Tuesday, 1 October 2013

பிரசவத்துக்கு பின் அழகாக எளிய உடற்பயிற்சிகள்!

பத்து மாதங்கள் குழந்தையை கருவில் சுமக்கும் போது பத்திரமாக பார்த்துக் கொண்ட தாய்மார்கள், குழந்தை பிறந்த பிறகு குழந் தையின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல தங்கள் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் உணவு ஆலோசகர் அம்பிகா சேகர்.குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு தாயும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கிறார். எனவே பிரசவம் முடிந்த  பிறகு உணவு மற்றும் உடற்பயிற்சியில் அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். சாதாரணமாக தேவைப்படும்...

உயிர் தியாகத்தில் உருவான அமராவதி அணை!

திருப்பூர், கரூர் மாவட்டத்தின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதில் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை முக்கிய பங்கு வகிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பல கிளை நதிகளாக உருவாகி சின்னாறு அருகே சங்கமித்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து பின்னர் காவிரியில் கலக்கிறது.சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கில் அமராவதி ஆற்றை ஒட்டிய பல கிராமங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. 1950களில் தமிழகத்தில்...

திகார் ஜெயிலில் முன்னாள் உலக அழகி ஒலிவியா!

அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் உலக அழகி ஒலிவியா, டெல்லி திகார் சிறையை சுற்றிப்பார்த்தார்.சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் குறித்து ஒலிவியா கேட்டறிந்தார்.இதையடுத்து, சிறைச்சாலையில் கைதிகளின் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சிகளை அவர் கண்டுரசித்தார். நிகழ்ச்சியின் முடிவில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை கைவிடும் வகையிலான உறுதிமொழி எடுக்கப்பட்டது. கைதிகளுடன் சேர்ந்து ஒலிவியாவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.அமெரிக்காவை...

கூகுள் நிறுவனம் கூகுள் கிளாஸ் என்ற மூக்குக் கண்ணாடி அறிமுகம்!

கூகுள் நிறுவனம் கூகுள் கிளாஸ் என்ற மூக்குக் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தருகிறது கூகுள் கிளாஸ். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக் கூடிய கருவி கூகுள் கிளாஸ்.கூகுள் கிளாஸ் அம்சங்கள்: 25 இஞ்ச் கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு இணையானது,16 ஜிபி சேமிப்பு வசதி, கூகிள் கிளவுட் சேமிப்பு...

இந்திய அஞ்சல் துறை – க்ம்பளிட ரிப்போர்ட்!

நூறாண்டுகளுக்கு முற்பட்ட நீராவி இரயில் எஞ்சினை இரயில்வேத்துறை இன்னமும் பாதுகாத்து வருவது போல், பாரம்பரியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைத் தொல்லியல் துறை அடைகாப்பது போல், நமது பெருமைக்குரிய மக்கள் சேவைகளிலொன்றாக எண்ணியாவது தந்தி சேவையைத் தக்க வைத்திருக்கலாம். அதுதான் இல்லை என்றாகி விட்டது. சரி. தபால் சேவையையாவது ஒழுங்காகக் கொடுக்கலாம் அல்லவா? கிளை அலுவலகங்கள் மூடப்படுவதும், ஊழியர் பற்றாக்குறையென்று சங்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்வதும்...

மனிதனை போன்றே ரோபோட்டுக்கும் மூளை! இந்திய விஞ்ஞானியின் அபார கண்டுபிடிப்பு!

ரோபோவும் மனிதனை போல தன்னிச்சையாக செயல்படக்கூடியவாறு மூளையை அமெரிக்க புகழ் பெற்ற இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி கண்டுபிடித்துள்ளார்.மிசோரி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து பெருமை பெற்ற ஜகன்னாதன், ரோபோக்கள் பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார்.இவர் தலைமையிலான குழுவினர் பல வகையில் ரோபாட் செயல்பாடுகளை கணக்கிட்டு அதற்கு தனி கட்டளைகளை பிறப்பித்து, தானியங்கி முறையில் மட்டுமின்றி சுயமாக சிந்தித்து...

கணனியில் செய்யப்பட்ட மிகப் பெரிய தவறு! பில்கேட்ஸ் விளக்கம்!

 கணனி வளர்ச்சிக்கு பங்காற்றிய ஜாம்பவான்களில் பில்ஹேட்ஸும் ஒருவர்.இவர் உருவாக்கிய விண்டோஸ் இயங்குதளத்தில் Ctrl+Alt+Delete எனும் கட்டளை மூலம் லொகின் செய்வதற்கு அல்லது Task Manager இனை பெறும் வசதி தரப்பட்டுள்ளது.எனினும் அவ்வாறு தரப்பட்டுள்ளமை தவறு என்று தற்போது விளக்கமளித்துள்ளார் பில்ஹேட்ஸ்.இதற்கு காரணம் இந்த மூன்று விசைச்சாவிகளையும் ஒரே கையினால் பயன்படுத்த முடியாமல் இருப்பதே ஆகும் என தெரிவித்துள்ளார்.Windows' CTRL-ALT-DEL was a good 'mistake'Microsoft founder Bill Gates told a group of students at a Harvard fundraiser that making the CTRL-ALT-DEL...

எல்ஜி நிறுவனம் புதிய எல்ஜி ஜி2 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

எல்ஜி நிறுவனம் ஜி2 வரிசையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. 16ஜிபி வெர்ஷன் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.41,500, 32ஜிபி வெர்ஷன் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.43,500 என்றும் இற்நிறுவனம் தெரிவித்துள்ளது. எல்ஜி ஜி2 ஸ்மார்ட்போன் கறுப்பு மற்றும் வெள்ளை ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கும். எல்ஜி ஜி2 ஸ்மார்ட்போன் அம்சங்கள்: 5.2 இன்ச் டிஸ்பிளே,423 அடர்த்தி பிக்சல்கள், 2.26GHz குவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர் 13 மெகாபிக்சல்...

இவர் யார்? உனக்குத் தெரியுமா?

மகாத்மா காந்தியின் இயற்பெயர் மோகன்தாசு கரம்சந்த் காந்தி. இவர் 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.மோகன்தாஸ் காந்தி 1869-ம் ஆண்டு அக்டோபர்...

ஒரே மரத்தில் 250 வகை ஆப்பிள்கள் காய்க்கும் அதிசயம் ஜெர்மனி தோட்டக்காரர் சாதனை!

ஜெர்மனியில் ஒரே மரத்தில் 250 வகையான ஆப்பிள்களை காய்க்க செய்யும் வினோத மரத்தை வளர்த்து தோட்டக்காரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.ஜெர்மனியில்  உள்ள வெஸ்ட் சஸ்சக்ஸ் பகுதியில் சித்ஹாம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பவுல் பார்னெட் (வயது 40). இவரது தோட்டத்தில் வினோத மரம் ஒன்றை வளர்த்துள்ளார். அதில் உலகில் உள்ள பல்வேறு வகையான 250 ரக ஆப்பிள்கள் ஒரே மரத்தில் காய்க்கின்றன. இந்த மரம் தற்போது ஜெர்மனியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இதுகுறித்து பவுல் பார்னெட் கூறுகையில்,...

அன்னிய கிரகங்களின் எண்ணிக்கை 1,000ஐ நெருங்கலாம்!

சூரிய மண்டலத்திற்கு அப்பால் இருக்கும் கிரகங்களை ஆராய ஆராம்பித்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன, தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அன்னிய கிரகங்களின் எண்ணிக்கை 1,000ஐ நெருங்கலாம் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கிரகங்களின் எண்ணிக்கை பற்றி சில நாட்களிலோ அல்லது சில வாரங்களிலோ தெரியலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதுவரை 900க்கும் மேற்பட்ட அன்னிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய குடும்பத்திற்கு வெளியேயுள்ள கோள்கள்...

சேலம் மாம்பழம், திண்டுக்கல் பூட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உட்பட 7 பொருட்களுக்கு புவிசார் குறியீடு!

 சேலம் மாம்பழம், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, திண்டுக்கல் பூட்டு உட்பட தமிழகதத்தில் மேலும் 7 பொருட்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கவுள்ளது.தஞ்சையில் அறிவுசார் சொத்துரிமை வக்கீல் சங்க தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற அரசு கூடுதல் வக்கீலுமான சஞ்சய் காந்தி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புவிசார் குறியீட்டு பொருள்கள் சட்டம் 2003ல் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கைவினை கலைஞர்களை பாதுகாக்கவே...

ஆட்டம் காணும் அமெரிக்கா! அப்செட்டில் ஒபாமா!! அரசு நிறுவனங்களுக்கு மூடு விழா!!!

வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு அமெரிக்க பார்லிமென்ட் அங்கீகாரம் கொடுக்காததால் அதிபர் ஒபாமா அரசு கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதில் இருந்து தப்பிக்க அரசு நிறுவனங்களை மூடி விட முடிவு செய்துள்ளது. கடந்த 17 ஆண்டு கால வரலாற்றில் இது போன்று அமெரிக்காவில் நடப்பது இந்த முறை மட்டுமே. முன்னாள் அதிபர் கிளிண்டன் ஆட்சி காலத்தில் 21 நாட்கள் அரசு நிறுவனங்கள் மூடிக்கிடந்தன. இப்போது அமெரிக்க தள்ளாட்டம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கச்சா எண்ணெய் விலை கிடு , கிடுவென உயரும். இதனையடுத்து பொருளாதாரம் பல கட்டங்களாக பாதிக்கப்படும் ஸ்திரமற்ற...

தமிழக் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.தற்போது, elections.tn.gov.in/searchid.htm என்ற இணையதளத்திலும் பெயரை வாக்காளர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம் என்றும இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், மாற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம் என்றும், வாக்காளர் அட்டையில் திருத்தப் பணிகளுக்கு அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். மேலும்...