Thursday, 7 November 2013

உங்கள் நட்பை உரசிப் பார்க்க…

நட்பு பேணுங்கள் நல்லவையெல்லாம் கூடும்ஒரு நல்ல நண்பன் இருந்தாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர் – ஆங்கிலப் பழமொழி.அன்பாக இருஅனைத்து மதங்களின் போதனை இது. அன்புடன் இருப்பது என்பது பொறுப்புடன் கூடிய ஒரு முடிவு.இன்றைய நட்புகளை எடை போட்டால் பெருமூச்சுதான் பெரிதாய் வரும். ‘உல்லாசத்துக்காக ஒன்று சேர்ந்தவையே நட்பாக இருக்கின்றன’ என்ற ஒருவரின் விமர்சனம் இன்றைய நட்புலகத்துக்கு வெகுவாகப் பொருந்தும்.இன்று பெரும்பாலானவர்களின் அன்பு பாரபட்சம் பார்த்தே ஏற்படுகிறது. தேவையானபோது தொடர்பு கொள்வதும், தேவைக்காக பழகுவதும், கூடிப் பொழுதுபோக்குவதுமே நட்பென்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது....

காணாமற்போன அடையாளங்கள்!

காலச்சக்கரம் எவ்வளவு வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது என்பதை கிராமங்களின் அடையாளங்கள் மாறிவருவதைக் கொண்டே அறிந்து கொள்ள முடியும். கிராமங்களின் தனித்துவமான அடையாளங்களாக விளங்கிய இடங்கள், பொருட்கள், பழக்கவழக்கங்கள் என அனைத்தும் இன்று மாறியும், காணாமலும் போய்விட்டன. இதனால் பலவகையான அடையாளங்களைக் கிராமங்கள் இழந்தாலும் சில பழக்கவழக்கங்களால் தனக்கான அடையாளத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. கிராமங்களில் அன்றாடம் பயன்பாட்டில் இருந்த பொருட்கள், இடங்கள்கூட கால ஓட்டத்தில் காணாமற்போய்விட்டன. ஒருகாலத்தில் புழக்கத்தில் மக்களோடு ஒன்றியிருந்த பொருட்கள்கூட...

ஒவ்வொரு நாட்டினருடன் எப்படிப் பேசுவது?

இங்கிலாந்து- நாட்டினருடன் பேசும்போது நெருக்கமாக நிற்காதீர்கள். எவரையும் திருவாளர், திருமதி, டாக்டர் என்று உரிய மரியாதையுடன் அழைக்க வேண்டும். முறையாக உடை அணிய வேண்டும். அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் கேட்காதீர்கள். குடும்ப விஷயத்திலிருந்து பேச்சைத் தொடங்காதீர்கள். அதை அவர்கள் விரும்புவதில்லை.சீன- நாட்டினருடன் எடுத்த எடுப்பில் வியாபார சமாச்சாரங்களைப் பேச வேண்டாம். உடலோடு ஒட்டி நிற்காதீர்கள். தொட்டுப் பேசாதீர்கள். தேநீரை ரசித்துக் குடியுங்கள். வியாபாரப் பேச்சு வார்த்தைகளின்போது அடிக்கடி தேநீர் தரப்படும். மரபு வழியிலான உடையை அணியுங்கள். வெள்ளை...

சில பழைய வார்த்தைகளும், அதற்கான புதிய அர்த்தங்களும்!

பொதுவாக சொல் அகராதி எனப்படும் டிக்ஸ்னரியில், வார்த்தைகளும், அதற்கு ஏற்ற அர்த்தங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். இங்கும் அதுபோன்ற ஒரு அகராதிதான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது பழைய வார்த்தைகளுக்கு புதிய அர்த்தங்களை கொடுத்துள்ளது.என்னவென்று பார்ப்போம்.சமரசம் – ஒவ்வொருவரும், தனக்குத்தான் மிகப்பெரிய கேக் துண்டு வந்ததாக எண்ணும் வகையில் ஒரு கேக்கை வெட்டும் கலை.கருத்தரங்கு – ஒருவருக்கு வந்துள்ள குழப்பத்தை, பலர் சேர்ந்து அதிகமாக்குவது.கருத்தருங்கு அறை – இங்கு அனைவருமே பேசுவார்கள், ஒருவரும் கேட்கமாட்டார்கள், சொன்ன கருத்தை ஏற்றுக் கொள்ள இயலாது என்று அனைவருமே...

16 அடி உயரம் வளர்ந்த கத்திரிக்காய் மரங்கள்!

கர்நாடகாவில் கத்திரிக்காய் மரத்தில் காய்க்கும் அதிசயம் நடக்கிறது.கத்திரிக்காய் செடிகள் 2 அடி முதல் 3 அடி வரை செடியாக வளர்ந்து காய்கள் காய்க்கும். குறிப்பிட்ட காலத்துக்குள் கத்திரிக்காய் பறிக்கப்பட்டு பின்னர், செடிகளை வேரோடு அகற்றிவிடுவதுதான் வழக்கம். ஆனால், வடகர்நாடகா மாவட்டம், சிரசி தாலுகாவில் வழக்கத்துக்கு மாறான அதிசயம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள முண்டகூடா கிராமத்தை சேர்ந்தவர் சசி. இவர் தனது நண்பரின் நிலத்தில் விதைத்திருந்த கத்திரிக்காய் செடிகளை...

முதுமையை தடுக்கும் செம்பருத்தியின் மருத்துவ பலன்கள்!

செம்பருத்தி மிதவெப்ப மற்றும் வெப்ப மண்டல பகுதிகளில் வளரும் அழகிய பூச்செடி வகையைச் சேர்ந்ததாகும்.பல்வேறு வகைகளில் வளரும் இந்த செடியில் தனித்தன்மை வாய்ந்த அழகிய பூக்கள் பூக்கும்.செம்பருத்தி அபரிமிதமான மருத்துவ குணங்கள் உள்ள செடியாகும்.செம்பருத்தி இலைகள் மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு வழிமுறைகளிலும் கையாளப்பட்டு வருகிறது.செம்பருத்தி பூவிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் புகழ் பெற்று விளங்குகிறது.ஆயுர்வேதத்தில், சிவப்பு மற்றும் வெள்ளை செம்பருத்தி உயர்ந்த மருத்துவ குணம் கொண்டவைகளாவும், இருமல், முடி...

காப்பி அருந்துவதற்கு சிறந்த நேரம் எது தெரியுமா?

நோய் நொடிகளற்ற மனித வாழ்வை நோக்கி செல்ல இன்று பல்வேறு ஆராய்ச்சிகள் இடம்பெற்றுவருகின்றன.இதன் ஒரு அங்கமாக உடலுக்கு உற்சாகத்தை வழங்கும் காப்பி குடிப்பதற்கு சிறந்த நேரம் காலை 9.30 இருந்து காலை 11.30 வரையான காலப்பகுதி என நரம்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நேரத்திலேயே காப்பியில் காணப்படும் காபைன் (caffeine) எனும் பதார்த்தம் உடல் இயக்கத்தினை ஒழுங்குபடுத்தும் கோட்டிசோல் (cortisol) ஓமோனுடன் சிறந்த முறையில் செயற்படக்கூடியதாக இருக்கும் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.கோட்டிசோல் ஆனது தூக்கத்திலிருந்து எழும்பும்போது மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகின்றது...

பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கு ஒருசில உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டியிருக்கும்.அதேப் போல் குழந்தைப் பிறந்த பிறகு ஒருசில உணவுகளின் மீது ஆசை அதிகம் எழும்.அதிலும் அத்தகைய உணவுப் பொருட்கள் அனைத்தும் கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடக்கூடாதவையாக இருக்கும். ஏனெனில் அவற்றில் கலோரிகள் அதிகப்படியாக இருப்பதால், அவற்றை தவிர்க்க வேண்டுமென்று சொல்வார்கள்.ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை பிரசவத்திற்கு பின் பெண்கள் எந்த ஒரு பயமின்றியும் சாப்பிடலாம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.பாஸ்தாஇத்தாலியன் உணவுப் பொருட்களில்...

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டைப் பாதுகாக்கும் வழிகள்!

கம்ப்யூட்டர்களுக்கு மால்வேர் புரோகிராம்களைத் தயாரித்து அனுப்பும் ஹேக்கர்கள் எனப்படுவோர் அதிகம் குறி வைப்பது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத்தான் என்பது ஏறத்தாழ அனைவரும் ஏற்றுக் கொண்ட தகவலாகும். மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதனை அறிந்து, அதற்கான பேட்ச் பைல்களை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டுள்ளது. அண்மையில் கண்டறியப்பட்ட zero day exploit என்பதனை, மைக்ரோசாப்ட் நிறுவனம் அவசரமான ஒரு பேட்ச் பைலை வெளியிட்டு சரி செய்தது. இருப்பினும் அடுத்த ஹேக்கர் தாக்குதல் எப்போதும் நிகழலாம் என்ற நிலையிலேயே நாம் இருக்கிறோம். எனவே தான், எப்போதும் விண்டோஸ் சிஸ்டத்திற்கான அப்டேட்...

ஷாருக்கான் - வாழ்க்கை வரலாறு (Biography)

                                                                      ஷாருக்கான்’ என்றும் ‘எஸ்.ஆர்.கே’ (SRK) என்றும்...

தெரிந்து கொள்ளுங்கள்!

1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். [SCUBA--self Contained Underwater Breathing Apparatus]2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை,நீலம்,சிகப்பு4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள்...

இணைய தளங்களின் வகைகள்!

.com -- இது வணிக நிறுவனங்களைக் குறிக்கும். ஆனாலும் தனி நபர்கள் கூட இதனைப்பெற்றுள்ளனர். .net -- நெட் ஒர்க் சேவையாளர்களை குறிப்பது. ஆனாலும் பிற நிறுவனங்களும் இதனைப் பெற்றுள்ளன்.... .gov -- அரசுத் துறைகளுக்கானது. முதலில் அனைத்து நாட்டு அரசுத்துறைகளும் பயன்படுத்திக்கொண்டன. இப்பொழுது அமெரிக்க அரசு ம்ட்டுமே பயன்படுதலாம். .edu -- கல்வி நிறுவனங்களுக்கானது (பள்ளிகள் அல்ல). .mil -- அமெரிக்க அரசின் இரானுவத்துறை மட்டுமே பயன்படுதலாம்.int -- இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையே ஏற்படும் உடன்படிக்கைகளின் அடிப்படையில் நிறுவப்வபட்டுள்ள.பதிவு பெற்ற அமைப்புக்கள் மட்டுமே...

அரைகுறை காமெடியன்கள் கவுண்டரின் கால் தூசிக்குக் கூட நிகரானவர்கள் கிடையாது!

கவுண்டமணி என்றாலே நக்கல், நையாண்டி, யாரையும் மதிக்காத பேச்சு என்று எல்லோர் மனதிலும் வேரூன்றிப் போயிருக்கும் அம்சங்கள், ஆனால் இவை அனைத்தையும் கடந்து கவுண்டமணி என்பவர் மற்ற சராசரி நகைச்சுவை நடிகர்களைப் போல் தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்ட...ுக் கொள்ளாதவர். அவர் சில காட்சிகளில் யாரும் சொல்லத் துணியாத சமூக, அரசியல் அவலங்களை வெகு இயல்பாக சொல்லிவிட்டுச் செல்பவர். ஆனால், அவரை வெறும் நக்கல் மன்னன் என்ற அளவில் மட்டும் மக்கள் அவரை உருவகம் செய்துவிட்டனர். அப்படி நாம் கவனிக்கத் தவறிய கவுண்டமணியின் படங்களில் ஒன்றுதான் "ஒன்னா இருக்க கத்துக்கனும்". இந்தப்...

பல பயனுள்ள இணையத்தளங்கள்!

கம்பியூட்டரைப் பயன்படுத்துவதற்கான அளப்பரிய குறிப்புகளை நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை.அதனால், எளிய முறையில் குறிப்பு களைத் தரும் தளங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பக் கருவிகள் குறித்த சில தளங்களைத் தற்போது பார்க்கலாம்.www.quotedb.com: நீங்கள் சிறந்த பேச்சாளராக வேண்டுமா? உங்கள் உரை வீச்சுகளில் அடிக்கடி பல பெரிய அறிஞர்கள் மற்றும் பெய தலைவர்களின் கூற்றுக்களைக் கோடிட்டுக் காட்ட வேண்டுமா? அப்படியானால் அவற்றுக் கான சிறந்த தளம் இதுதான். 60 வகை பொருள்களில், ஏறத்தாழ 4,000 புகழ் பெற்ற மேற்கோள் உரைகள் உள்ளன.சிறந்த பேராசியராக, மாணவர்களிடம்...

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது....?

வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்,அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்,ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம்...

தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி?

மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில் அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.சிலர் போன் தண்ணீரில் விழுந்த உடன் அவசர அவசரமாக ரெண்டு உதறு உதறி விட்டு உடனே ஆன் செய்து விடுவார்கள்.இதை மட்டும் நீங்கள் செய்யவே கூடாது.உங்கள் போனில் இருந்து பாட்டரி, சிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். பின்னர் துணி அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு வெளி பாகங்களை துடைக்கவும்.உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால் அதனை Suction...

சிக்கன் பற்றிய சீரீயஸ் ரிப்போர்ட்!

காக்கா பிரியாணி துன்னா காக்கா குரல்வராம உன்னிக்கிருஷ்ணன் கொரலா வரும்? என்பது ரன் படத்தில் விவேக் நடிக்கும் ஒரு நகைச்சுவை காட்சி, அதே போன்ற ஆனால் உண்மையான அதிர்ச்சியான தகவல்கள் தான் இது, நீங்கள் சாப்...பிடுவது கெட்டுப்போன கோழியாக கூட இருக்கலாம்.அடிக்கடி ஒரு செய்தி சென்னை பத்திரிக்கைகளில் வருகிறது, நாம் திரைப்பட பகுதி மற்றும் சோசியத்தை\ஆண்மீகத்தை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாத காரணத்தால் இந்த செய்தி நமது கண்களில் படுவதில்லை, அது “கெட்டுப்போன மாமிசம் எழும்பூர் ரெயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டது, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை”, பிறகு மீண்டும்...

மணப்பெண் கை வண்ணத்தில் திகிலூட்டிய திருமண கேக்!

பலகாலமாகவே பிறந்த நாள் முதல் திருமண விழா வரை தனி மனித வாழ்வின் அனைத்து முக்கிய வைபவங்களிலும் கேக் இடம் பிடித்து விடுகிறது.இது 15-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் கண்டு பிடிக்கப்பட்ட சிற்றுண்டி உணவாம். இங்கிலாந்தில் அப்போது நிலவிய தட்பவெப்ப நிலைக்கேற்ப இத்தகைய கேக் தயாரிக்கப்பட்டு வந்தது. அதை அடிப்படையாக வைத்தே தற்போதும் கேக்கில் மதுபானங்கள் மற்றும் உலர் பழங்கள் கொண்டு சிறப்பு கலவையாக உருவாக்கப்படுகிறது.அத்துடன் ஆங்கிலேயர் தொடக்க காலத்தில் கேக் தயாரித்தபோது...

அதிக கோடீசுவரர்களை கொண்ட நாடுகளில் 6-வது இடத்தைப் பிடித்தது இநதியா!

பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை மீறி பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுமார் 200 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டில் இதுவரை 2 ஆயிரத்து 170 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர்.அதே சமயம் இந்திய கோடீஸ்வரர்களில் 3 சதவீதம் மட்டுமே பெண்கள் உள்ளனர். இது மற்ற நாடுகளை விட மிக குறைவு என்று வெல்த் எக்ஸ் மற்றும் யுபிஎஸ் என்ற பன்னாட்டு நிதி நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.இந்த ஆண்டில் இதுவரை 18 புதிய மெகா பணக்காரர்களை...

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்::ஏனிந்த அவசரம்- அது என்ன ரகசியம்..?

தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அவசரமாக திறக்கப்பட்டுள்ளது. என்ன நடத்தென்றால்…..இப்படி ஒரு விழாவே நடத்தக்கூடாது. இப்படி ஒரு நினைவு சின்னமே கூடாது என்பது சோனியா கும்பளின் கனவு, நினைவு. அதன் பேரில் மத்திய உளவு நிறுவனம் ‘நிறைய’ வேலைகளை செய்தது. ஒட்டுகேட்பும் நடந்தது. இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பழ.நெடுமாறன் ஐயா நீதிமன்றத்தை நாடினார். அதன் பேரில் விழாவை நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. கூடவே இதில் மத்திய அரசின் கருத்து என்ன எனவும்...

“அம்மா இன்னும் நெருக்கம்” .- கமல் நேர்காணல்!

நடிகர் கமல்ஹாசனின் திரையுலக ஐம்பதாம் ஆண்டு 2009-ல் கொண்டாடப்பட்டபோது அவரை நானும் நண்பர் சுந்தரபுத்தனும் செப்டம்பர் மாதத்தில் சந்தித்து அப்போது பணிபுரிந்த த சண்டே இந்தியன் இதழுக்காக ஒரு நீண்ட பேட்டி எடுத்தோம். இரண்டுநாட்கள் தொடர்ந்து அவரை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சந்தித்துப்பேசினோம். சாதாரண பேட்டி என்றுதான் நேரம் வாங்கியிருந்தோம்.நேரில் சந்தித்தவுடன் இது உங்கள் ஐம்பதாவது கலையுலக ஆண்டு என்பதால் உங்களிடம் ஐம்பது கேள்விகள் கேட்கவிரும்புகிறேன் என்றபோது...

சர்க்கரை நோய்- சில கசப்பான உண்மைகள்!

முன் ஒரு காலத்தில்,’பணக்காரர்களின் வியாதி’ என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதை ‘வாழ்க்கைமுறை நோய்’ என்று கூறுவர். சர்க்கரை நோய் எல்லோருக்கும் வரும் என்று இல்லை. அப்படியே வந்தாலும் தடுத்துவிடலாம். நாம் சாப்பிடும் உணவு, வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன.ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை...