாப்பிடுவார். இதனால் அவர் இரத்தப்போக்குடன் கூடிய அல்சர் மற்றும் அதிகப்படியான ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கற்கள்
44 வயதான தெரேசா என்னும் பெண், கற்களின் சுவையானது பிடித்துவிட்டது. இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக கற்களை சாப்பிட்டு வந்திருக்கிறார். இதனால் அவரது பற்கள் உடைந்து போய், கடுமையான வயிற்று வலிக்கு ஆளானாலும், கற்கள் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தவில்லை.

நெயில் பாலிஷ்
நெயில் பாலிஷை நகங்களுக்கு போடும் அடிமைத்தனம் இருக்கிறது என்று சொன்னால், நம்பலாம். ஆனால் 32 வயதான ஜேமிக்கு, நெயில் பாலிஷின் வாசனை மற்றும் சுவை பிடித்து விட்டது. இதனால் ஒரு நாளைக்கு 6 பாட்டில் நெயில் பாலிஷை குடித்து வருகிறார்.

ஜானகியுடன் பாடிய தனுஷ்!



வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார்.


இப்படத்தில் அனிருத் இசையில் தனுஷுடன் ஜானகியம்மா மெலடி பாடல் ஒன்றைப் பாடியுள்ளாராம்.


தற்போது 75 வயதாகும் ஜானகியம்மா கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாடும் பாடல் இது.




ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கி வருகிறார்.

கனவுகளிடம் கவனமாக இருங்கள்!

நாம் எதிர்காலத்தைப் பற்றி காணும் கனவுகளை நனவாக்குவதற்கு கடின முயற்சியும் அவசியம். எனவே, கனவை நனவாக்குவதில் கவனமாக இருக்க வேண்டும்.

வாழ்நாளை யாராலும் அதிகப்படுத்த முடியாது. ஆனால் அர்த்தப்படுத்த முடியும். மேலும் ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழப் போகிறார் என்பது தெரியாது, என்றாலும் நம்பிக்கையோடு எதிர்காலத்திற்கான கனவுகளை வளர்க்கிறோம். அவ்வாறன இலட்சியக் கனவுகளை எவ்வளவு விரைவில் நனவுகளாக மாற்றப் போகின்றோம் என்பதுதான் முக்கியம்.

கனவு காண்பதிலேயே வாழ்நாளைக் கழித்து விடாமல் உங்களுக்குத் தேவையானது எது? தேவையற்றது எது? என்பது குறித்து ஒரு தெளிவான தீர்மானம் செய்து கொள்வது மிக அவசியம்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்களுடைய கனவுகளுக்கு மெருகேற்றும் விதமாக இருக்க வேண்டும். அத்தோடு, ஒவ்வொரு நாளும் நீங்கள் உங்களுடைய கனவை நனவாக்கும் நோக்கில்  முன்னோக்கியே செயல்பட வேண்டும். சிலர் ஆண்டுதோறும் சில குறிக்கோள்களை ஏற்படுத்திக் கொண்டு அதை அடைவதற்கு உழைப்பார்கள். அது மிகவும் நல்லதுதான் என்றாலும், அத்தகைய குறிக்கோள் உங்களுடைய கனவுக்கு வலிமை சேர்ப்பதாகவும், கனவுகளை நனவாக்குவதற்கான செயல்பாடுகளாகவும் இருக்க வேண்டும்.

கனவு நனவாகும் வரை நீங்கள் கவனமாகவும், மென்மையாகவும் செயல்பட வேண்டும். எப்பொழுதும் எந்தச் சூழ்நிலையிலும் சாந்தமாகவும் அன்பாகவும் அணுகக் கற்றுக் கொள்ள வேண்டும். கோபப்படுவதும், எரிச்சலடைவதும் கூடவே கூடாது. அத்துடன் எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பதற்றப்படுவது போன்ற குணங்களை விட்டொழிக்க வேண்டும். அதற்கு உங்களை நீங்களே சுயதிறனாய்வு செய்து தேவையற்ற மனோபாவத்தையும் குணங்களையும் நீக்கி விடுங்கள்.

