Monday, 7 October 2013

பெட்ரோலில் இயங்கும் இயந்திரங்களை டீசலில் இயக்க முடியாது ஏன்?

பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களைக் கொண்டு இயங்கும் இரு இயந்திரங்களும் ஒரே மாதிரியானவை தான். இருப்பினும் இரண்டும் வெவ்வேறு வடிவ அமைப்புகளைக் கொண்டவை. ஒவ்வொரு எரிபொருளும் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் தான் எரியத் துவங்கும். இதனைப் பற்றல் வெப்பநிலை என்பர். இது பெட்ரோலுக்குக் குறைவாகவும், டீசலுக்கு மிகுதியாகவும் தேவைப்படும்.     அடுத்து பெட்ரோல் இயந்திரத்தில் எரிபொருள்-காற்றுக் கலவையைப் பற்றவைக்கும் செயலை மேற்கொள்வது...

வேலூர் மாவட்டத்தின் வரலாறு!

 வேலூருக்கு கோட்டையும், சிறைச்சாலையும் அடையாளங்கள். சுற்றுபுறக் கிராமங்களுக்கான சந்தை நகரம். கோட்டைக்குள் இருக்கும் கோயில் பிரசித்திப்பெற்றது. இங்கு மாவீரன் திப்பு சுல்தானை கி.பி. 1799 இல் தோற்கடித்த போரில் உயிரிழந்த ஆங்கிலேய தளபதி ஒருவரின் கல்லறை உள்ளது. இந்நினைவிடம் வேலூர் கலகத்திற்கும் சாட்சியாக இருக்கிறது. இங்கு பாலாறும் பொன்னையாறும்  ஓடுகின்றன .வேலூர் மாவட்டத்தின் வெயில் ஊருக்கெல்லாம் தெரிந்த செய்தி. வடஆற்காடு பிரிக்கப்பட்டு அம்பேத்கார்...

இதய பலவீனத்தை துவக்கநிலையில் கண்டறிந்து தீர்வு காணலாம்!

                             : பொதுவாக இதயம், ரத்தத்தை உடல் முழுவதும் வினியோகிக்கும் ஒரு பம்ப்பாக உள்ளது. இதயம் இயல்பாக, இதயத்திற்கு வந்தடையும் ரத்தத்தில் 60  முதல் 80 சதவீதம் ரத்தத்தை வெளியேற்றும். அவ்வாறு வெளியேற்றும் அளவு 50 சதவீதத்திற்கு கீழே குறைந்தால் இதய பலவீனமாக  கருதப்படுகிறது. 35 சதவீதத்திற்கும்...

டயட்டில் இல்லாமல் உடல் எடையை குறைக்க வழிகள்!

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சினை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வது தான். சரி, இப்போது உடல் எடையை குறைக்க கடுமையான டயட்டை பின்பற்றுவதை விட, கீழ் கூறிய எளிய வலியில்லா வழி முறைகளை பின்பற்றுங்கள். காலை உணவை தவிர்த்தால்...

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்த தினம்!

 தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அருகே சங்கம் படைத்தான் காடு என்னும் சிறிய ஊரில் அருணாச்சலனார்-விசாலட்சி தம்பதியருக்கு இளைய மகனாக 1930-ஆம் ஆண்டு பிறந்தார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இவருடைய தந்தை அருணாச்சலனாரும் கவி பாடும் திறமை கொண்டவர். இவருக்கு கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும், வேதாம்பாள் என்ற சகோதரியும் இருந்தனர்.எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் பள்ளிப்படிப்பை மட்டுமே இவரால் மேற்கொள்ள முடிந்தது. பின்னர், திராவிட...

எஸ் பி ஐ-யின் முதல் பெண் தலைவரானார் அருந்ததி பட்டாச்சார்யா !

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) புதிய தலைவராக அருந்ததி பட்டாச்சார்யா நேற்று பொறுப்பேற்றார். நாட்டின் மிகப் பெரிய அரசுடமை வங்கியின் முதலாவரது பெண் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். வங்கியின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு 57 வயதான அருந்ததி, எஸ்பிஐயின் மேலாண்மை இயக்குநர் மற்றும் நிதித்துறை தலைவராக பதவி வகித்தார். இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக இருந்த பிரதீப் சவுத்ரி கடந்த மாதம் 30ம் தேதி ஓய்வு...

தூசுகள் இல்லாமலிருந்தால் பிரபஞ்சமே உருவாகியிருக்காது!

பட்டம், பதவி எல்லாம் எனக்கு ஒரு தூசுக்குச் சமானம்!” என்று ஓர் அரசியல்வாதி சொன்னால் அதன் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் பாராட்டிக் கை தட்டுவார்கள். ஆனால் விஞ்ஞானிகள் “”உண்மைதான், பட்டம், பதவி என்ற தூசுகள் இல்லாவிட்டால் அவரும் இருக்க மாட்டார்!” என்று ஏளனமாகச் சிரிப்பார்கள். ஏனென்றால் தூசுகள் இல்லாமலிருந்தால் பிரபஞ்சமே உருவாகியிருக்காது. பூமியும் இருக்காது. நாமும் இருக்க மாட்டோம். தூசி அவ்வளவு மகத்துவமும் மகாத்மியமும் கொண்டது. தூசு...

தமிழர்களின் வரலாறு!

                 தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம்.    இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள்...

காதல் கோவில் 'கஜுரஹோ' - சுற்றுலாத்தலங்கள்!

     காதல் கோவில் 'கஜுரஹோ'காதல் கோவில் 'கஜுரஹோ'கலைநயத்துடன் எழுந்து நிற்கும் கோவில்களுக்கும் காம விளையாட்டுக்களைச் சித்தரிக்கும் சிற்பங்களுக்கும் பெயர்பெற்றது 'கஜுரஹோ'. இங்குள்ள ஆயிரக்கணக்கான சிற்பங்களில் வெறும் பத்து சதவீதமே காமத்தைச் சித்தரிப்பவை. ஆனால், அத்தனையும் 'பளிச் பளிச்' ரகங்கள். 'காதலையும் காமத்தையும் தெரிந்து கொள்' என்கிற ரீதியில் உருவாக்கப்பட்ட கஜுரஹோ சிற்பங்கள், கி.பி.9- கி.பி.13ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட...

பகிர்ந்து உண்ணவேண்டும். (நீதிக்கதை)

   ஒரு காட்டில் சிங்கம் ஒன்றும் புலி ஒன்றும் நண்பர்களாயிருந்தன..ஒரு நாள் இரண்டும் இரை ஏதும் கிடைக்காமல்...காட்டில் அலையும் சமயம் ஒரு ஆட்டுக்குட்டியைக் கண்டன.இரண்டும் ஒரே சமயத்தில் அந்த ஆட்டின் மீது பாய்ந்து கொன்றன.பின்னர்...அந்த ஆடு யாருக்கு சொந்தம் என இரண்டும் விவாதம் புரிந்து....சண்டையிடத் தொடங்கின.பசியை மறந்து பலத்த சண்டை போட்டுக்கொண்டிருக்கும் சமயம்...நரி ஒன்று அந்த வழியே வந்தது....அது இறந்து கிடந்த ஆட்டை இழுத்துக்கொண்டுபோய்...

தகவல்களை கொட்டித்தரப்போகுது நவீன நிழற்குடைகள்!

சென்னையில் நிழற்குடை உள்ள பஸ் நிறுத்தங்கள் ரொம்பவே குறைவு. எங்கு அதிகமான பயணிகள் வருகிறார்களோ அங்கு நிழற்குடை இருக்காது. ஆளே இல்லாத நிறுத்தங்களில் அல்லது பஸ்சே நிற்காத நிறுத்தங்களில் பளபளவென நிழற்குடை அமைத்திருப்பார்கள். இதற்கு காரணம் வியாபார நோக்கத்துக்காக மட்டுமே நிழற்குடைகள் அமைக்கப்படுவதுதான்.தற்போதுள்ள நவீன நிழற்குடைகளில் பிரபல நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே ஜொலிக்கிறது. ஸ்பான்சர் செய்யும் நிறுவனம் எந்த நிறுத்தத்தில் தனது விளம்பரத்தை...

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10.1 டேப்லட் 2014-ம் ஆண்டு அறிமுகம்!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10.1 என்னும் மேம்படுத்தப்பட்ட தனது புதிய டேப்லட்டினை 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சாதனத்தில் வன்பொருள் தரம் மற்றும் டிஸ்ப்ளே ஆகியவை மிகவும் சிறப்பாக உள்ளது. திக்நெஸ்(thickness) 0.31 அங்குலங்களுடன் வருகின்றது. நல்ல தரமான புகைப்படங்களை எடுக்க 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. வீடியோ அழைப்பு வசதிக்காக 2 மெகா பிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. S Pen ஏர் கட்டளை அம்சத்துடன் வருகின்றது. 1.9GHz...

ரசிகர்களை ஏமாற்றக் கூடாது: அஜித் சிறப்புப் பேட்டி!

   காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பாக்க வர்றவங்களுக்கு, நாம முடிஞ்சவரை ஏமாற்றத்தை குடுக்கக் கூடாது என்று டூப் போடாமல் நடிப்பதற்கான காரணத்தைச் சொல்கிறார் நடிகர் அஜித். | அஜித், விஷ்ணுவர்தன் இணைந்தாலே எதிர்பார்ப்பு எகிறும். 'பில்லா'வில் இணைந்தபோதே, மீண்டும் இணைந்து படம் பண்ண ஆசைப்பட்டார்கள். இப்போது 'ஆரம்பம்' மூலம் அது தொடர்ந்திருக்கிறது. தீபாவளி ரிலீஸுக்கு 'ஆரம்பம்' தயாராகிக் கொண்டிருக்க, 2014ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கும் 'வீரம்'...

கட்டபொம்மனை தூக்கில் போட்ட கயிற்றை காணோமாம்!

திருமங்கலம் தாலுகா அலுவலகம். உள்படம்: வரலாற்று ஆய்வாளர் வெங்கடேசன்   அக்டோபர் 16. பாளையத்துச் சிங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம். அவர் பயன்படுத்திய நாணயங்கள், அணிகலன்கள், வாள் உள்ளிட்ட பொருட்களை சென்னை அருங்காட்சியகத்தில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால், அவரை தூக்கிலிடப் பயன்படுத்தப்பட்ட தூக்குக் கயிறு காணாமல் போய்விட்டதாக சர்ச்சை கிளப்புகிறார்கள்!வெள்ளைய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக பாளையக்காரர்களை அணி திரட்டினார்...

ஆயுள்காப்பீட்டில் சிறந்த பாலிசி எது?

   ஆயுள் காப்பீடு என்பது சில துரதிர்ஷ்டசாலிகளை அதிர்ஷ்டசாலிகள் பலர் பாதுகாப்பதாகும். இதன் மூலம் நாம் முகம் தெரியாத ஒருவருக்கு உதவி செய்கிறோம். இதுவும் ஒரு வகையான சேவை போன்றதுதான்.இன்று பெரும்பாலோர் மற்றவர்களின் வற்புறுத்தலின் மூலமே ஆயுள் காப்பீடு (லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி) எடுக்கிறார்கள். காப்பீடு செய்து கொள்வதில் உள்ள பயனை இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை.இன்ஷூரன்ஸ் ஒரு போதும் முதலீடு ஆக முடியாது அது ஒரு பாதுகாப்பே.மேலும்...

ஜனவரியில் விண்வெளிக்கு திகில் பயணம்!

அமெரிக்காவின் வர்ஜின் கேலக்டிக் நிறுவனம் அனேகமாக ஜனவரியில் விண்வெளி சுற்றுலாவை ஜாம்ஜாம் என்று நடத்திவிடும் என்று தெரிகிறது. 600-க்கும் அதிகமானவர்கள் 150 லட்சம் ரூபாய் கட்டிவிட்டு ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன். உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவர். இவருக்கு சொந்தமான வர்ஜின் குழுமம் பல பெயர்களில் உலகின் பல பகுதிகளிலும் விமான சேவைகள் நடத்தி வருகிறது. “ஊர்விட்டு ஊர், நாடுவிட்டு நாடு விமானம்...

சர்வதேச திரைப்பட விழாவை துவக்கி வைப்பாரா ரஜினி?

   கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவினைத் துவக்கிவைக்க ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2004 முதல் கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் துவக்க விழாவில் முன்னணி நடிகர் ஒருவர் கலந்துகொண்டு துவக்கிவைப்பார். கடந்தாண்டு இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் துவக்கிவைத்தார். இந்தாண்டு இவ்விழாவினைத் துவக்கி வைக்க ரஜினிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள், இந்தாண்டு நவம்பர் 20ம் தேதி...

தமிழனின் தற்காப்பு கலை - வர்மம் ஒரு பார்வை!

                                                                  "வர்மம்”           ஆதி தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலை தமிழ்நாடு, தமிழ் ஈழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதிஇல் ...