Sunday, 1 December 2013

கண்டுபிடிப்புகளும் - கண்டுபிடித்தவர்களும்!

 • இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுபவர் - வில்டன் ஸர்ஃப்• (WWW) World Wide Web – எனும் இன்டர்நெட் தாரக மந்திரத்தை உருவாக்கியவர் திமோத்தி ஜான் பெர்னர்ஸ்-லீ• World wide Web எனபதன் துவக்க கால பெயர் - என்க்வயர்• கணினி வழி தகவல் பரிமாற்றத்தில் “புன்னகை தவழும் முகம்” எனபதைக் குறிக்க    எனும் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதை முதன்முதலாக (1982)ல் பயன்படுத்தத் துவங்கியவர் - ஸ்காட் இஃபால்மன் எனும் பேராசிரியர்.• கூகுள் தேடுபொறியை உருவாக்கியவர்கள்...

ஏலியன்ஸ் உண்மையா அல்லது பொய்யா ?

வேறு கிரகங்களிலிருந்து நம் பூமிக்கு வரும் மனிதர்களைப் பற்றி பல கதைகளும் ஃபிக்ஸன் மூவிகளும், விஞ்ஞான கட்டுரைகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது. என் சிந்தனையிலும் அப்படி வேற்றுக் கிரகவாசிகள் அடிக்கடி வந்து போவதுண்டு ஆனால் அவர்கள் முற்றிலும் வேறு பட்டவர்கள்.பொதுவாக வேற்றுக்கிரக வாசிகள் என்றால் பெரிய ஓவல் தலையும் நீல முட்டைக் கண்களும் நீண்டு மெலிந்த கை கால்களும் கொண்டவர்கள். வேறு கிரகங்களிலிருந்து பறக்கும் தட்டு போன்ற வாகனங்களில் வான் வழியே வந்து இறங்குவார்கள் என்று தான் எண்ணுகிறோம். இது முழுக்க ஏதோ ஒரு ஓவியரின் கற்பனை தான்.வேற்று உயிரினங்கள்...

பொன்மொழிகள்!

 1. கோட்டையுள்ள நகரைக் காட்டிலும் வலிமையுள்ளது இதயம்.  - இங்கிலாந்து 2. இதயம் பொய் சொல்லாது.  - ஹாலந்து 3. மறைத்து வைக்கப்பட்டுள்ள மனிதனின் செல்வம் இதயம். - பல்கேரியா 4. இதயத்தின் மகிழ்ச்சியை முகத்தின் நிறத்தில் காணலாம்.  - இங்கிலாந்து 5. காயம்பட்ட இதயத்தைக் குணப்படுத்துவது  கடினம்.  - கதே 6. இதயத்தின் சாட்சியம் அதிக வலிமை உள்ளது.  - துருக்கி 7. தன் இதயத்தை அறிந்து கொண்டவன்  கண்களை...

பிறந்த நாளிலேயே பறக்கும் ஒரே பறவையினம்..

 ஆஸ்திரேலியாவின் “மாலிபவுல்’ என்னும் பறவை ரொம்ப வினோதமானது. இந்தப் பறவைக்கு பெற்றோர் யார் என்றே தெரியாது.ஏனெனில், தாய்ப்பறவை முட்டைகளை மண்ணுக்குள் போட்டு மூடிவைத்து விட்டு சென்று விடும்.குஞ்சுகளோ பொரிந்து வெளியே வந்தவுடன் அப்படியே பறக்க ஆரம்பித்து விடும்.அந்த அளவிற்கு அதற்கு இறகுகள் வளர்ந்து விடுகின்றன.இதனால் அதன் பெற்றோர் யாரென்றே அந்தப் பறவைக்கு தெரிவதில்லை. தாய்ப்பறவையும் தனது முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வந்ததா...

அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்?

பட்டங்கள் கொடுப்பது பற்றி அமெரிக்க அரசியல் சட்டம் என்ன சொல்கிறது?அரசியல் சட்டம் ஆர்ட்டிகிள் 1, பிரிவு 9:8“அமெரிக்க அரசு எந்த பட்டத்தையும் யாருக்கும் வழங்க கூடாது. அமெரிக்க அரசில் பணியாற்றும் யாரும் எந்த வெளிநாட்டு மன்னர், அரசிடமும் எந்த பட்டத்தையும் பெறக்கூடாது…”அமெரிக்க தேச தந்தையர் அன்றைய காலகட்ட ஐரோப்பாவில் “பிரபு, மை லார்ட், ஹிஸ் எக்சலன்சி” என அழைக்கும் மரபை கடுமையாக வெறுத்தார்கள். தாமஸ் பெயின் அது குறித்து கூறுகிறார்:“பட்டங்களும், அடைமொழிகளும், மைலார்ட் என்பதுபோன்ற விளிப்புகளும் அப்படி அழைக்கபடுபவரை பீடத்தில் வைத்து, அந்த ஆபாச விளிப்புகளில்...

ஒவ்வொன்றும் ஒருவிதம்!

 புகழ்பெற்ற நாவலாசிரியர் அலெக்சாண்டர் டூமாஸ் விசித்திரமான மன இயல்புகளையும், வியப்படையச் செய்யும் கொள்கைகளையும் உடையவர். இவருடைய வாழ்க்கை மிகவும் சுவையானது.-இவர் எழுதும் காகிதம், மை, பேனா போன்றவைகளில்கூட சில பழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தார்.-நாவல் எழுதுவதானால் அதற்கென்றே பிரத்தியேகமாக உள்ள பேனாவினால் நீலநிறக் காகிதத்தில் மட்டுமே எழுதுவார். கவிதைகளை எழுதுவதற்குத் தனியாக சில பேனாக்களை வைத்திருப்பார். பத்திரிகைகளுக்கு எழுதும் கட்டுரைகளை ரோஜா நிறம்கொண்ட...

UNESCO அறிவித்த உலக நாடுகளின் சிறப்புக் கல்வித்தரம்!

1. பிழையின்றிப் படித்தல் – நியூசிலாந்து2. குழந்தைப் பருவத்தில் கல்வி ஈடுபாடு – இத்தாலி3. கணிதக் கல்வி – நெதர்லாந்து4. விஞ்ஞானக் கல்வி – ஜப்பான்5. பன்மொழிகளிலும் கல்வியறிவு – நெதர்லாந்து6. கலை சம்பந்தப்பட்ட கல்விகள் – அமெரிக்கா7. உயர்நிலைப் பள்ளிகளில் கல்வித்தரம் – ஜெர்மனி8. ஆசிரியர் பயிற்சி – ஜெர்மனி9. மேல்நிலைக் கல்வி – அமெரிக்கா10. முதியோர் கல்வி – ஸ்வீட...

சைவம் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

 சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:நச்சுக்களை அகற்றுபவை:நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை.உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரத சத்து இருக்கும் அளவுக்கு நார்சத்து...

இதுதான் தாம்பூலம்!

 “இதுதான் தாம்பூலம்”…வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மட்டும் தாம்பூலம் அல்ல…தரமான தாம்பூலம் என்பது -ஒரு பாக்குஐந்து வெற்றிலைசிறிது கஸ்தூரிபச்சைக் கற்பூரம்சங்கச் சூரணம்இரண்டு கிராம்புசிறிது ஜாதிக்காய்மூன்று வால் மிளகுஇந்தக் கலவை முறையில் சேர்த்துப் போட்டுக் கொள்வதுதான் தரமான தாம்பூலம் ஆகு...

நண்டுகள் பலவிதம்!

 கடலிலோ, நிலத்திலோ வாழும் எந்த நிறத்திலும் இருக்கும் பக்கவாட்டில் நீந்தும், நடக்கும் தன் வீட்டை தானே சுமக்கும் அது என்ன? வேறென்ன? நண்டுதான்! சரியாய் யூகித்தீர்களா…(குட்டி நண்டுகளா!)* நண்டு தன் பின் நான்கு ஜோடி கால்களை பக்கவாட்டில் வேகமாய் நகர பயன்படுத்துகிறது.* இந்த முதுகெலும்பு எட்டுக்கால் பூச்சி நண்டு பெரும்பான்மையான எதிரிகளிடமிருந்து அதன் ஓட்டினால் பாதுகாக்கப் படுகிறது.* கால்கள் தேய்ந்தோ, உடைந்தோ போனால் நண்டுகள் புதிதாய் வளர்த்து கொள்ளும்.*...

ஒருவர் உங்களைத் திட்டி விட்டால்?

ஒருவர் நம்மீது கோபப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்களும் பதிலுக்கு அவரை விட அதிகமாகக் கோபப்படுவீர்கள். ஒருவர் உங்களைத் திட்டி விட்டால்….. அவரை விட அதிகமாக, அவரை மோசமாகத் திட்டுவீர்கள் இல்லையா? இது தான் நம்முடைய மனநிலை. இதனால் உங்களுடைய கோபத்திற்குத் தற்காலிக வடிகால் கிடைத்தாலும் இந்த மனநிலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது. பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாத நபர்களிடம் இந்த மாதிரி நடந்து கொள்கிறீர்கள். ஆனால் அலுவலகத்தில் உங்களுக்கு...

மர்மத்தீவு ஒரு பார்வை!

நம்முடன் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் திடீரென பேசிக்கொண்டிருக்கும் போதே மாயமாய் மறைந்து விட்டால் எப்படி இருக்கும் ? பயமும், வியப்பும், திகிலும், பிரம்மையும் கலந்த அந்த நிகழ்வை எப்படி விளக்க முடியும்.அப்படி மனிதர்களை மாயமாய் மறையச் செய்யும் ஒரு தீவே இருந்தால் ? திடுக்கிட வைக்கிறது இந்த கேள்வி. கூடவே ஒரு நல்ல ஹாலிவுட் திகில் படத்தைப் பார்க்கும் பரபரப்பையும் தருகிறது.கென்ய ருடால்ஃப் ஏரியில் இருக்கிறது ஒரு குட்டி தீவு. என்வையிட்டினெட் தீவு என அழைக்கப்படும் அந்த தீவின் பொருள் “திரும்ப முடியாது” என்பது தான் என்கின்றனர் உள்ளூர் வாசிகள்.ஒரு காலகட்டத்தில்...

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

 ஒன்றாக கல்லூரியில் படித்து, பட்டம் வாங்கி வேலை தேடி கொண்டிருக்கும் நண்பர்கள் நாங்கள். மாநகரில் மூலைக்கு மூலை வசித்தாலும், ஒரு குறிப்பிட்ட நாளில் சந்தித்து, உரையாடி, ஆறுதல் தேடுவது வழக்கம். எங்கள் குழு நண்பனொருவனை இரண்டு வாரங்களாக காணவில்லை. என்னமோ ஏதோவென்று பதறி, அவனைக் காண, அவன் வீட்டுக்கு சென்றோம். வீட்டில் அவன் இல்லை. இரண்டு தெரு தள்ளி, ஒரு வீட்டில் அவன் இருப்பதாக கூறினர். அங்கு சென்றோம்.குறிப்பிட்ட வீடு பூட்டப்பட்டிருக்க, நண்பனும் இன்னும்...

தாயன்பு!

தாய் இல்லாமல் நாம் இல்லை; தாய் இன்றி உலகில் எவரும் பிறப்பதில்லை. என்பது உலகறிந்த உண்மை. தாய் எனும் சொல் நாடு, மண் ஆறு, கடல், இயற்கை…… மேலும் பலவற்றிற்கு உவமையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் தாய் மீது அன்பு செய்வது போல் நாட்டின் மேலும், மனிதர்கள், இயற்கை மற்றும் இதர உயிரினங்கள் மீதும் அன்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே. இவ்வலைப் பூ தாய் மடியின் இதத்தையும், தாய் நாட்டின் மடியை பங்கிடுவதில் சகோதர இனங்களுக்கிடையே வலுப்பெற்ற ஆயுதக் கலாச்சாரத்தையும், இதனால் தாய் நாட்டிற்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளையும், கடல் தாயின் கோர தாண்டவம், கலாச்சார சீரழிவுகள்,...

ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்..!

நடிகர் : விமல், பார்த்திபன்நடிகை : மனிஷா, பூர்ணாஇயக்குனர் : கரு.பழனியப்பன்இசை : வித்யாசாகர்ஓளிப்பதிவு : அர்பிந்து சாராபழனி-பண்ணக்காடு வழித்தடத்தில் செல்லும் ஒரு அரசு பேருந்தை மையமாக வைத்து கதை ஆரம்பிக்கிறது. இந்த பஸ் பழனியில் இருந்து தினமும் மாலை பண்ணக்காடுக்கும், மறுநாள் காலை பண்ணக்காட்டில் இருந்து பழனிக்கும் செல்லும். இந்த பஸ்சின் டிரைவர் பார்த்திபன் சீனியர். கண்டக்டராக வரும் விமல் வேலைக்கு புதுசு.இந்த பஸ் ஒரு தடவை மட்டும் செல்வதால், டிரைவர்-கண்டக்டர்...

மருந்துக் கடையின் பொறுப்பான செயல்!