உதவி செய்தல், புன்னகை புரிதல், சாந்தமாகப் பேசுதல் போன்ற நற்பண்புகள் உங்களுடைய கனவை நனவாக்குவதற்கு நிச்சயம் உதவும். உங்களுடைய வாழ்வில் வரும் நல்ல சந்தர்பங்களை நழுவவிடாமல் நன்றாகப் பயன்படுத்தி உங்களுடைய திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிக்காட்டுங்கள். உங்களுடைய இலட்சியக்கனவு நிச்சயம் ஒரு நாள் நனவாகும்.

Xolo Q900 ஸ்மார்ட்போன் ரூ.12.999 விலையில் அறிமுகம்


Xolo சமீபத்தில் Q தொடர் வரிசையில் Q900 ஸ்மார்ட்போன் ரூ.12.999  விலையில் வெளியிட்டுள்ளது. புதிய Xolo ஸ்மார்ட்போன் Q ஸ்மார்ட்போன் தொடர் வரிசையை விரிவுபடுத்தி ஏற்கனவே Xolo Q700, Xolo Q600, Xolo Q1000, Xolo Q1000S, மற்றும் Xolo Q800 போன்ற ஃபோன்களை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் Quad-core ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.

Xolo Q900: 312ppi பிக்சல் அடர்த்தி அதிகம் கொண்ட 4.7-இன்ச் ஹச்டி (720x1280 பிக்சல்) டிஎஃப்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது மற்றும் இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) செயல்பாடுகள் ஆதரிக்கின்றது. இது BSI சென்சார் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற ஆட்டோ ஃபோகஸ் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

ஒரு 286MHz PowerVR SGX544 ஜி.பீ. யூ உடன் 1.2GHz Quad-core மீடியா டெக் 6589 ப்ராசசர். ரேம் 1GB, மற்றும் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4GB inbuilt சேமிப்பு உள்ளடக்கியுள்ளது. Xolo Q900 இல் 1800mAh பேட்டரி மற்றும் இணைப்பு விருப்பங்களான Wi-Fi, ப்ளூடூத், GPS / AGPS மற்றும் 3G ஆகியவை உள்ளன. கூடுதலாக, Xolo A600 பற்றி எந்த விலை நிர்ணயமும் இல்லாமல் Xolo இன் இணயதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

Xolo A600: 245ppi பிக்சல் அடர்த்தி அதிகம் கொண்ட 4.5-இன்ச் qHD (540x960) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் மாலீ 400 ஜி.பீ. யூ உடன் 1.3GHz dual-core மீடியா டெக் 6572W ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது மற்றும் இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) செயல்பாடுகள் ஆதரிக்கின்றது.

எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற ஆட்டோ ஃபோகஸ் கேமரா மற்றும் VGA முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டிருக்கிறது. 512MB ரேம் மற்றும் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்க கூடிய 4GB inbuilt சேமிப்பு உள்ளடக்கியுள்ளது. 1900mAh பேட்டரி கொண்டுள்ளது. இந்த Xolo A600 ஸ்மார்ட்போன் நிர்ணயிக்கப்பட்ட விலை மற்றும் சாதனம் கிடைக்கும் இடம் ஆகியவை பற்றி வெளியிடவில்லை.

