Saturday, 14 December 2013

கூந்தல் முடியை அடர்த்தியாக‌ கருமையாக வளர்ப்பது எப்படி?

பெண்களை அழகிய‌ பதுமையாக்க‌, அவர்களின் கூந்தலுக்கும் முக்கியப் பங்கு உண்டு. சிலர் கூந்தலினை அதிக‌ கவனத்துடன் பராமரித்தாலும் அவர்களுக்கு அதற்கான‌ பலன் கிடைப்ப்பதில்லை. கூந்தல் முடி உதிர்தல், மாறான‌ நிறம் மற்றும் நீளமின்மை ஆகியப் பிரச்சனைகள் இயல்பானதாகும். பெண்களின் கூந்தல் முடி உதிர்வதற்கு பல‌ காரணங்களைக் கூறலாம். அக்காரணங்களை ஆராய்ந்து அறிந்து அக்குறை நிறைவுகளை நிவர்த்தி செய்தால் முடி உதிர்வதை எளிதாகத் தவிர்த்து விடலாம். முடி அடர்த்தியானதாக‌ மற்றும்...

இன்டர்நெட் பேச்சு வழக்கு அகராதி

இன்டர்நெட்டில், ஆங்கிலம்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிற மொழி. சாட்டிங் போதிலும் சரி, நண்பர்களுக்குள் இமெயில் அனுப்பும் போதும் சரி, ஆங்கிலம் கொச்சை வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. எப்படி வட்டார வழக்கில் சில வார்த்தைகள் நமக்கு புரிவதில்லையோ அதே போல் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்குக கூட இந்த பேச்சுவழக்கு புரிவதில்லை.இதை புரிந்து கொள்வதற்காக ஓர் அகராதியையே இப்போது வெளியிட்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.குழந்தைகள் என்னென்ன வார்த்தைகளை இன்டர்நெட்டில்...

Yahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை..!

சிலர் எண்ணலாம் யாரச்சும் Yahoo இப்பொழுதும் பாவிக்கிறார்களா என? ஆனால் பெரும்பாலானவர்கள் அதாவது 2008 தொடக்கம் இணையத்தில் இருப்பவர்களின் Default Email இப்போதும் yahoo தான். அவர்கள் மாற விரும்பினாலும் அவர்களால் முடியவில்லை.அப்படி yahoo Mail பாவிக்கும் ஒருவரா நீங்களும்? நிச்சயம் இப்பதிவு உதவும்.. இப்பதிவில் yahoo mail தொடர்பான சில சிக்கல்களையும் கட்டணம் செலுத்தாமல் Google போன்ற சேவைகளுக்கு மாறுவது பற்றியும் இரத்தின சுருக்கமாக காணுங்கள்.அண்மையில் எனக்கும்...

பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- பகுதி 2

இரண்டாம் பகுதிகட்டுரையின் முதல் பகுதியில் முன்னுரை கொடுத்திருக்கிறேன். முதல் பகுதியையும் ஏனைய பழமொழிக் கட்டுரைகளையும் படிப்பது பயன் தரும்.வாழுகிற பெண்ணும் வாழாத பெண்ணும்மேட்டில் ஏறினால் முத்தாச்சி, பள்ளத்தில் இறங்கினால் அத்தாச்சிமெலிந்தவளுக்கு மெத்தப் பலன், மேனி மினுக்கெட்டவளுக்கு மெத்தக் கசம்மேலைக்குத் தாலி கட்டுகிறேன்,, கழுத்தே சுகமே இரு என்றார்போலமேலைக்குத் வாழ்க்கைப்படுகிறேன்,, கழுத்தே சுகமே இருமேனி எல்லாம் சுட்டாலும் விபசாரம் செய்கிறவள் விடாள்மைலங்கி...

பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- Part 1

பெண்களைப் பற்றிய பழமொழிகள் பெரும்பாலும் அவர்களுக்கு எதிரானதாகவும், அவர்களைக் குறைகூறுவதாகவும் இருக்கின்றன. இதைக் காலத்தின் பிரதிபலிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். பல கலாசாரங்களிலும் பழங்காலத்தில் இப்படிதான் இருந்தது. வேற்று மொழிப் பழமொழிகள், பொன்மொழிகளைப் பயிலுவோருக்கு இது தெளிவாக விளங்கும்.சில தமிழ்ப் பழமொழிகள் கடுமையான மொழியில் இருக்கும். வாசகர்கள் என்னை மன்னிப்பார்களாக. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருப்பதைத்தான் நான் மீண்டும் கொடுக்கிறேன். மிகவும்...