   நான், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். சமீபத்தில், உடல் நல குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். மருத்துவரின் ஆலோசனையை பெற்று, அவர் அளித்த மருந்து சீட்டுடன், அருகில் இருந்த மருந்து கடைக்கு சென்றேன்.மருந்து சீட்டை பெற்ற கடை ஊழியர், குறிப்பிட்ட மருந்து, மாத்திரைகளை எடுத்து வைத்து, ஒவ்வொரு மருந்து அட்டையின் பின்புறமும், ஸ்டிக்கர் ஒன்றை ஓட்டினார். அதை கவனித்த எனக்கு ஆச்சரியம். அந்த ஸ்டிக்கரில், காலை, மதியம், இரவு...

பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்!

1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை...

சளிதொல்லையிலிருந்து விடுபட!

பாதுகாப்பு முறை: சளி பிடித் திருந்தால் நோய்த் தொற்றைத் தடுக்க திறந்த வெளிகளில் விற்கும் உணவு மற்றும் பழ வகைகள், பழச்சாறுகள் சாப்பிடக் கூடாது. பனியால் ஏற்படும் தோல் வறட்சியை விரட்ட வெளியில் சென்று வந்த பின்னர் தண்ணீரில் முகம் கழுவவும். மாய்சரைசிங் சோப்பை மட்டுமே பயன்படுத்தவும். வெயில் மற்றும் பனியால் தோலுக்கு ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க தரமான கிரீம்களை பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் முடி கொட்டும். இதைத் தடுக்க முடி வறட்சியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்....

சைகோடிரியா எலாட்டாக்கு முத்தம் கொடுக்க வாரீகளா!

 பெண்களின் உதடுகள் போன்று, மிக அழகாக, சிவப்பாக இருக்கும் இந்த இதழ்கள், "சைகோடிரியா எலாட்டா' எனும், ஒரு வகை தாவரத்துடையது. இவ்வகை செடிகள், மழை அதிகம் பொழியும் கொலம்பியா, கோஸ்டாரீகா, பனாமா போன்ற நாடுகளில், அதிகமாக காணப்படுகின்றன.இதனை, "ஊக்கர்ஸ் லிப்ஸ்' என்று அழைப்பர். இந்த இதழ்கள், சின்ன சின்ன பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளை தன் பக்கம் இழுத்து விடும் தன்மை கொண்டது.பார்த்ததும், நம்மை முத்தம் கொடுக்கத் தூண்டும் இவ்விதழ்கள், நீண்ட நேரம் இப்படியே...

சுற்றுகிற வரைதான் பூமி – போராடுகிற வரைதான் மனிதன்!

இலைகளை உதிர்த்துவிட்டு வெள்ளாடை கட்டாத விதவையாய் மரங்களெல்லாம் வாடி நிற்கிறபோது இதோ அவை துளிர்த்து சிரிக்கிற வசந்த காலத்தை நினைத்தால் மகிழ்ச்சியளிக்கிறது.ஆற்றுப் படுகையின் வெடிப்புகளைப் பார்க்கிறபோதெல்லாம் நாளை அங்கு ஈரவாடையோடு பசுமை நம்பிக்கைக் கோலங்கள் வரைவதை நினைத்தால் உற்சாகம் உள்ளூர ஊற்றெடுக்கிறது.கோடை காலத்தில் வெப்பம் தகித்து வியர்வை ஆறு ஓடுகிறபோது தை மாத சுகந்தமான குளிர்க்காற்று மனத்திற்கு சுகாமாயிருக்கிறது.வெப்பமும், வெதுவெதுப்பும், குளிரும், கூதலும் ஒரு வருடத்தின் பருவங்கள் அதுபோலத்தான் மனிதவாழ்விலும் சுகமும் துக்கமும் வந்து போகும்.இன்றைய...

எது இன்பம்...?

நம்முடைய தேவைகளே நமது சொர்க்கங்களை உருவாக்குகின்றன. நம் தேவைகளின் மாறுதலுக்கேற்ப,நமது சொர்க்கங்களும் மாறுகின்றன.புலன்களின் மகிழ்ச்சி வாழ்க்கையின் எல்லா விசயங்களிலும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் நிர்மாணிக்கும் சொர்க்கத்தை போன்றதொரு சொர்க்கம் அமைந்தால் நாம் முன்னேறவே இயலாது!நாம் அடையக்கூடியது இவ்வளவுதானா?சிறிது காலம் அழுகின்றோம்;சிறிது காலம் சிரிக்கின்றோம்;கடைசியில் எல்லாம் இழந்து இறந்து போகின்றோம்!உலக வாழ்க்கையின் இன்பங்களை துரத்திக்கொண்டே போகின்றோம் எது உண்மையான இன்பம் என்று தெரியாமலே....?இன்பத்தை விட்டுவிடச்சொல்லி நம்மை தத்துவங்கள்...

திருட்டு மொபைலை மோப்பம் பிடிக்கும் ஸ்மார்ட் சிம்!

 மொபைல் திருட்டு போனால் ஒரே வழி அதை மறந்து விட வேண்டும் ஏன் என்றல் எடுத்தவன் டக்குனு ஆஃப் பண்ணி விடுவதுதான். அப்புறம் ஆஃப்லைன்ல சிம்மை எடுத்திட்டு ரீஸெட் பண்ணி ஒன்று அவன் உபயோகிப்பான் அல்லது விற்று விடுகிறார்கள். அதனால் ஐ எம் ஐ வைத்தெல்லாம் கண்டுபிடிப்பது மிகுந்த சிரமத்துக்குள்ளாகி விடுகிறது.அதனை போக்க ரஷியாவின் மாஸ்கோ மெட்ரோ போலீஸ் ஒவ்வொரு மெட்ரோ ஸ்டேஷ்னிலும் ஒரு மோப்பம் பிடிக்கும் சிம் போல நிறுவ உள்ளனர். இது எங்கே எங்கே நிறுவபட்டிருக்கிறது...

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்!

 உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான், அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.அடிபட்டுக் கிடக்கிறான் செட்டி, அவனை அழைத்து வா, பணம் பாக்கி என்கிறான் பட்டி.ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?இந்த...

காட்சியும் அதன் கவிதையும்!

 இது காதல் அரும்பும்சிரிப்பல்ல ...!!!****************************** உன் சிரிப்பின் அர்த்தம் ... புரியாமல் தனிமையில் .... தவிர்க்கிறேன் .....!!! இவன் என்னிடம் ... ஏமார்ந்து விட்டானே ...? என்று சிரிக்கிறாயா ...? நான் உன்னிடம் காதல் .. சொல்ல தாமதமாகியதற்கு ... சிரிக்கிறாயா ...? ஒற்று மட்டும் உன் சிரிப்பில் ... நன்றாக தெரிகிறது ...!!! இது காதல் அரும்பும்.... சிரிப்பல்ல ...!!!நீங்கள் உணவு தந்தால் கூட நாங்கள் சாப்பிடும் சக்தியை இழந்து விட்டோம் ....!!!அப்படியென்றால்...

அழகு!

அழகு எங்கு இருக்கிறது? பார்பவர்களின் கண்களிலும் அதை ரசிக்கும் மனதிலும் தன இருக்கிறது. எனக்கு அழகு என்று தெரியும்  ஒரு பொருள் மற்றவர்களுக்கு அசிங்கமாகத் தெரியலாம். மற்றவர்களுக்கு அழகில்லாதது எனக்கு அழகாய் தோன்றலாம்.ஒரு பெண்ணை நிறுத்தி அந்தப் பெண்ணிடம் எது அழகு என்று கேட்டுப் பாருங்கள். ஒருவன் அவள் வலை வீசும் கண்கள் அழகு என்று சொல்வான் இன்னொருவன் அவள் தேன் சிந்தும் உதடுகள் அழகு என்று சொல்வான். மற்றொருவன் அவள் இடை அழகு என்பான். இன்னொருவன் அவள் நடை அழகு என்று சொல்வான். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று அழகாய் தெரியும். அழகு பார்வைக்கு பார்வை வேறுபடும்.இப்படி...

கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி…

கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும்.கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம்...

கத்திரிக்காயின் மருத்துவ பயன்கள்…

 கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருக்கிறதை தெரிந்துகொள்ள வேண்டும்..மேலும் ஃபைபர் 11%, மாங்கனீசு 10%, பொட்டாசியம் 5.3%, ஃபோலேட் 4.5%, வைட்டமின் கே 3.5%, செம்பு 3.5%, வைட்டமின் பி 63.5%, டிரிப்தோபன் 3.1%, வைட்டமின் சி 3%, மெக்னீசியம் 2.8%, வைட்டமின் பி 32.6%, கலோரி 1%.ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சாப்பிடலாம்.மேலும் உடல் சூட்டை தக்க வைத்துக்கொள்ள விரும்புபவர்களும் இவ்வாறு சாப்பிடலாம். சரும நோயாளிகள்,...