Xolo Q900 முக்கிய குறிப்புகள்:

4.7-இன்ச் ஹச்டி (720x1280) டிஎஃப்டி டிஸ்ப்ளே
286 மெகா ஹெர்ட்ஸ் PowerVR SGX544 ஜி.பீ. யூ உடன் 1.2GHz Quad-core மீடியா டெக் 6589 ப்ராசசர்
1GB ரேம்
MicroSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்க கூடிய, 4GB inbuilt சேமிப்பு
ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன்
இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்)
BSI சென்சார் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற ஆட்டோ ஃபோகஸ் கேமரா
2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா

Xolo A600 முக்கிய குறிப்புகள்:

4.5-இன்ச் qHD (540x960) டிஸ்ப்ளே
1.3GHz dual-core மீடியா டெக் 6572W ப்ராசசர்
512MB ரேம்
ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன்
MicroSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்க கூடிய, 4GB inbuilt சேமிப்பு
இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்)
எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற ஆட்டோ ஃபோகஸ் கேமரா
VGA முன் எதிர்கொள்ளும் கேமரா
1900mAh பேட்டரி

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின்றன. மேலும் அத்தகைய உண்மைகளை கேட்டால், பலரும் வாயில் கை வைத்து 'அப்படியா!!!' என்று ஆச்சரியமாக கேட்பார்கள். சொன்னால் கூட நம்பமாட்டார்கள். உதாரணமாக, உலகிலேயே வெடிகுண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான்பூச்சி என்று தெரியும். ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல் கூட உயிருடன் இருக்கும் என்று சொன்னால் ஆச்சரியம் தானே.

இது போன்று நிறைய விசித்திரமான சில உண்மைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் வேறு ஏதாவது இயற்கையில் உள்ள சில விசித்திரமான உண்மைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி, அந்த விசித்திரமான உண்மைகளைப் பார்ப்போமா!!!


லிப்ஸ்டிக்

பெண்களுக்கு லிப்ஸ்டிக் என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் அந்த லிப்ஸ்டிக்கை போடும் முன், அது எதனால் ஆனது என்று சற்று யோசியுங்கள். ஏனெனில் லிப்ஸ்டிக்கில் மீன் செதில்கள் உள்ளன.

ஹெட்போன்
தொடர்ச்சியாக விருப்பமான பாடல்களை ஹெட்போனில் கேட்கிறீர்களா? அவ்வாறு ஒரு மணிநேரம் பாட்டு கேட்டால், காதுகளில் பாக்டீரியாவானது 700 மடங்கு அதிகரிக்கும்.

இறால்

கடல் உணவுகளில் இறால் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் அடுத்த முறை அதன் தலையை சாப்பிடும் போது, அதன் இதயத்தை சாப்பிடும் உணர்வைப் பெறுவீர்கள். ஏனெனில் இறாலுக்கு இதயமானது அங்கு தான் உள்ளது.

நாக்கு
எப்படி கைவிரலில் உள்ள ரேகைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறதோ, அதேப் போன்று உதடுகளின் ரேகைகளும்.

பட்டாம்பூச்சி

இந்த அழகான பட்டாம்பூச்சி, பூக்களில் உள்ள தேனின் சுவையை வாயால் தான் சுவைக்கிறது என்று நினைத்தால், அது தான் தவறு. ஏனெனில் உண்மையில் பட்டாம்பூச்சி தேனின் சுவையை அதன் கால்களில் தான் சுவைக்கிறது.

யானை

பாலூட்டிகளிலேயே யானையின் பிரசவ காலம் தான் அதிகம். அதுவும் 645 நாட்கள், யானையானது தன் கருவை சுமக்கும்.
 

ஆங்கில மொழி

ஆங்கில மொழியில் உள்ள ரைம்ஸ்களில் மாதம், ஆரஞ்சு, ஊதா மற்றும் சில்வர் போன்ற வார்த்தைகளே வராது என்ற உண்மை தெரியுமா?


நெருப்புக்கோழி

உலகிலேயே மிகவும் பெரிய பறவையான நெருப்புக்கோழியின் மூளையை விட, அதன் கண்கள் பெரியது என்பது ஆச்சரியப்பட வைக்கும் ஒரு உண்மை.

புகைப்பிடித்தல்
இப்போது சொல்லப்போகும் உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது என்னவெனில், சிகரெட்டை பற்ற வைக்கும் லைட்டரானது, தீக்குச்சிக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.

முழங்கை ட்ரிக்

கைகளை எவ்வளவு தான் அங்கும் இங்கும் அசைக்க முடிந்தாலும், முழங்கையை மட்டும் எவராலும் நாக்கால் தொட முடியாது. இப்போது அதை நிச்சயம் முயற்சிப்பீர்கள் பாருங்களேன்.

சிலந்தி

உலகில் எத்தனையே ஃபோபியாக்களைப் பார்த்திருப்போம். ஆனால் இன்றும் சிலந்தியின் மீதுள்ள பயத்தாலேயே உயிர் போகும் வாய்ப்பு உள்ளது.

தும்மல்

சொன்னால் நம்பமாட்டீர்கள், மிகவும் கடுமையாக தும்மினால் விலா எலும்புகளில் முறிவு ஏற்படும். மேலும் இவ்வாறு திடீரென்று கடுமையாக தும்பும் போது, சில நேரங்களில் தலை அல்லது கழுத்தில் உள்ள இரத்த நாளங்கள் சிதைவடைந்து இறப்பை சந்திக்கவும் கூடும். ஆகவே இந்த மாதிரியான கடுமையான தும்மல் வரும் சூழ்நிலையில், கண்களை திறந்து தும்மினால், இத்தகைய அபாயத்தில் இருந்து விடுபடலாம்.


பிறப்பு
குழந்தையாக இருந்து வளர வளர, உடலின் கண்கள் மட்டும் பிறக்கும் போது இருந்த அளவில் தான் இருக்கம். ஆனால் மூக்கு மற்றும் காதுகள் வளர்ச்சியடையும் என்பது தெரியுமா?
 

கம்ப்யூட்டர்
கம்ப்யூட்டர் கீ போட்டின், ஒரே வரிசையில் 'typewriter'என்னும் மிகவும் நீளமான வார்த்தையை டைப் செய்யலாம்.
 

முதலை

பொதுவாக கீழ் தாடை இறங்கி தான் வாயானது திறக்கப்படும். ஆனால் முதலைக்கு மட்டும் தான், மேல் தாடை தூக்கி வாய் திறக்கப்படும்.


கரப்பான்பூச்சி

வீட்டில் பெரும் தொல்லையைக் கொடுக்கும் கரப்பான்பூச்சி, தலை இல்லாமல், 9 நாட்கள் உயிருடன் வாழும் தன்மை கொண்டது. எனவே வீட்டில் கரப்பான்பூச்சி அடித்து கொல்லும் போது, கவனமாக அடித்துக் கொல்லுங்கள்.


வெங்காயம்

யாருக்குமே வெங்காயம் வெட்டுவது என்பது பிடிக்காது. ஏனெனில் அது தேவையில்லாமல் அழ வைக்கும். ஆனால் அவ்வாறு வெங்காயத்தை வெட்டும் போது கண்ணீர் வரக்கூடாது என்றால், வாயில் சூயிங் கம் போட்டுக் கொண்டு வெட்டினால், உண்மையில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை தவிர்க்கலாம்.


தூசிப்படிந்த வீடு

வீட்டில் அடிக்கடி தூசி படிகிறதா? அப்படியெனில் அதற்கு காரணம், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் தான். அவை தான் வீட்டில் படிந்து, வீட்டை அடிக்கடி தூசியடைய வைக்கின்றன.


கர்ப்பமான மீன்

வீட்டில் தங்கமீன் கர்ப்பமாக இருந்தால், அதனை 'ட்விட்' (twit) என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, 'கர்ப்பமான தங்கமீன்' என்று சொல்லக்கூடாது.

கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்காதீங்க.


பேஸ்புக் என்பது மிகப்பெரிய மீடியாவாக மாறிவிட்டது. பேஸ்புக்கில் பகிரும் சில செய்திகள் காட்டுத்தீப்போல பரவிவிடும். அதுவும் அந்த செய்திகள் உண்மையா இல்லை வெறும் வதந்தியா என்றெல்லாம் யோசிப்பதற்கு நேரமில்லாமல் நாமும் பகிர்ந்துவிடுகிறோம்.