குழந்தை வளர்ப்பதில் சில தவறான பழக்க வழக்கங்கள் !

    1. குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். வேறு எந்தப் பொருளும் என்ன காரணம் கொண்டும் ஊட்டக்கூடாது.*2. பிறந்த சில குழந்தைகளுக்கு மார்பகத்தில் பால் கட்டி தடித்து இருக்கும். இதை குழந்தை வீறிட்டு அழுவதையும் பொருட்படுத்தாது நசுக்கி விட்டு பாலை வெளியே எடுக்கும் பழக்கம் உள்ளது. இது நல்லது அல்ல. மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.*3. பச்சிளங்குழந்தை அழுவதற்கு காரணம் ‘உரம் விழுந்து இருக்கிறது’ என்று எண்ணி ‘உரம் எடுத்தல்’...

காய்கறி பழங்களில் உள்ள பார்கோடு!

இனி காய்கறி பழங்களில் உள்ள பார்கோடை வைத்து அது என்ன மாதிரி? எனபதை கண்டறிந்து வாங்க முடியும் அதனால் கடைக்காரரின் பேச்சை நம்பாமல் நீங்களே ஸ்பெஸலிஸ்ட் ஆக முடியும்…. இதோ அந்த பார்கோடின் விவரம்:நான்கு எழுத்துக்கள் 3 அல்லது 4 என்ற எண்ணில் ஆரம்பிக்கும் பழங்கள் காய்கறிகள் – பூச்சிமருந்து தெளீத்து வளர்க்கபட்டது…….உதாரணத்திற்க்கு – 3011/40118 என்ற எண்ணுடன் ஆரம்பிக்கும் சில லேபிள்கள் ஐந்து எண்களை கொண்டிருந்தால் அதை ஆர்கனிக் என கூறி அதிக விலையில் விற்பார்கள்...

கஷ்டத்தை தூக்கி போடு - குட்டிக்கதைகள்!

ஒரு நாள் காலை ஒரு சிறிய எறும்பு ஒரு இறகை தூக்க முடியாமல் தூக்கி செல்வதை பார்த்தேன்.அது என்னதான் செய்கிறது என்று அதையே பார்த்து கொண்டு இருந்தேன்.அந்த எறும்பு போகின்ற வழியில் நிறைய தடைகள் இருந்தன அது சில நேரம் தூக்கி கொண்டும் சில நேரம் அந்த இறகை இழுத்து கொண்டும் சென்றது.ஒரு இடம் வந்ததும் சிறிய இடைவெளி ஒன்று இருந்தது,அது தன் முன் காலால் தூக்கி வைத்து பார்த்தது பின்பு பின் காலால் நீட்டி எக்கி பார்த்தது அந்த எறும்பால் முடியவில்லை.இறகை வைத்து விட்டு சுற்றி...

பொருளாதாரத்தை மேம்படுத்துவது எப்படி?

பணக்காரனாக ஆக வேண்டும் என்றால், அது எப்படி சாத்தியாகும் என்பதை ஒரு பணக்காரரிடமிருந்தோ அல்லது பல பணக்காரர்களைப் பற்றிய நூல்களிலிருந்தோ அல்லது அவர்கள் பின்பற்றிய வழிமுறைகளை அறிந்தோ நாமும் பணக்காரனாக ஆகிவிடலாம். இதனை ஒரு பணக்காரரிடமிருந்து நேரடியாக கேட்டும் தெரிந்து கொண்டால் தவறில்லை. ஐந்தாயிரம் கோடிக்கும் மேல் மதிப்புள்ள சொத்துக்களை குவித்துள்ள ஜே. பால் கெட்டி என்கிற கோடீஸ்வரரின் ஆலோசனைகளை நாம் இங்கு அறிவோம்.ஒரு பேட்டியில் அவரிடம் ஒரு கேள்வி கேட்க்கப்பட்டது. “தங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன?”. கோடிக்கணக்கான பணம் சம்பாதித்ததை மூன்று...

காலத்தின் அருமை!

1 வருடம் – தோல்வியடைந்த‌ மாணவனுக்குத் தெரியும்.1 மாதம் – குறை பிறசவத்தில் குழந்தை பெற்ற குணவதிக்குத் தெரியும்.1 வாரம் – வாரப் பத்திரிக்கை ஆசிரியருக்குத் தெரியும்.1 நாள் – ஒரு நாள் முன்னதாகப் பதவியில் சேர்ந்து பதவி உயர்வுபெற்றவனைய் பார்த்து பதவி உயர்வு பெறாதவனுக்குத் தெரியும்.1 மணி – பரிட்சை எழுதும் மாணவனுக்குத் தெரியும்.1 நிமிடம் – இரயிலைக் கோட்டைவிட்டவனைக் கேட்டால் தெரியும்.1 வினாடி – ஓட்டப் பந்தயத்தில் ஒரு வினாடியில் தோற்றுப் போனவனுக்குத் தெரியு...

தமிழ் சினிமாக்களில் அடிக்கடி கேட்கிற வசனங்கள்!

1. இன்ஸ்பெக்டர்ர்ர்ர்ர்.. நீங்க யார் கிட்டே பேசிக்கிட்டிருக்கீங்க தெரியுமா??2. ஸாரி.. எதையுமே இருபத்து நாலு மணிநேரம் கழிச்சுதான் சொல்லமுடியும்.3. நான் உங்களை உயிருக்குயிராஆஆஆஆ காதலிக்கறேன்..4. சட்டத்தின் பிடியிலிருந்து யார்ர்ர்ர்ர்ர்ர்ரும் தப்ப முடியாது.5. இன்னிக்கு ராத்திரி சரியா பனிரெண்டு மணிக்கு சரக்கோட அவன் வருவான்.6. மிஸ்டர்____________! யூ ஆர் அண்டர் அர்ரெஸ்ட்!!7. அடடே… யார் வந்திருக்காங்க பாரு..!!8. நீயில்லாம என்னால ஒரு நிமிஷம்கூட உயிர் வாழ முடியாது.9. தூக்குடா அவன..10.நான் யாருங்கறது முக்கியமில்ல. நான் சொல்லப் போற விஷயம்தான்   ...

அன்பு என்றால் என்ன ?

அன்பு நம்மில் பலர் இறைவனை நம்புகிறோம் சிலர் நம்புவதில்லை. இருப்பினும் நம் அனைவருக்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி நம்மை ஆட்டுவிப்பதாக நம்புகின்றோம். அந்த சக்தியை நாம் ஏன் அன்பென்று எண்ண கூடாது ?பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பதும், பெற விரும்புவதும் அன்புதான். மனிதர்களான நாம் மட்டுமின்றி விலங்கினங்களும் அன்பை தான் எதிர்பார்க்கின்றது. துன்பமும் பயமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில் அன்புதான் நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.அன்பு என்றால்  என்ன ?பல அர்த்தங்கள் பொதிந்த வார்த்தை இது. இதுதான் அன்பு என அவ்வளவு எளிதில் சொல்ல முடியாது....

ஒரு பிறவி பலமுறை வாழ்தல்?

கண்ணதாசனின் பாடல் வரிகளில் சில….உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்உலகம் உன்னிடம் மயங்கும் – நிலைஉயரும் போது பணிவு கொண்டால்உயிர்கள் உன்னை வணங்கும்!ஆசை கோபம் களவு கொள்பவன்பேசத் தெரிந்த மிருகம்அன்பு, நன்றி, கருணை கொண்டவன்மனிதவடிவில் தெய்வம்!!மானிடப் பிறவி: அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனின் கூண், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிது. இப்படியொரு மானிடப் பிறவியைய் பெறுவதற்கு என்ன தவம் செய்திடல் வேண்டும். இந்த அரியதொரு மானிட பிறவியில் பிறந்து பிறவிப் பயனை அடைவதற்குள், தினம் தினம் நமது வாழ்க்கையில் எத்தனை போராட்டங்கள், வேதனைகள், சோதனைகள்....

நீ...ண்...ட நாள் கேள்விக்கு விடை...!

முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா?இதுவரை இதற்கு எவருமே சரியான பதில் அளிக்க முடியாமலிருந்து வந்தது. தற்போது இதற்கு விடை காணப்பட்டுள்ளது.ஆம், இங்கிலாந்து விஞ்ஞானிகள் இதற்கு விடை கண்டு பிடித்துள்ளனர். அதாவது கோழியில் இருந்துதான் முட்டை வந்தது என்று அவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்ட், வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி அண்மையில் ஆய்வு நடத்தினார்கள்.முட்டையின் செல்களை சூப்பர் கம்பியூட்டர் மூலம் அவர்கள் ஆய்வு செய்தனர். அதில் முட்டையின் செல்கள் 'வோக்லெடின்-17' (ovocleidin (OC-17) என்ற புரோட்டின்...

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்!

பொதுவாக பிறந்த புதிதில் குழந்தை கள் அதிக நேரம் தூங்கும். பசி எடுக்கும் போது கண் விழித்து பால் அல்லது திரவ உணவு வகைகளை சாப்பிட்ட பின் மீண்டும் தூங்கும் இயல்பு கொண்டவை.அதுவே ஒரு வயதானால், குழந்தைகளின் தூக்கம் குறையும்.ஒரு வயது முதல் 3 வயது வரை அன்றாடம் பகல் நேரங்களில் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தைகள் தூங்க நேரிடும்.பாடசாலைக்குச் செல்லும் குழந் தைகளானால் மாலையில் பாடசாலை இல்லாத நேரங்களில் தூங்கும் பழக்கம் கொண்டிருப்பர். அவர்கள் 12 முதல் 13 மணி நேரம் வரை தூங்கக்கூடும். 5 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு குறைந்தது 9 மணி நேரமாவது தூங்க வேண்டியது...

காயத்ரி மந்த்ரம் ...

காயத்ரி என்றால்,எவரெல்லாம் தன்னைக் கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரஷிப்பது என்பது அர்த்தம் ..காயந்தம் த்ராயதே யஷ்மத் காயத்ரி (இ) த்யபிதீயதேகானம் பண்ணுவதென்றால் இங்கே பாடுவது என்று அர்த்தம் இல்லையார் தன்னை பிரேமையுடனும் பக்தியுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரி மந்த்ரம் ரஷிக்கும் .ஓம் பூர் புவ: ஸுவ:தத் ஸவிதுர் வரேண்யம்பர்கோ தேவஸ்ய தீமஹிதியோ யோன: ப்ரசோதயாத்என்று ஆரம்பிக்கும் இம் மந்திரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என்பதை கட்டாயம் ஏற்றுக் கொண்டே...

மன ஒருமைப்பாட்டிற்கு எளிய பயிற்சி!

சிவப்பு நிற புள்ளியை கவனமாக பாருங்கள்.அதையே உற்று பாருங்கள்.உங்களுடைய எண்ணங்களை சிதறடிக்க வேண்டாம்.இப்போது நீல நிறமாக வட்டம் மறைந்து விடும்.மீண்டும் உங்கள் கவனம் சிதறும் போது நீல நிற வட்டம் தோன்றும். Look at the red dot carefully. Just keep looking at it. Concentrate and don't think about your crush/love. The blue circle will gradually disappear. And once you loose focus, the blue circle will start re-appear...

பா.ஜ.வில் சேர்ந்தால் அமைச்சர் பதவி: கங்குலிக்கு மோடி அழைப்பு!

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை பா.ஜனதாவில் சேருமாறு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அவ்வாறு கட்சியில் சேர்ந்தால் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட சீட் வழங்குவதாகவும் அக்கட்சி, கங்குலியிடம் தெரிவித்துள்ளது. இதனிடையே மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி தருவதாக, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கங்குலியிடம்...

ஆஸ்துமாவா? அச்சம் வேண்டாம்!

கொட்டும் பனியும், கடும் குளிருமாக, காலையில் கண்விழிக்கும் போதே 'இன்னும் கொஞ்சம் தூங்கலாமே..!’ என போர்வைக்குள் சுருண்டு படுக்கத் தோன்றும் சொகுசான காலம் இது. இந்தப் பருவத்தில் வெயிலும் வெளிச்சமும் குறைந்து காற்றில் அதிக அளவு ஈரப்பதம் இருப்பதால், பல நோய்களும் வரிசைகட்டி வரக் காத்திருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு நோய்களின் பாதிப்பு மிக அதிகமாகும்.அதிலும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான இந்த மூன்று மாதங்கள் ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்களுக்கு...

காதல் மனைவியைப் பிரிகிறார் ஹ்ரித்திக் ரோஷன்!

பாலிவுட் உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஹ்ரித்திக் ரோஷன் தன் காதல் மனைவியிடம் இருந்து பிரிகிறார். இது ஹ்ரித்திக் மனைவி சுசன்னேவின் விருப்பமாம்.நடிகர் சஞ்சய்கானின் மகள் சுசன்னே மீது காதல் பற்றிக் கொள்ளவே, கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ல் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.  இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர்.''எங்களது 17 ஆண்டுகால உறவுமுறை முடிவுக்கு வந்துவிட்டது. என்னை...

உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கா?

ஓடியாடி வேலை செய்த காலம் போய் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.குறிப்பாக உடலில் பல வலிகளும் அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம், போதிய ஓய்வு இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, தூக்கமின்மை என்று சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.மேலும் இத்தகைய செயலால் உடலில் நாள்பட்ட வலிகள் தங்கி, உடலின் ஆரோக்கியத்தையே கெடுத்து விடுகிறது.இதற்காக எத்தனையோ மருந்து மாத்திரைகள் கடைகளில் விற்கப்படுகின்றன....

நல்ல பாஸ்வேர்டை உருவாக்க எளிய வழி!

பாஸ்வேர்டை மறந்து விடுங்கள். இனி பாஸ்பிரேசை பயன்படுத்துங்கள், இதுவே பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான எளிய வழி என்கின்றனர் நிபுணர்கள். அது என்ன பாஸ்பேர்ஸ்? பாஸ்வேர்டு என்றால் கடவுச்சொல்! பாஸ்பிரேஸ் ...என்றால் கடவுவாக்கியம். அதாவது ஒரு வாக்கியத்தில் இருந்து பாஸ்வேர்டை உருவாக்குவது .உதாரணத்திற்கு நான் இந்த பள்ளியில் இந்த ஆண்டு படித்தேன், என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வாக்கியத்தில் ஒவ்வொரு வார்த்தைகளிலும் உள்ள முதல் எழுத்துக்களை...

சாப்ட்வேர் பாதுகாப்பு சேவை அன்செக்கி!

 எப்போதேனும் உங்கள் இணைய முகப்பு பக்கம் உங்களுக்கு தெரியாமலே மாறியிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? அதே போல நீங்கள் பயன்படுத்தும் தேடியந்திரம் திடிரென தானாக மாறியிருக்கிறதா ? இவ்வளவு ஏன் உங்கள் பிரவுசரும் மாறியிருக்கலாம், கவனித்திருக்கிறீர்களா?இந்த மாற்றங்களை நீங்கள் கவனித்து இவற்றுக்கான காரணம் புரியாமல் விழித்திருக்கலாம். அல்லது இந்த மாற்றங்களை கவனிக்கமாலே கூட இருந்திருக்கலாம். அநேகமாக நீங்கள் புதிதாக ஒரு சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்த பிறகு இந்த...

ஆன்லைனில் படம் காட்டலாம்; புதிய இணையதளம்.!

லைவ் ரிலே போல இணையத்தில் லைவாக புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும் ? இந்த அனுபவத்தை சோதித்து பார்க்க லைவ்.பிக்ஸ்.இயோ சேவையை பயன்படுத்தி பார்க்க வேண்டும். அடிப்படையில் புகைப்பட பகிர்வு சேவையான இந்த தளம் இணையம் வழி புகைப்படங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது. புகைப்பட பகிர்வு சேவை தான் ஏற்கனவே நிறைய இருக்கின்றனவே என்று அலுத்துக்கொள்ளும் முன் கவனிக்க, இந்த சேவை புகைப்பட பகிர்வில் புதுமையை கொண்டு வந்திருக்கிறது .எல்லா புகைப்பட...

Xolo Opus Q1000 பேப்லட் ரூ.9,999 விலையில் ஆன்லைனில் கிடைக்கும்!

Xolo- வின் சமீபத்திய பேப்லட்டானா, Opus Q1000, இந்திய சந்தையில் இப்போது கிடைக்கிறது. Xolo Opus Q1000 இ-காமர்ஸ் இணையதளத்தில் ப்ரீ ஆர்டர்கள் மூலம் ரூ.9,999 விலையில் கிடைக்கும். Xolo Opus Q1000 ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது மற்றும் ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம் ஆதரவு கொண்ட இரட்டை சிம் பேப்லட் ஆகும். அது 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே. பேப்லட்டில் ரேம் 1GB உடன் 1.2GHz குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது...

லெனோவா S650, லெனோவா S930 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!

லெனோவா அதன் S தொடரை விரிவுபடுத்தி புதிய இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களான, லெனோவா S650 மற்றும் லெனோவா S930 அறிமுகப்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் புதிய S தொடர் ஸ்மார்ட்போன்கள் அறிவித்துள்ளனர், மற்றும் இந்த புதிய போன்களின் விலையும் வெளிப்படுத்தியுள்ளனர். லெனோவா S650 மற்றும் லெனோவா S930 ஸ்மார்ட்போன்கள்  உலகளவில் கிடைப்பது பற்றி விரிவாக கொடுக்கப்படவில்லை. லெனோவா S650 11.990 ரஷியன் ரூபிள் (சுமார் ரூ 22,600) கிடைக்கும், லெனோவா S930 13990 ரஷியன் ரூபிள்...

வீரம் படத்தின் இசை டிச.20 இல் வெளியீடு!

தல அஜீத்தின் பொங்கல் ஸ்பெஷலாக வரும் ஜனவரி 10 ஆம் வெளியாகும் வீரம் படத்தின் இசை வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகிறது. விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் திருமதி பாரதி ரெட்டி மற்றும் திரு வெங்கட்ராம ரெட்டி தயாரிப்பில்  சிவா இயக்கியுள்ள பிரமாண்டம்மாண படம் வீரம். தல ரசிகர்களை கவரும் வண்ணம் தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைப்பபில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவரது இசை பயணத்தில் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று இயக்குனர் சிவா நம்பிக்கை தெரிவித்துள்ளார்....

இசையில் சர்வதேசத்தையும் அதிர வைக்கும் மானாமதுரை கடம்!

இசையால் வசமானவர்கள், அதை மீட்டும் கலைஞரைப் பாராட்டுவார்கள். இசையை இழையோடவிட்ட இசைக் கருவியைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். ஆனால் முதல்முறை யாக, இசைக்கருவி தயாரிக்கும் கலைஞர் ஒருவருக்கு விருது அறிவித்து கவுரவித்திருக்கிறது மத்திய அரசு. மத்திய மனிதவள ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சங்கீத நாடக அகடமி, 60 ஆண்டுகளை கண்ட அமைப்பு. ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்க ளுக்கு புரஸ்கார் விருதுகளை வழங்கி கவுரவித்து வரும் இந்த அமைப்பு, முதல்முறையாக இந்த...

டிசம்பர் 15 , 2013 திரையிடப்படும் CIFF படங்களின் முன்னோட்டம்!

தேதி : 15 Dec 2013 திரையரங்கம் : WOODLANDS 11:00 am : A Long And Happy Life ரஷ்யாவின் சிறிய கிராமம் ஒன்றில் வசிப்பவன் சாஷ்சா. அவனுக்கு கொஞ்சம் நிலம்.. கொஞ்ச ஒரு காதலி. இப்படி மிக எளிமையாகக் கழிகிற அவன் வாழ்க்கையில் திடீரென புயல். அரசாங்கம் அவன் நிலத்தைப் பறித்துக் கொள்கிறது. சாஷ்சாவுக்கு விவசாயம் தவிர வேறு தொழில் தெரியாது. வேறெங்காவது போ.. கூலி வேலை செய் என்று விரட்டுகிறது அரசு, சாஷ்சா தன் நிலத்தை மீட்பதென முடிவெடுக்கிறான். ஒரு அரசாங்கத்தை எதிர்த்து...