Friday, 23 August 2013

~*~கைபேசி பயன்பாட்டினை நெறிமுறைப்படுத்தும் குறள்கள் - சிந்திப்பதற்கு மட்டுமே~*~

குறள் :1:நோக்கக் குழையா நுண்ணலைக் கைபேசி தாக்காதே தகவல் தரும். பொருளுரை: நோக்கினாலும் குழையாத நுண்ணலைக் கைபேசி, நுண்ணலைகள் தாக்காதே தகவலைத் தரும்.2:காணாது தொலையும் கைபேசி; கண்டபின்னும் நாணாதே மெல்ல நகும்.பொருளுரை: எங்கோ தொலத்து விட்டுவிட்டக் கைபேசி கிட்டினாலும் அதற்கென நாணாதே ஒலிக்கும்.3:இனிதே மொழி இயம்பினும் நெடண்மை மெலிதே கொல்லும் செவி.இனிதே மொழி இயம்பினும் நெடு அண்மை மெலிதே கொல்லும் செவி.பொருளுரை: எத்தனை தான் இனிய மொழியினைக் கொடுப்பினும் கைபேசியை காதிற்கு அண்மையில் நெடு நேரம் கொண்டு கேட்டால், நாளடைவில் செவி கெடாமல் என்ன செய்யும்?4:அன்புசால்...

பயனுள்ள இணையதள முகவரிகள்...

1. ஆன்லைன் -ல் புகைப்படங்களை அழகாக வெட்டித்தரும் பயனுள்ள தளம்.http://www.cutmypic.com/ 2. வீடியோ விளக்கத்தோடு அசத்தும் இணைய அகராதி.http://www.wordia.com/ 3. தமிழில் கணினி செய்திகள்http://tamilcomputertips.blogspot.com/4. உங்கள் போடோவை ஓவியமாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்http://www.fotosketcher.com/PortableFotoSketcher.exe 5. அனைத்து அரிய வீடியோக்களையும் கொடுக்கும் பயனுள்ள தளம். http://yttm.tv/ 6. ஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளம்.http://classbites.com/ 7. தேடல் முடிவுகளை வகை வாரியாக பிரித்து கொடுக்கும் மிகவும் பயனுள்ள தளம்.http://www.helioid.com...

கும்மிப்பாடல்களின் அமைப்பு:-

கும்மிப்பாடல்களின் அமைப்பு:-                 ஆதிமனிதன் என்று தோன்றி, அறிவுநிலையில் விளக்கம் பெற்றானோ அன்றே அவனுக்குள் கலை ஆர்வம் தோன்றி வளர்ந்திருக்க வேண்டும். கருத்தை உடனே வெளிப்படுத்த உதவும் ஆடலும் பாடலும் அவனுடைய தொடக்கக்காலக் கலைகளாக அமைந்திருக்க வேண்டும். பாடல் இசையை அடிப்படையாகக் கொண்டது. பாடலுக்கேற்ப ஆடும் ஆட்டம் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. மொழி வளர்ச்சி ஏற்படுவதற்கு முன்னே தன் உணர்ச்சிப் பெருக்கை ஒலி வடிவங்களாக்கி ஓசையெழுப்பியிருப்பான். அதுவே ...

கவிதை_வருத்தம் வேண்டாம் வெற்றியருகே!!!

கவிதை_வருத்தம் வேண்டாம் வெற்றியருகே!!! பூக்கள் உதிர்ந்து விழும்என்பதற்காக மரங்கள் வருத்தப்படுவதில்லை.தென்றல் நின்று போகும்என்பதற்காக மலர்கள் வருத்தப்படுவதில்லை.நிலவு தேய்ந்து விடும்என்பதற்காக வானம் வருத்தப்படுவதில்லை.பிறகு ஏன் மனிதா!நீ மட்டும் தோல்வி கண்டுதுவண்டு போகிறாய்?காலம் இருக்கு கனிவது நிச்சயம் நேரம் இருக்கு நடப்பது நிச்சயம் உழைப்பு இருக்கையில் வெற்றி நிச்சயம்...

மூலிகைகளும், அவை தீர்க்கும் நோய்களும்!

முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம்.ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாம். சில மூலிகைகளும், அவை தீர்க்கும் நோய்களும் பற்றி கீழே காண்போம்.அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும் ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது...

பயனுள்ள 25 சித்த மருத்துவக் குறிப்புகள்:-

1. உடல் சக்தி பெற இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.2. முகப்பொலிவிற்கு உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். 3. முடி உதிர்வதை தவிர்க்க நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.4. வேர்க்குரு நீங்க சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.5. இரத்த சோகையை போக்க  பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர ரத்த சோகை நீங்கும்.6. பசி உண்டாக புதினா சாறு...

""சிந்தனை விருந்து"

 யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவரே உண்மையில் உயர்ந்த மனிதர். மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்! பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது!மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது. ஆனால் முட்டாள்தனமாக செயற்படுவது!முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழி மௌனமாக இருப்பதுதான்!அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை. தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத்...

இந்திய அரசியலமைப்பு - தகவல்கள்

இந்திய அரசியலமைப்பு - தகவல்கள் இந்திய அரசியலமைப்பு *  இந்தியாவின் முதல் அரசியலமைப்பு சபைக் கூட்டம் டிசம்பர்- 9, 1946-ம் ஆண்டு நடை பெற்றது. *   தலைவராக சச்சிதானந்த சின்ஹா செயல் பட்டார். அவர் மறைவுக்குப் பின்னர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் தலைவராகச் செயல் பட்டார். *  டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் வரைவுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். *   இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949. *   இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது ஜனவரி 26, 1950.*  ...