இதில் நாம் பார்க்கப் போவது "டூத்பேஸ்ட் கலரும், தவறான விளக்கமும்"

பொதுவாக நாம் வாங்கும் டூத்பேஸ்ட்களில் சதுர வடிவ நிறங்களில் குறியீடு இருக்கும். பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் இருக்கும்.

இவற்றுக்கு கொடுக்கப்படும் தவறான விளக்கம்:

பச்சை - இயற்கை
நீளம் - இயற்கை + மருத்துவ குணம்
சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை
கருப்பு - சுத்தமான ரசாயன கலவை

உண்மை என்ன?

இவ்வாறான நிறங்கள் உண்மையில் Packaging Process-காக பயன்படுகிறது. இந்த குறியீட்டுக்கு "Eye Mark அல்லது Eye Spot" என்று பெயர். இவைகள் டூத்பேஸ்ட் ட்யூபை உருவாக்கும் நவீன பேக்கேஜிங் இயந்திரங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இவைகள் "ட்யூபில் எங்கு வெட்ட வேண்டும், எங்கு மடக்க வேண்டும் என்பதனையும், ட்யூபிற்கு எந்த கலரை கொடுக்க வேண்டும் என்பதனையும்" மெசின்கள் தெரிவிக்கும்.

இந்த கலர் குறியீடுகளை டூத்பேஸ்ட் மட்டுமின்றி, பல்வேறு க்ரீம் பாக்கெட்களிலும் நீங்கள் பார்க்கலாம்.

தயவு செய்து யாரும் "உங்க டூத்பேஸ்ட்ல கலர் இருக்கா?" என்று கேட்டுடாதீங்க....

மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்!

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம்.  அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.


1.        போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.


2.        நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.


3.        உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.


4.        பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல


5.        பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல


6.     சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?


7.      அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம்


கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.


8.        இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.


9.        கஷ்டம் தான் … ஆன முடியும்.


10.      நஷ்டம் தான் … ஆன மீண்டு வந்திடலாம்.


11.      இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?


12.      விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?


13.      விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.


14.      ஒக்காந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதப்  பார்.


15.      இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?


16.      இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?


17.      இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.


18.      இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.


19.      முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.


20.      கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.


21.      அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.


22.      விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.


23.      திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.


24.      சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு


வேலையை ஆரம்பி.


25.      ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு


ஜாக்ரதையாத்தான் இருக்கணும்.


26.      உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும்,


அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?


27.      ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?


28.      கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.


29.      எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?


30.      அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி


இல்லையா?


31.      அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே


போதும்.


32.      நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்த கழிக்கலாமா?


ஆம், நண்பர்களே,



    * வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்


    * ஒன்பது முறை விழுந்தவனுக்கு இன்னொரு பெயர் உண்டு- எட்டு முறை எழுந்தவன் எழுந்திருங்கள். உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள்.

நம்மை அறியாமலேயே தினமும் பேசும் சமஸ்க்ருத வார்த்தைகள் சில!



அகங்காரம் - செருக்கு
அக்கிரமம் - முறைகேடு
அசலம் - உறுப்பு
அசூயை - பொறாமை
அதிபர் - தலைவர்
அதிருப்தி - மனக்குறை
அதிருஷ்டம்- ஆகூழ், தற்போது
அத்தியாவசியம் --இன்றியமையாதது
அநாவசியம் -வேண்டாதது
அநேகம் - பல
அந்தரங்கம்- மறைபொருள்
அபகரி -பறி, கைப்பற்று
அபாயம் -இடர்
அபிப்ராயம் -கருத்து
அபிஷேகம் -திருமுழுக்கு
அபூர்வம் -புதுமை
அமிசம் -கூறுபாடு
அயோக்கியன் -நேர்மையற்றவன்
அர்த்தநாரி -உமைபாகன்
அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்த
அர்த்தம் -பொருள்
அர்த்த ஜாமம் - நள்ளிரவு
அர்ப்பணம் -படையல்
அலங்காரம் -ஒப்பனை
அலட்சியம் - புறக்கணிப்பு
அவசரமாக - உடனடியாக, விரைவாக
அவஸ்தை - நிலை, தொல்லை
அற்பமான - கீழான, சிறிய
அற்புதம் - புதுமை
அனுபவம் - பட்டறிவு
அனுமதி - இசைவு




ஆச்சரியம் - வியப்பு
ஆக்ஞை - ஆணை, கட்டளை
ஆட்சேபணை - தடை, மறுப்பு
ஆதி - முதல்
ஆபத்து - இடர்
ஆமோதித்தல் - வழிமொழிதல்
ஆயுதம் - கருவி
ஆரம்பம் -தொடக்கம்
ஆராதனை -வழிபாடு
ஆரோக்கியம் - உடல்நலம்
ஆலோசனை - அறிவுரை
ஆனந்தம் - மகிழ்ச்சி
 



இஷ்டம் - விருப்பம்
இங்கிதம் - இனிமை




ஈன ஜன்மம் - இழிந்த பிறப்பு
ஈனஸ்வரம் - மெலிந்த ஓசை



உக்கிரமான - கடுமையான
உபசாரம் - முகமன் கூறல்
உபயோகம் - பயன்
உதாசீனம் - பொருட்படுத்தாமை
உத்தரவாதம் - பிணை, பொறுப்பு
உத்தரவு - கட்டளை
உல்லாசம் - களிப்பு
உற்சாகம் - ஊக்கம்



ஐதீகம் - சடங்கு, நம்பிக்கை



கர்ப்பக்கிருகம் - கருவறை
கர்மம் - செயல்
கலாச்சாரம் - பண்பாடு
கலாரசனை - கலைச்சுவை
கல்யாணம் - மணவினை, திருமணம்
கஷ்டம் - தொல்லை, துன்பம்
கீதம் - பாட்டு, இசை
கீர்த்தி - புகழ்
கீர்த்தனை- பாமாலை, பாடல்
கோஷம் - ஒலி



சகலம் - எல்லாம், அனைத்தும்
சகஜம் - வழக்கம்
சகி - தோழி
சகோதரி - உடன் பிறந்தவள்
சங்கடம் - இக்கட்டு, தொல்லை
சங்கதி - செய்தி
சங்கோஜம் - கூச்சம்
சதம் - நூறு
சதா - எப்பொழுதும்
சதி- சூழ்ச்சி
சத்தம் - ஓசை, ஒலி
சந்தானம் - மகப்பேறு
சந்தேகம் - ஐயம்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சபதம் - சூளுரை
சம்சாரம் - குடும்பம், மனைவி
சம்பந்தம் - தொடர்பு
சம்பவம் - நிகழ்ச்சி
சம்பாதி - ஈட்டு, பொருளீட்டு
சம்பிரதாயம் - மரபு
சம்மதி - ஒப்புக்கொள்
சரணாகதி - அடைக்கலம்
சரித்திரம் - வரலாறு
சரீரம் - உடல்
சருமம் -தோல்
சர்வம் - எல்லாம்
சாதாரணம் - எளிமை, பொதுமை
சாதித்தல் - நிறைவேற்றுதல், விடாது பற்றுதல்
சாதம் - சோறு
சாந்தம் - அமைதி
சாகசம் - துணிவு, பாசாங்கு
சாராமிசம் - பொருட்சுருக்கம்
சாயந்திரம் - மாலை வேளை, அந்திப் பொழுது
சாவகாசம் - விரைவின்மை
சாஸ்திரம் - நூல்
சாசுவதம் - நிலை
சிகிச்சை - மருத்துவம்
சித்தாந்தம் - கொள்கை, முடிவு
சித்திரம் - ஓவியம்
சிநேகிதம் - நட்பு
சிம்மாசனம் - அரியணை
சிரத்தை - அக்கறை, கருத்துடைமை
சிரமம் - தொல்லை
சின்னம் - அடையாளம்
சீக்கிரமாக - விரைவாக
சுதந்திரம் - தன்னுரிமை, விடுதலை
சுத்தமான - தூய்மையான
சுபாவம் - இயல்பு
சுலபம் - எளிது
சுவாரஸ்யமான - சுவையான
சேவை - பணி
சேனாதிபதி - படைத்தலைவன்
சௌகர்யம் - வசதி, நுகர்நலம்
சௌக்கியம் - நலம்



தசம் - பத்து
தத்துவம் - உண்மை
தம்பதியர் - கணவன் மனைவி, இணையர்
தரிசனம் - காட்சி
தர்க்கம் - வழக்கு
தர்க்க வாதம் - வழக்காடல்
தாபம் - வேட்கை
திகில் - அதிர்ச்சி
திருப்தி - நிறைவு
தினசரி - நாள்தோறும்
தினம் - நாள்
தீர்க்கதரிசி _ ஆவதறிவார்
துரதிருஷ்டம் - பேறின்மை
துரிதம் - விரைவு
துரோகம் - வஞ்சனை
துவம்சம் - அழித்தொழித்தல், அழித்துத் தொலைத்தல்
தேகம் - உடல்
தேசம் - நாடு
தைரியம் - துணிவு
 


நட்சத்திரம் - விண்மீன், நாள்மீன்
நமஸ்காரம் - வணக்கம்
நர்த்தனம் - ஆடல், நடனம்,கூத்து
நவீனம் - புதுமை
நவீன பாணி - புது முறை
நாசம் - அழிவு, வீண்
நாசூக்கு - நயம்
நாயகன் - தலைவன்
நாயகி - தலைவி
நிஜம் - உண்மை, உள்ளது
நிசபதமான - ஒலியற்ற, அமைதியான
நிச்சயம் - உறுதி
நிச்சயதார்த்தம் - மண உறுதி
நிதானம் - பதறாமை
நித்திய பூஜை - நாள் வழிபாடு
நிரூபி - மெய்ப்பி, நிறுவு
நிருவாகம் - மேலாண்மை
நிதி - பொருள்,செல்வம், பணம்
நீதி - அறம், நெறி, அறநெறி, நடுவுநிலை, நேர், நேர்நிறை, நேர்பாடு, முறை



பகிரங்கம் - வெளிப்படை
பஞ்சாட்சரன்- ஐந்தெழுத்து
பரவசம் - மெய்மறத்தல்
பராக்கிரமம் - வீரம்
பராமரி - காப்பாற்று , பேணு
பரிகாசம் - இகழ்ச்சிச் சிரிப்பு
பரிசோதனை - ஆய்வு
பரிட்சை - தேர்வு
பலவந்தமாக - வற்புறுத்தி
பலவீனம் - மெலிவு, வலிமையின்மை
பலாத்காரம் - வன்முறை
பாணம் - அம்பு
பாதம் - அடி
பாரம் - சுமை
பால்யம் - இளமை
பிம்பம் - நிழலுரு
பிரகாசம் - ஒளி, பேரொளி
பிரகாரம் - சுற்று
(அதன்)பிரகாரம் - (அதன்)படி
பிரசங்கம் - சொற்பொழிவு
பிரசுரம் - வெளியீடு
பிரச்சினை - சிக்கல்
பிரதிநிதி - சார்பாளர்
பிரதிபலித்தல் - எதிரியக்கம்
பிரதிபிம்பன் - எதிருரு
பிரத்தியோகம் - தனி
பிரபலம் - புகழ்
பிரமாதமான - பெரிய
பிரமிப்பு - திகைப்பு
பிரயோகி - கையாளு
பிரயோசனம் - பயன்
பிரவாகம் - பெருக்கு
பிரவேசம் - நுழைவு, புகுதல், வருதல்
பிரார்த்தனை - தொழுகை,
பிரியம் - விருப்பம்
பிரேமை - அன்பு
பீடிகை - முன்னுரை
புண்ணியம் - நல்வினை
புத்தி - அறிவு
புத்திரன் - புதல்வன்
புனிதமான - தூய
புஷ்பம் - மலர், பூ
புஜபலம் - தோள்வன்மை
பூஜை - வழிபாடு
பூர்த்தி - நிறைவு
பூஷணம் - அணிகலம்-
போதனை - கற்பித்தல்



மகான் - பெரியவர்
மகாயுத்தம் -பெரும்போர்
மத்தியஸ்தர் - உடன்படுத்துபவர்
மத்தியானம் - நண்பகல்
மந்திரி - அமைச்சர்
மனசு - உள்ளம்
மனிதாபிமானம் - மக்கட்பற்று
மானசீகம் - கற்பனை
மல்யுத்தம் - மற்போர்
 


யந்திரம் - பொறி
யூகம் - உய்த்துணர்தல்
யூகி - உய்த்துணர்
யோக்யதை - தகுதி



ரதம் - தேர்
ரத சாரதி- தேரோட்டி
ராணி - அரசி
ராத்திரி - இரவு
ராச்சியம் - நாடு,மாநிலம்
ராஜா - மன்னன்
ரசம் - சாறு, சுவை

 ல


லட்சம் - நூறாயிரம்
லட்சணம் - அழகு
லட்சியம் - குறிக்கோள்



வதம் - அழித்தல்
வதனம் - முகம்
வம்சம் - கால்வழி
வஸ்திரம் - துணி, ஆடை
வாஞ்சை - பற்று
வாயு - காற்று
விக்கிரகம் - வழிபாட்டுருவம்
விசாரம் - கவலை
விசாலமான - அகன்ற
விசித்திரம் - வேடிக்கை
விஷேசம் - சிறப்பு
விஞ்ஞானம் - அறிவியல்
விஷயம் - செய்தி
விதானம் - மேற்கட்டி
விநாடி - நொடி
வித்தியாசம் - வேறுபாடு
விபூதி - திருநீறு , பெருமை
விமோசனம் - விடுபடுதல்
வியாதி - நோய்
விரதம் - நோன்பு
விவாகம் - திருமணம்
விவாதி -வழக்காடு
வேகம் - விரைவு
வேதம் - மறை
வேதவிற்பனன்ர் - மறைவல்லார்
வேதியர் - மறையவர்



ஜனநாயகம் - குடியாட்சி
ஜனம் - மக்கள்
ஜனனம் - பிறப்பு
ஜாதகம்- பிறப்புக் குறிப்பு
ஜாலம் - வேடிக்கை
ஜூரம் - காய்ச்சல்
ஜோதி - ஒளி
ஜோடி - இணை
ஜோடித்தல் - அழகு செய்தல்



ஸந்ததி - கால்வழி
ஸமத்துவம் - ஒரு நிகர்
ஸமரசம் - வேறுபாடின்மை
ஸமீபம் - அண்மை
ஸம்ஹாரம் - அழிவு
ஸோபை - பொலிவு
ஸௌந்தர்யம் - பேரழகு
ஸ்தாபனம் _ நிறுவனம்
ஸ்தானம் - இடம்

இப்படியும் சில பழமொழிகள்!

* எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்


* ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்

* ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்


* கார் ஓட டயரும் தேயும்


* சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு


* சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை


* தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்


* தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்


* துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பெரியது


* பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல


* மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்


* முடியுள்ள போதே சீவிக்கொள்


* பழகின செறுப்பு காலை கடிக்காது


* மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி


* ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே.