Friday, 15 November 2013

புத்தகங்கள் அழியுமா ?

ஒவ்வொரு புதிய தொழில் நுட்பம் வரும்போதும் பழைய தொழில் நுட்பத்துக்கு அச்சுறுத்தல் எழும் என்பதை மறுக்க முடியாது. “ஊருக்கு போனதும் மறக்காம கடுதாசி போடுப்பா” என்று இப்போது யாராவது சொல்கிறார்களா ? அவர்களுக்கு செல்போனும், எஸ்.எம்.எஸ் ம் பக்க துணையாய் இருக்கின்றன.

பிறந்தநாள், தீபாவளி, பொங்கல் என வரிசையாய் வரும் பண்டிகைகளுக்காக கடைகளில் போய் வாழ்த்து அட்டைகள் வாங்குவது பழைய பல்லவி. இப்போது எல்லாம் மின்மயம். ஏதோ ஒரு இணையப் பக்கத்தில் போய் ஒரு வாழ்த்தை கிளிக் பண்ணி மெயில் பண்ணிவிட்டால் விஷயம் முடிந்தது !

தந்தி, தந்தி என்றொரு சமாச்சாரம் இருந்தது ஞாபகம் இருக்கிறதா ? அதை இனிமேல் அரசியல் தலைவர்களின் பேட்டிகளில் தான் கேட்க முடியும். எந்த பிரச்சினையானாலும் “பிரதமருக்கு தந்தி கொடுப்பது” அவர்கள் மட்டும் தான். மற்ற எல்லோருமே மின்னஞ்சல், போன், எஸ்.எம்.எஸ், 3ஜி என எங்கேயே போய்விட்டார்கள்.

இப்படியே வழக்கொழிந்து போன விஷயங்கள், அல்லது புதுமையான வகையில் உருமாறிய விஷயங்கள் நிறையவே உண்டு. இப்போது அந்தப் பட்டியலில் நமது புத்தகங்களும் இணைந்து விடுமோ எனும் நிலை உருவாகி வருகிறது.

மென்புத்தகங்களின் வருகையும், அதை வாசிக்க வசதியாக வந்திருக்கின்ற ரீடர்கள், டேப்லெட்கள் போன்றவையும் அச்சுப் புத்தகங்களின் வளர்ச்சியை அசைக்கத் துவங்கியிருக்கின்றன. உலக அளவில் அச்சுப் புத்தகங்களின் விலை பெருமளவு குறைக்கப்பட்டிருப்பதாய்ச் சொல்கிறது இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

ஒரு புத்தகத்தைச் சுமக்கும் எடையில் ஒரு புக் ரீடரை நீங்கள் தூக்கிச் சுமக்கலாம். சொல்லப் போனால் ஒரு நாவல் சுமார் 300 கிராம் எடை உண்டு. ஆனால் பொதுவான ரீடர்கள் 200 கிராம் எடையை விடக் குறைவு தான். அதில் சுமார் 1400 நாவல்களைச் சேமிக்கலாம். இப்படி மிக எளிமையான வாய்ப்பு வந்திருப்பதால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புத்தகங்களை விட்டு விட்டு மென் பக்கமாய் தலை சாய்க்கத் துவங்கியிருக்கிறார்கள்.

பயணத்தின் போதெல்லாம் ரீடர்கள் ரொம்பவே உதவியாக இருக்கும் என்பதைச் சொல்லவும் தேவையில்லை. இந்த ஆண்டைய முதல் காலாண்டு புள்ளி விவரம் என்ன சொல்கிறது தெரியுமா ? சுமார் 25% அச்சுப் புத்தகங்கள் விற்பனைச் சரிவு ஏற்பட்டிருக்கிறதாம். நீல்சனின் அறிக்கைபடி கடந்த ஆண்டில் சுமார் 11% அச்சுப் புத்தக விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது !

“அச்சுப் புத்தகங்களின் வீழ்ச்சி கண்கூடு. 2020ல் அச்சுப் புத்தகங்கள் ரொம்பக் கொஞ்சமே இருக்கும். மென்புத்தகங்களே ஆட்சி புரியும்”  என்கிறார் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான ஜி.பி.டெய்லர்.

இசை உலகை எடுத்துக் கொண்டால் இன்றைக்கு சிடிக்களின் விற்பனை ரொம்பக் கம்மி. அதுவும் ஆப்பிள் தயாரிப்புகளான ஐபாட் போன்றவை அறிமுகமானபின் வெளிநாடுகளில் சகட்டு மேனிக்கு சரிவு ஏற்பட்டது. காரணம் மக்கள் பெரும்பாலும் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்வதை விரும்பியது தான்! ஐ-டியூன் போன்ற பணம் கொடுத்து இறக்குமதியாகும் தளங்களில் விற்பனை ஜோராக நடக்கிறது. இதே நிலை இனிமேல் புத்தகங்களுக்கும் வரும்.

எப்போது வேண்டுமானாலும் பிடித்தமான நூலை தரவிறக்கம் செய்து வாசிக்கலாம் எனும் நிலை வரும். இதனால் நூலுக்காக கடை கடையாய் ஏறி இறங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆர்டர் கொடுத்து விட்டு வாரக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

புத்தம் புதிய நாவல்களும் மென்வடிவமாகவே தயாரானால் “ஹாரி பாட்டர்” கணக்கான ரசிகர்கள் கொட்டும் பனியில் புத்தகத்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. சுற்றுப்புறச் சூழலுக்கும் இது ரொம்ப நல்லது. மரங்கள் பிழைக்கும். பெரிய பெரிய அச்சு நிறுவனங்களெல்லாம் ஓய்வெடுக்கும் !

ஹாரிபாட்டர் என்று சொன்னதும் நினைவுக்கு வருகிறது. சமீபத்தில் ஹாரிபாட்டர் நாவல்கள் மென் வடிவம் பெற்றன. சில நாட்களிலேயே சுமார் 8 கோடி ரூபாய்களுக்கான நூல்கள் விற்றுத் தீர்ந்தன ! ஒவ்வொரு நிமிடமும் சுமார் 20,000 ரூபாய்க்கான விற்பனை ஹாரிபாட்டர் மூலம் நடந்து கொண்டிருக்கிறதாம் !

மென்புத்தகங்களின் விலை மிகவும் குறைவாக இருப்பதால் அதன் விற்பனை எண்ணிக்கையும் மிக அதிக அளவில் இருக்கிறது. புத்தக வாசனை வேண்டும், சேமிக்க வேண்டும் எனும் எண்ணம் உடையவர்கள் இன்னும் அச்சுப் புத்தகங்களையே நாடி வருகின்றனர்.

மென்புத்தகங்களின் வளர்ச்சி வரவேற்கப்பட வேண்டியதே ! படிக்கும் பழக்கம் அதன் மூலம் அதிகரித்தால் இரட்டை மகிழ்ச்சி !

விக்கிபீடியா வழங்கும் முன்னோட்ட வசதி!

விக்கிபீடியாவை மேம்படுத்தும் வகையில் புதிய வசதிகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வசதிகளை விக்கிபீடியா ஆர்வலர்கள் முன்கூட்டியே பரிசோதித்து பார்க்கும் முனோட்ட வசதியும் அறிமுகமாகியுள்ளது.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவை நிர்வகித்து வரும் விக்கிமீடியா அமைப்பு இதை அறிவித்துள்ளது.
இணைய பயனாளிகளின் பங்களிப்போடு உலகின் மாபெரும் கலைக்களஞ்சியமாக உருவாகி இருக்கும் விக்கிபீடியாவை மேலும் பரவலாக அனைவரிடமும் கொண்டு செல்லும் முயற்சியில் விக்கிமீடியா அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிய வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தப் புதிய வசதிகளை அறிமுகம் நிலையிலேயே பயனாளிகள் அறிந்துகொண்டு அவற்றை பயன்படுத்திப் பார்க்கும் முன்னோட்ட வசதியை விக்கிமீடியா அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. அதாவது அனைவருக்கும் முன்பாகவே புதிய வசதிககளை ஆர்வம் உள்ளவர்கள் பரிசோதித்து பார்க்கும் விஷேச வசதி.

இந்த வகையான முன்னோட்ட வசதி மென்பொருள் உலகில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இந்த முறை பீட்டா என்று அழைக்கப்படுகிறது. முழுவீச்சில் அறிமுகம் ஆகும் முன் மென்பொருளை குறிப்பிட்ட சிலருக்கு வழங்கி அவர்கள் பயன்பாட்டில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு ஏற்ப குறைகள் நீக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட நிலையில் புதிய மென்பொருள் அறிமுகமாக இந்த வசதி உதவுகிறது.

இப்போது விக்கிபீடியாவில் அறிமுகமாகும் புதிய வசதிகளையும் பயனாளிகள் இப்படி முன்கூட்டியே பயன்படுத்தி பார்த்து அதன் குறை நிறைகளை தெரிவிக்கலாம் என விக்கிமீடியா அமைப்பு அறிவித்துள்ளது.

விக்கிபீடியா மட்டும் அல்லாமல் அதன் மற்ற துனண சேவைகளுக்கும் இது பொருந்தும். விக்கி சமூகத்தினர் பங்கேற்கும் டிஜிட்டல் சோதனை கூடமாக இதை கருதலாம் என்றும் விக்கிமீடியா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பீட்டா ஃபீச்சரஸ் எனும் பெயரில் இந்த முன்னோட்ட வசதி அறிமுகமாகியுள்ளது. விக்கி தளத்தில் உள்ள முன்னுரிமை பகுதிக்கு சென்று இந்த திட்டத்தில் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு:

  https://www.mediawiki.org/wiki/About_Beta_Features

இந்திய சிகரெட்டில் நிகோடின் அதிகம் ; ஆண்‌டுதோறும் கேன்சர் நோய் அதிகரிப்பு!

 உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கும்போது வரையறுக்கப்பட்ட அளவை கட்டிலும் இந்திய சிகரெட்டுகளில் அதிக நிகோடின் மற்றும் கேடு விளைவிக்கும் தார் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது புகைப்பிடிப்போர்களின் உடல் நலத்தை வெகுவாக பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்தியாவில் மத்திய அரசு தரப்பில் ஆய்வுக்கூடங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தலைமை ஆய்வுக்கூடம் முதன்முதலில் பஞ்சாப் மாநிலம் சண்டிகாரிலும் , தொடர்ந்து முக்கிய நகரங்களில் மண்டல அலுவலகங்களிலும் அமைக்கப்படுகிறது.

கண்காணிப்பு தொழிலகம் வருகிறது :

இது குறித்து மத்திய சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில்: லாபம் மற்றும் விற்பனையின் முக்கியத்துவம் கருதி இந்திய சிகரெட்டுகளில் அதிக நிகோடின் அளவீடு கொண்ட சிகரெட் விற்கப்படுகிறது. இது உலக அளவின் வரைமுறையை விட அதிகம். மத்திய புகையிலை ஆய்வு தொழிற்கூடம் சமீபத்தில் சிகரெட்டுகளை ஆய்வு செய்ததில் உயர்மட்ட அளவில் நிகோடினும், தாரும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது மிக ஆபத்தான விஷயம் என்கின்றனர் இந்த அதிகாரிகள்.

10 மில்லி கிராம் தார் :

உலக அளவில் கட் ஆப் ரேஞ்ச் படி ஒரு சிகரெட்டில் 10 மில்லி கிராம் தார் அளவு இருக்கலாம். ஆனால் இந்திய சிகரெட்டுகளில் 15 மி. கிராம் தார் இருப்பதாக கூறுகின்றனர். அது போல் அனுமதிக்கப்பட்ட நிகோடின் அளவை விட நிகோடின் அதிகம் உள்ளது. அதாவது ஒரு சிகரெட்டில் அனுமதிக்கப்பட்ட நிகோடின் அளவு ஒரு மில்லிகிராம். இதனை விட அதிகம் அளவீடு இருப்பதாகவும் தெரிகிறது.

 இது மத்திய புகையிலை சட்டத்தின் மீறல் ஆகும்.
சென்னை, மும்பையில் ஆய்வு மையம்: இது போன்ற சிகரெட் அளவீடுகளை கண்காணிக்க சண்டிகாரில் ஒரு தலைமை ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். இது போல் மண்டல அளவில் சென்னை, மும்பை, ஆமதாபாத், கோல்கட்டா, நகரங்களிலும் அமைக்கப்படும். இதற்கான ஆயத்த பணியில் மத்திய சுகாதார அதிகாரிகள் சண்டிகார் செல்லவுள்ளனர். இங்கு சில ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர். இந்த ஆய்வகத்தில் பணியாற்றும் நிபுணர்களுக்கு அமெரிக்காவின் ஜாவ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி மூலம் சில பயிற்சிகள் நடத்தப்படும். மேலும் நகரங்களில் காற்றில் நிகோடின் அளவு குறித்த மானிட்டர்களும் நிறுவப்படவிருக்கிறது.

மேலும் சிகரெட்டுகள் தயாரிப்பு விவரங்கள் அதில் உள்ள கன்டெய்ன்ஸ் தகவல்கள் துல்லியமாக சிகரெட் பாக்கெட்டுகளில் இடம் பெறவேண்டும் என்ற ஒரு புதிய நடைமுறை மற்றும் பல்வேறு விதிமுறைகளும் கொண்டு வரப்படவிருப்பதாக மத்திய சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது போன்று செயல்படும் நேரத்தில் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் நோய் அளவை குறைக்க முடியும் என மருத்துவ ஆர்வலர்கள் தெரிவித்தனர்,

30 லட்சம் பேருக்கு கேன்சர் :

சமீபத்திய மத்திய அரசின் புள்ளிவிவர கணக்கின் படி நாட்டில் 29 லட்சம் பேர் கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறதாம் .

அதிக செலவில்லாமல் வீட்டை அலங்கரிக்க சில டிப்ஸ்..

வீட்டை அலங்கரிக்க வேண்டுமெனில் நிறைய நேரம் ஆகும். அதிலும் எப்படி அலங்கரிக்கலாம்? எதைக் கொண்டு அலங்கரிக்கலாம்? வீட்டை அலங்கரிக்க எவ்வளவு செலவாகும் என்று பலர் பலவாறு யோசிப்பார்கள். ஆனால் உண்மையில் வீட்டை அலங்கரிப்பதற்கு அதிக செலவு செய்ய வேண்டுமென்பதில்லை. புதுமையான கலைநயத்துடனான யோசனைகள் இருந்தாலே, வீட்டை அழகாகவும், கண்ணைக் கவரும் வகையிலும் அலங்கரிக்கலாம்.

சில சமயங்களில் சிறிய பொருட்கள் கூட, வீட்டை அழகாக அலங்கரிப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் அதனை சரியான இடங்களில் வைத்தால், அதிக செலவின்றி எளிமையாக வீட்டை அலங்கரிக்கலாம். இப்போது பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு இருக்கும் சில எளிய பொருட்களைக் கொண்டு வீட்டை எப்படி அலங்கரிக்கலாம் என்று பார்ப்போமா!!!

போட்டோ ஃப்ரேம்


வீட்டை அலங்கரிக்கப் பயன்படும் பொருட்களில் ஒன்று தான் போட்டோ ஃப்ரேம். இந்த ஃப்ரேமில் அழகான தருணங்களை நினைவூட்டும் போட்டோக்களை வைத்து வீட்டின் சுவர்களில் தொங்கவிட்டால், வீட்டை அலங்கரிப்பதாக இருப்பதோடு, அதைப் பார்த்தால் மனதில் ஒரு குதூகலம் பொங்கும்.

பெயிண்டிங்

வீட்டை அழகாக அலங்கரிப்பதில் பெயிண்டிங்கை விட சிறந்த பொருள் எதுவுமில்லை. அதிலும் வித்தியாசமாகவும், கண்ணைக் கவரும் வகையிலும் உள்ள பெயிண்டிங்கை அறைகளின் சுவர்களில் தொங்கவிட்டால், வீடே சிம்பிளாகவும் அழகாகவும் காணப்படும்.

பூ ஜாடிகள்

வீட்டை விலை மலிவான பொருட்கள் கொண்டும் அலங்கரிப்பதில் பூ ஜாடிகள் முதன்மையானதாக உள்ளது. மேலும் இந்த ஜாடிகளில் பிளாஸ்டிக் பூக்கள் அல்லது உண்மையான பூக்களால் நிறைத்து, வீட்டின் ஹால் அல்லது டிவி அல்லது ஷோக்கேஸ் போன்ற இடங்களில் வைத்து அலங்கரிக்கலாம்.
 
உள்ளரங்கு செடிகள்

வீட்டில் திண்ணை அல்லது நுழைவாயிலில் விருப்பமான உள்ளரங்கு செடிகளை வைத்து அலங்கரிக்கலாம். இதனால், வீட்டை அலங்கரிப்பது போன்று மட்டுமல்லாமல், வீட்டின் உள்ளே ஆக்ஸிஜனும் அதிகமாக இருக்கும்.
 
குஷன்

வீட்டை சற்று ஆடம்பரமாக மற்றும் செலவில்லாமல் அலங்கரிக்க வேண்டுமென்றால், வீட்டின் ஷோபா அல்லது மெத்தைகள் மீது அழகான குஷனை ஆங்காங்கு வைத்து அலங்கரிக்கலாம். இதனால் படுக்கும் அறை மற்றும் ஹாலில் உள்ள ஷோபாக்கள் சற்று ஆடம்பரத்துடன் காணப்படும்.

திரைச்சீலைகள் மற்றும் மேட்
வீட்டின் ஜன்னல்களில் அழகான திரைச்சீலைகள் மற்றும் மேட்டுகளைக் கொண்டும் அலங்கரிக்கலாம். அதிலும் இத்தகையவற்றை வீட்டின் சுவர்களில் தீட்டப்பட்டிருக்கும் நிறங்களுக்கு ஏற்ப தேர்ந்தெடுத்தால், வீடே சூப்பராக காணப்படும்.
 

பித்தவெடிப்பு குணமாக!


 பித்தவெடிப்பு வந்தால்... கால் அசிங்கமாகத் தெரியும்.

வலி வேற ஒரு வழி பண்ணிரும்.

இதுக்கும் வைத்தியம் இருக்கு பயப்படாதீங்க.

நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க,

அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா

குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க.

அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தா...

 பித்தவெடிப்பு மறைஞ்சிரும்.

ஒரு தடவை பயன்படுத்தின நன்னாரிவேரை 3, 4 தடவைகூட

பயன்படுத்தலாம்.


பித்தவெடிப்பு உள்ள இடத்துல மருதாணி இலையை அரைச்சு பத்து

போட்டாலும் குணம் கிடைக்கும்.

வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன்

சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்.

ஆறு தவறுகள்!


மனிதர்கள் எல்லோருமே பொதுவாக ஆறு தவறுகளை செய்கிறார்கள்.


பிறரை அழித்துதனக்கு லாபம் பெற முயற்சிப்பது.


திருத்த அல்லது மாற்ற முடியாதவைகளைப் பற்றி நினைத்து
 கவலைப்படுவது.


நம்மால் முடியாது என்பதற்காக ஒரு செயலை எவராலும் செய்ய
 முடியாது என்று சாதிப்பது.


சில்லறை விவகாரங்களுக்கு எல்லாம் அலட்டிக் கொள்வது.


மன வளர்ச்சிஇல்லாமை ,பக்குவம்பெறாமை ,பொறாமை


 நாம் செய்வது போலவே மற்றவர்களும் செய்து வாழ வேண்டும் என்று
 பிறரைக் கட்டாயப் படுத்துவது.


2000ஆண்டுகளுக்கு முன் ரோமானியத் தலைவரும் அறிஞருமான சிசரோ கூறியது.

தொப்பை இருக்கா? குறைக்க வழி இருக்கு!



1. உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

2. பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

3.எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

4 காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

5 இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

6 உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

7 தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

8 எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

9 இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

கடவுளை மனிதன் கேட்டான் - நகைச்சுவை!


கடவுளை மனிதன் கேட்டான்


"பொண்ணுங்க


 எல்லாம் நல்லா இருக்காங்க. ஆனா


 பெண்டாட்டிகள் மட்டும் ஏன் இப்படி


கொடுமைப்படுத்துறாங்க?"


கடவுள் சொன்னார்,



 "நான்


 பொண்ணுங்களை மட்டுதான் படைத்தேன்.


 அவங்களைக் கட்டிக்கிட்டுப்



 பெண்டாட்டியா ஆக்கிக்கிட்டது


ஆம்பளைகளான  நீங்கதான்."

அந்தரங்கம் சொல்லாத நட்புக்கு ஆயுள் அதிகம்!

பகிர்ந்து கொள்ளுதல் ஒரு நல்ல பண்பு. நல்ல நட்பிற்கு இலக்கணமே பகிர்ந்து கொள்ளுதல் தான். இருந்தாலும் அந்தப் பகிர்தலால் உங்களுக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வதில் தான் இருக்கிறது, உங்கள் சாமர்த்தியம். 'எல்லாரும் நல்லவரே' என்பது நம்மில் பலரின் எண்ணம். இதுவும் ஒருவிதத்தில் வெகுளித்தனம் தான்.

வெளியூர் பஸ் ஸ்டாண்டில் சுற்றிலும் இருக்கிற புதியவர்கள் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சிலர் தங்களைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் ஆதியோடந்தமாக சொல்லிக் கொண்டிருப்பார்கள். தங்கள் குடும்ப விஷயத்தை அப்போது தான் டீக்கடையில் அரை கிளாஸ் டீயுடன் அறிமுகமான சந்தித்த நபரிடம் வெளியரங்கமாய் பேசிக்கொண்டிருப்பார்கள்.

இதில் பெண் திருமணத்திற்காக நகை வாங்கிப் போகும் விஷயம் வரை அப்பாவியாய் அள்ளிக் கொட்டுவார்கள். இப்போது கேட்ட நபர் நல்லவராகவே இருக்கட்டும். கொஞ்சம் தொலைதூரத்தில் இருந்தபடி இதை காதில் வாங்கிய அரை பிளேடு பக்கிரியின் காதில் விழுந்தாலே போதுமே! பெரியவரும் ஒழுங்காய் ஊர் போய்ச் சேரமாட்டார்.

நகையும் ஸ்வாகா. அப்புறம் பெண் கல்யாணத்தை எப்படி நடத்துவது? நமக்குள் இருக்கும் பண்பு நம் வாழ்க்கை ஓட்டத்தில் நம்மோடு இணைந்து கொண்டது. எதற்காகவும் அதை இழக்கத் துணிய மாட்டோம். நல்ல பண்புகளை அணிகலன்களாகக் கொண்டிருக்கும் நாம் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியது அவசியம் அல்லவா!

நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அத்தனை பேரும் நமக்கு நல்லது செய்பவர்கள் என்று எப்படி நம்புவது? நாம் விட்டுக்கொடுக்கும் போதும், மனதைத் திறந்து உள்ள(த்)தை சொல்ல முற்படும் போதும் மற்றவர்கள் அதை தவறாக பயன்படுத்திக் கொண்டு நம்மை ஏமாளியாக்க முற்படலாம். அவர்களை இனம் கண்டு எந்த ரீதியிலும் அவர்களிடம் நெருங்காமல் இருப்பது நல்லது.

அணுகவிடாமல் பார்த்துக் கொள்வது கட்டாயம். அதற்கு நமக்குத் தேவை, பகிர்ந்து கொள்ளும் பண்பு. இந்த மாதிரியான பகிர்தல் ஆண் நண்பர்கள், பெண் தோழிகள் இருபாலருக்கும் அவசியமானதே. நம்மை குழப்பிக்கொண்டிருக்கும் சில விஷயங்களை மனம் விட்டுப் பேசும்போது தான் அதற்கான தீர்வு கிடைக்கும்.

எதையுமே பகிர்ந்து கொள்ளாதவர்கள் எத்தனை உயரிய ஸ்தானத்தில் இருந்தாலும் கடைசியில் பித்துப்பிடித்த நிலைக்குத்தான் ஆளாகிறார்கள். அதனால் இந்த சிக்கலை என்னால் சீரமைக்க முடியாது என்ற எண்ணம் உங்களுக்குள் எழத்தொடங்கி விட்டால், அப்போதே அதை உங்களுக்கு நம்பிக்கையானவர்களிடம் பகிர்ந்து பாருங்கள்.

நிச்சயம் உரிய நேரத்தில் உரிய தீர்வு கிடைக்கும். அதேநேரம் 'ஆயுளுக்கும் இது ரகசியம்' என்று நீங்கள் எண்ணுகிற அந்தரங்க விஷயங்களை மட்டும் எப்போதும் போல் உங்களுக்குள்ளே பூட்டி வைத்துக் கொள்ளுங்கள். பகிர்ந்து கொள்வது நல்ல வழக்கம் தான். இருப்பினும் மற்றவர்கள் நம்மை ஏமாற்றும் அளவு நம் அந்தரங்க விஷயங்களை சொல்வது பாதுகாப்பற்றது.

நம்மை நாமே மற்றவரிடம் அடமானம் வைப்பது போல ஆகும். நம் பாதுகாப்பு நம் கையில் தான் உள்ளது. மிகவும் முக்கியமான விஷயங்களை குறிப்பாக எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது தேவையற்றது. அதனால் நமக்கு என்ன வேண்டுமானாலும் நிகழலாம். நம்முடைய செயல்கள் அனைத்திற்கும் நாம் தான் பொறுப்பாளி.

இதை மற்றவரிடம் சொல்லி என்ன ஆகப்போகிறது? இதையெல்லாம் நட்பின் இலக்கணம் என்று சொல்லிக் கொள்ள முடியாது. இதனால் பல நேரங்களில் நல்ல நட்பு கெடும். சில நேரங்களில் நெருங்கிய நண்பர்கள் கூட 'உன் காதோடு மட்டும் ஒரு ரகசியம்' என்று சொல்ல முன்வருவார்கள். தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.

'எப்போது இதை ரகசியம் என்று சொன்னாயோ, கடைசிவரை அது உன்னோடு இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்று சொல்லி விடுங்கள். சிலர் இம்மாதிரி முக்கிய ரகசிய விஷயங் களைக் கூட நண்பர்கள் சிலரிடம் தனித் தனி சந்தர்ப்பங்களில் சொல்லி விடுவார்கள்.

இதற்குப் பிறகு அது ரகசியம் என்றால் தானே அதிசயம். ரகசியம் வெளிப்பட்ட பிறகு ஒவ்வொரு நண்பனையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பார்கள். 'சொன்னது இவனாக இருக்குமோ' என்ற ரீதியில் ஒவ்வொருவரையும் பார்த்துப் பார்த்து கடைசியில் நட்பு கெட்டது தான் மிச்சம் என்றாகி விடும். சிலருக்கு யாரைப் பார்த்தாலும் அவர்கள் நல்லவர்களாகவே தெரிவார்கள்.

வேறுசிலருக்கோ பார்க்கிற எல்லாரிடமும் ஏதாவது ஒரு குறை கண்ணில் பட்டு விடும். மகாபாரதத்தில் ஒருமுறை கிருஷ்ணர் தருமரை அழைத்து 'நகரெங்கும் போய் உன் கண்ணில் படுகிற ஒரு கெட்டவனை அழைத்துக் கொண்டு வா' என்றார். அதேவேளையில் துரியோதனை அழைத்தவர், 'நகர வீதிகளில் பயணப்பட்டு உன் பார்வையில் படுகிற ஒரு நல்லவனை அழைத்துக் கொண்டு வந்து சேர்' என்றார். இருவரும் போனார்கள்.

தருமர் கண்ணில் படுகிற எல்லாருமே ஏதாவது ஒரு விதத்தில் அவர் பார்வைக்கு நல்லவராகவே தெரிந்தார்கள். நகர் முழுக்க சுற்றித் திரிந்தும் ஒரு கெட்டவன் கூட அவர் கண்ணில் படாமல் போனதால் வெறுங்கையுடன் அரண்மனைக்கு திரும்பினார்.

துரியோதனன் கதை வேறு மாதிரி இருந்தது. அவன் யாரைப் பார்த்தாலும் அவரிடத்தில் ஒரு குறையை கண்டு பிடித்தான். இத்தனை கெட்டவர்களுக்கு மத்தியில் ஒரு நல்லவனை என்னால் எப்படி கண்டு பிடிக்க முடியும் என்ற கவலையுடன் அவனும் அரண்மனைக்கு திரும்பினான்.

இருவரும் வெறுங்கையுடன் வந்து நிற்பதை பார்த்த கிருஷ்ணர், புன்னகைத்துக் கொண்டார். நல்லவன் பார்வைக்கு கெட்டவன் என்று யாருமில்லை. அதுமாதிரி கெட்டவன் பார்வையில் நல்லவன் தெரியவே இல்லை என்பது தெரிந்து தானே அவர்களை அனுப்பி இப்படியரு பரீட்சை மேற்கொண்டார்..!

நம்முடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல நட்பு வேண்டும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அப்படி ஒரு நட்பு கிடைப்பது அரிது. 'புற' விஷயங்களை பகிர்ந்து கொள்வது போல நமக்கே நமக்கான அந்தரங்கத்தை ஒருபோதும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இதில் நீங்கள் தெளிவாக இருந்தால் மட்டுமே நட்பு நிலைக்கும். நீடிக்கும்.

காதலன் காதலியிடம் கேட்க முடியாத கேள்விகள்!!

ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை பார்க்கலாம்...

1. நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணி அனுப்புறோம்.. ஆனாலும் நீங்க எதுக்கு மிஸ்டு கால் கொடுத்தே எங்க உயிரை வாங்குறீங்க? உங்ககிட்ட ஃபோன்ல பேசின காசையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா, நான் லோன் போட்டு பைக் வாங்கி இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

2. ஒரு பொண்ணு கொடுக்குற மிஸ்டு காலை மட்டும் யாராலும் அட்டெண்ட் பண்ணவே முடியாது. அவ்ளோ ஷார்ப்பா கட் பண்ணுவாங்க. இப்படி மிஸ்டுகால் கொடுக்க நீங்க எந்த யுனிவர்சிட்டியில ட்ரெயினிங் எடுத்துகிட்டிங்க?

3. அது ஏன் எப்போ பார்த்தாலும், எது கேட்டாலும் ஹி.. ஹி'ன்னு சிரிச்சுகிட்டே
இருக்கீங்க? ஒரு மணி நேரம் உங்ககிட்ட ஃபோன்ல பேசினா அதுல நாற்பது நிமிஷம் கேனத்தனமா சிரிச்சுகிட்டேதான் இருக்கீங்க. ஏன் நீங்க ஏதாவது பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிறதுக்கு எங்ககிட்ட ட்ரெயினிங் எடுக்கிறீங்களா?

4.ஃபோன்ல நாங்களேதான் பேசிகிட்டு இருக்கோம். எதைக்கேட்டாலும் "நீங்க
சொல்லுங்க, நீங்க சொல்லுங்க'ன்னா" நாங்க என்னத்தை சொல்லி தொலைக்குறது? உங்களுக்கு எதையுமே பேச தெரியாது போலன்னு நினைச்சு நாங்க பாட்டுக்கு எதையாவது சொல்லி தொலைச்சுடுவோம். அதையே மனசுல வெச்சுகிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எப்படி பேசவே தெரியாத மாதிரி சீன் போடுறீங்க?

5. மெசேஜ்'ல மட்டும் ரொம்ப ரொமாண்டிக்கா SMS அனுப்பி எங்க தூக்கத்தை
கெடுக்குறீங்க. ஆனா அதையே நேர்ல சொல்ல சொன்னா மட்டும் வெட்கத்தையே என்னமோ நீங்கதான் குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்கப்படுறீங்க? இது எப்படி உங்களால மட்டும் முடியுது? மெசேஜ் அனுப்பும் போதெல்லாம் உங்க வெட்கத்தை என்ன ஃப்ரிட்ஜ்'க்கு உள்ளே ஒளிச்சி வெச்சிடுவீங்களா?

6.. ஹேய்... உனக்கு எப்படி அது தெரியும்? அப்படிங்கிற கேள்வியை மட்டும்
கேட்டுட்டா போதும். உடனே "நான் உங்க இதயத்துல தானே இருக்கேன். இது கூட எனக்கு தெரியாதான்னு" உடனே ஒரு டயலாக் விடுவீங்க. இந்த மாதிரி எல்லாம் டயலாக் விட டைரக்டர் கதிர்கிட்ட கத்துகிட்டீங்களா என்ன?

7.. Loss of Pay' ல லீவு போட்டுட்டு, உங்களை பைக்ல தியேட்டருக்கு கூட்டிட்டு
போனா, அப்பத்தான் ரொம்ப கவனமா ஹேண்ட் பேகை எடுத்து நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல வெச்சுகிட்டு வருவீங்க. என்ன கொடுமை சார் இதெல்லாம்?

8. அப்புறம் அப்புறம்'ங்கிற மொக்கையவே அரை மணி நேரமா போடுறீங்க. சரி
வெச்சுடுறேன்னு நாங்க ஃபோனை கட் பண்ண போகும்போதுதான் "என் கூட பேசறது உங்களுக்கு போரடிக்குதா"ன்னு ஒரு சென்டிமென்ட் சீன் ஓபன் பண்ண வேண்டியது. உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?

9. நீங்க கிஃப்ட் கொடுத்தா மட்டும் விலையைப் பார்க்க கூடாது. அதுல உங்க
அன்பைத்தான் பார்க்கணும். ஏன்னா நிச்சயமா அந்த கிஃப்ட் கீ-செயினாவோ,
கர்ச்சீஃபாவோ, இல்லை அதிகபட்சமா மணிபர்ஸாவோதான் இருக்கும். ஏன்னா அதுங்கதான் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும். ஆனா இதே நாங்க கிஃப்ட் கொடுக்கும் போது மட்டும் சுடிதாரோ, செல்ஃபோனோ, தங்க செயினோ, வெள்ளி கொலுசோ, குறைஞ்சது3,000/- ரூபாய்க்கு செலவு பண்ணாதான் நாங்க உங்க மேல உண்மையான அன்பு வெச்சிருக்கிறதா அர்த்தம். என்ன கரெக்ட்டா? உங்க அன்போட அளவுகோலுக்கு எல்லையே கிடையாதா?

10. "உன் நியாபகமாவே இருந்துச்சு. ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை"ன்னு மனசாட்சி இல்லாம பொய் சொல்றீங்களே.. என் நியாபகமாவே இருந்துச்சினா என் கூட பேச வேண்டியது தானே. இந்தக் கேள்வியை நாங்க கேட்டுடக் கூடாதுனு அர்த்த ராத்திரியில பேய் முழிச்சுகிட்டு இருக்கிற நேரத்துல, ஒரு மிஸ்டுகால் கொடுத்துட்டு, மறுநாள் காலையில உனக்கு என் நியாபகமே இல்லைன்னே சண்டை போட வேண்டியது.

சமூக சேவையில் அசிம் பிரேம்ஜி முதலிடம்!



சமூகசேவைக்கு அதிக தொகையை செலவிடுபவர்களில் விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி முதலிடத்தில் இருக்கிறார்.


கடந்த நிதி ஆண்டில் மட்டும் இவர் 8,000 கோடி ரூபாயை சமூக சேவைக்காக செலவிட்டிருக்கிறார்.


ஹெச்.சி.எல். குழும தலைவர் ஷிவ் நாடார் ரூ. 3000, கோடியை செலவிட்டிருக்கிறார்.


ஜி.எம்.ஆர். குழுமம் தன்னுடைய அறக்கட்டளை மூலம் ரூ 740 கோடி ரூபாய் செலவிட்டிருக்கிறது.


நந்தன் மற்றும் ரோஹினி நிலகேனி தங்கள் பங்குக்கு ரூ 530 கோடியை செலவு செய்திருக்கிறார்கள்.

கடந்த நிதி ஆண்டில் ரூ. 10 கோடி ரூபாய்க்கு மேல் 31 இந்தியர்கள் சமூக சேவைக்காக செலவிட்டிருக்கின்றனர்.

மாணவர்களுக்கு நிதி அறிவு தேர்வு!

எட்டாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நிதி தொடர்பான அறிவை சோதிக்கும் வகையில் தேசிய அளவிலான தேர்வு நடக்க உள்ளது. தேசிய நிதிக் கல்வி மையம் நடத்தும் இந்த தேர்வுகள் ஜனவரி 12ம் தேதி நடைபெறவுள்ளது.

75 கேள்விகள் கொண்ட இத்தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடத்தப்படும். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

இத் தேர்வில் பங்கேற்க கட்டணம் எதுவும் இல்லை. தேர்வில் பங்கேற்க விரும்புவோர் அவரவர் பயிலும் பள்ளிகள் வாயிலாகவே விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.


பங்கேற்க விரும்புபவர்கள்  www.nism.ac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.


பதிவு செய்ய நவம்பர் 29-ம் கடைசி நாள். ஜனவரி 23ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் 5-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தினார் மேக்னஸ் கார்ல்சன்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 5-ம் சுற்றுப் போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.



ஐந்தரை மணி நேரத்திற்கும் மேல் நீடித்த போட்டியில் 58வது நகர்த்தலில் கார்ல்சன் வெற்றி அடைந்தார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 26ம் தேதி வரை 12 சுற்றுகளாக நடைபெறுகிறது.

சிகரட்" பற்றி ஒரு "சீக்ரெட்"

 

சிகரட்" பற்றி ஒரு "சீக்ரெட்"..!! கவனமா கேளுங்க

உலக நாடுகளே ஒழிக்க நினைக்கும் ஒரு பொருள்..!

வருடாவருடம் நிதிநிலை அறிக்கையில் வரி உயர்த்தப்படும் ஒரு பொருள்..!! 


பள்ளிப் பருவத்திலேயே பலரின் விருப்பமான ஒரு பொருள்..!!! 

ஆயிசு முடிந்து இறப்பவர்களைவிடவும்,இதன் ஆவிபிடித்து இறப்பவர்கள் தான் அதிகமாம்..? 

இரு சக்கரவாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அனிகிறோம். காரில் செல்லும்போது சீட் பெல்ட் அனிகிறோம்,எதற்கு...


 நம் உயிரைப் பாதுகாக்கத் தானே...!

பகைவனைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஏன் இந்த பாதுகாப்பு..?

என்னமோ நடக்குது... மர்மமா

இருக்குதே .


இவ்வாறு உயிரைக்குடிக்கும் ஒன்றை  சித்தரித்தால்..


சிகரட்கவி


கொடி இடையாள்,

குணத்தில் கொடூரமுடையாள்,

மணத்தில் நெடியுடையாள்..!,

இவளுக்கு பல பெயர்கள்..?

இவள் வசம் பலபேர்கள்..!

நெருப்பால் தன்னை எரித்து - நம்,

நெஞ்சயே எரித்து விடுகிறாள்..!!

தன்னைத் தொட்டவனை - இவள்

சும்மா விட்டதில்லை.!,

தொட்டவனுக்கு - இவள்,

இதயப்புகை வென்மையாக,

இருப்பினும் நம்பாதீர்கள்..?

நம் இதயம் கருத்துவிடும்..!,

கடையில் அது வாங்கினால்,

இது இலவசம் என்பதுபோல்,

இவளைத் தொட்டால்..?

ஆஸ்துமா முதல்...!

ஆண்மைக்குறைவு வரை இலவசம்..!

ஆண்டாண்டு காலமாய் - நம்மை,

ஆட்டிவைக்கும் - இவள் ஒரு,

நவீன விபச்சாரி..!!. ".

பீலி சிவம் - கவுண்டமணி!



பிரபல குணச்சித்திர நடிகர் பீலி சிவம், தனது இனிய நண்பர் கவுண்டமணி பற்றி ஒரு முறை அளித்த பேட்டி:

 "நாங்கள் இருவரும் சிறு வயதில் நாடகங்களில் நடித்து வந்த காலம் அது. கவுண்டமணி என் உயிர் நண்பன். ஒரு நாள் இரவு, வீதியில் நடந்து கொண்டு இருந்தோம். இருவரும் அன்று சாப்பிடவில்லை. எனக்கு கடும் பசியாக உள்ளதென அவனிடம் கூறினேன். இருவரிடமும் பணம் இல்லை.

கவுண்டமணி என்னிடம் 'சிறிது நேரம் பொறுத்திரு. இதோ வருகிறேன்' என்று சொல்லிவிட்டு சென்றான். ஒரு சில மணி நேரம் கழித்து கையில் பரோட்டா பொட்டலத்துடன் வந்தான். அதை என் கையில் தந்து விட்டு சாப்பிட சொன்னான்.

 'உன்னிடம் தான் பணம் இல்லையே? எப்படி வாங்கினாய்?' என்று கேட்டேன். அவன் பதில் சொல்லவில்லை.

நான் தொடர்ந்து வற்புறுத்தி கேட்டதும் அவன் சொன்ன பதில் "அருகில் உள்ள ரத்த வங்கிக்கு சென்று என் ரத்தத்தை தானம் செய்து கிடைத்த பணத்தில் வாங்கினேன்" என்றான். என் கண்கள் கலங்கி விட்டன. நண்பன் பசிக்காக தன் ரத்தத்தை விற்று உணவு தந்த அவனை என் வாழ்நாளில் எப்படி மறப்பேன்

வாழை இலை விருந்து ..

வாழைனாலே 'மங்களம்'னு அர்த்தம். கல்யாணம் போன்ற விசேஷங்களில் கூட வாழைமரத்தைத்தான் கட்டறோம். வாழைமரத்தோட எல்லா பாகங்களுமே நமக்குப் பயன்படுது. அந்தக் காலத்துல பெரும்பாலும் எல்லா வீடுகள்லயும் வாழை மரம் இருக்கும். அதனால் எல்லாரும் அப்போ தினமும் வாழை இலையிலதான் சாப்பிடுவாங்க.


வாழை இலையில சாப்பிட்டாகண்ணுக்குக் குளிர்ச்சி. 'ஆல இலை, அரச இலை, தேக்கு இலை'னு எத்தனையோ இலைகள் இருந்தாலும், வாழை இலைக்கு மட்டும்தான் தனிப் பெருமையே இருக்கு. எதைச் சாப்பிடறோம் அப்படிங்கற மாதிரி, எதுல சாப்பிடறோம்ங்கறதும் முக்கியம்னு சொல்லுவாங்க. அதனால விருந்துன்னாலே வாழை இலைதான்! ஆனால் இப்போ நம்ம ஊர்களிலயே ஏதாவது விசேஷம்னாலோ, கல்யாண வீட்டுக்குப் போனாலோ தான் நாம, வாழை இலையிலயே சாப்பிடறோம்.


எங்கப் பாட்டி வாழை இலையில சாப்பிடறது பத்தி ஒரு கதை சொல்லியிருக்காங்க. " ஒரு முறை பரத்வாஜ முனிவர் வீட்டுல ராமன் சாப்பிடும்போது, அவருக்குப் பார்க்காமல் உதவிய அனுமனுடன் ஒரே இலையில் சாப்பிட்டாராம். அணில் முதுகில் போட்ட கோடு மாதிரி, வாழை இலையின் நடுவுல இருக்குற கோடும் ராமன் இலையை இரண்டு பகுதியாக பிரிக்குறதுக்கு தனது கையால் போட்டக் கோடுதானாம். இலையின் ஒரு பகுதியில் மனிதர் விரும்பி சாப்பிடும் உணவு வகையும், எதிர்ப்பகுதியில் குரங்குகள் விரும்பும் காய்கறிகளும் பரிமாறப்படுவதற்கு இதுதான் காரணமாம்.


" அதேபோல, வாழை இலையில எப்படி உணவு பரிமாறணும்னும் சொல்லிக் கொடுத்திருக்காங்க. " இலையின் நுனிப்பகுதி இடதுபக்கமாகவும், அகலமான பகுதி வலதுபக்கமாகவும் இருக்கணும். உடலில் கொஞ்சமாக சேர்க்கக் கூடிய உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகிய பகுதியான இடப்பக்கத்திலும், உணவு, காய்கள் இவற்றையெல்லம் பெரிய பாகமான வலப்பக்கத்திலும் பரிமாறணும். அதேபோல, முற்றிய இலையைவிட தளிர் இலைதான் நல்லது.


இலை கருகுகிற மாதிரி, உணவு சூடாக இருக்கக் கூடாது; சுத்தமாக ஆறியும் இல்லாமல் மிதமான சூட்டில் பரிமாறணும். முதலில் பசியைத் தூண்டும் பருப்பு, நெய் விடணும். அப்புறம் காரவகைக் குழம்புகளை ஊற்றணும். உணவின் செரிமானத்துக்கு உதவும் மல்லி, பூண்டு, மிளகு உள்ள ரசம், தொடர்ந்து புளிப்பு சுவையுள்ள மோர் வழங்கணும். கடைசியா ருசிக்குப் பாயசம்" இப்படி ஒரு முறையே இருக்கு.


ஆயுர்வேத, சித்த மருத்துவங்களிலகூட வாழை இலை பெரிதும் பயன்படுது. "அல்சர், குடல் நோய்கள் வராமல் தடுக்க கைகண்ட மருந்து வாழை இலையில தொடர்ந்து சாப்பிடறதுதான். சிறுநீரகப்பிரச்சனை, அலர்ஜி, உடலில் இருக்குற நச்சுத்தன்மை நீங்க எனப் பல பிரச்னைகளுக்கு நிவாரணம் வாழை இலையில சாப்பிடறதுதான். வாழை பதினெட்டு வகைகள் இருக்கு. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மருத்துவகுணங்கள் உண்டாம்".


வாழை இலையில சாப்பிடறதே குறைஞ்சுட்டு வருகிற இந்தக்காலத்துல, இவ்வளவு பெருமையாக பேசுற, வாழை இனமே அழிஞ்சுக்கிட்டிருக்கு. நம்ம நாட்டுக்கேயுரிய பாரம்பரிய ரகங்களான சிறுமலை வாழை, பூவன், கற்பூர
வாழை இப்படிப் பலரக வாழைகளும் ஒரேயடியாக அழிஞ்சுக்கிட்டிருக்காம். வாழை இலைகள் பதப்படுத்தப்பட்டு சருகாகவும், 'தொன்னை' அப்படிங்கற சிறுகிண்ணங்களாகவும் பயன்படுத்தப்பட்டு வருது. என்னதான் இப்படிப்
பயன்படுத்தினாலும் பச்சை இலையில சாப்பிடறமாதிரி இருக்குறதில்லை.


இவ்வளவு மகத்துவம் இருக்கிற வாழை இலை, இன்னைக்கு ஒரு பூட்டு, அதாவது ஐந்து இலைகள், 10லிருந்து 15ரூபாய் வரை விற்கப்படுது. டெல்லியில போன பொங்கலுக்கு, இலையில சாப்பிடலாம்கிற ஆசையில, என் கணவரை வாங்கிகிட்டு வரச்சொன்னேன். ஒரே ஒரு இலைதான் இருந்ததுனு வாங்கிட்டு வந்தார்.


அதுவும் ஐந்து ரூபாய்னு சொன்னதும் அதிர்ந்தே போயிட்டேன். ஒரு பூட்டு இலை 5ரூபாய்க்கு விற்ற காலம் போய் ஒரு இலை 5ரூபாய்க்கு விற்கப்படுது. எவ்வளவு அநியாயமா இருக்கு? என்னைக்காவது இலையில சாப்பிடற ஆசையும் கூட இதனால போயிடுது. டெல்லியிலயே இந்த நிலைமை என்றால், வெளிநாடுகளில் இருக்குறவங்களெல்லாம் வாழை இலையில சாப்பிடறதுக்கு ஆசையே பட முடியாது போல!


குளிர்காலத்தில் தோட்டத்தில் நன்கு வளரக்கூடிய காய்கறிகள்!!!

குளிர்காலத்தில் தோட்டத்தில் நன்கு வளரக்கூடிய காய்கறிகள்!!!

குளிர்காலம் வரப்போகிறது. இக்காலத்தில் தோட்டத்தில் குளிர்காலத்தில் வளரக்கூடிய பல்வேறு செடிகளை விதைத்தால், தோட்டம் அழகாக பச்சை பசேலென்று இருப்பதோடு, சமைப்பதற்கு காய்கறிகளையும் தோட்டத்திலேயே பெறலாம். இதனால் காய்கறிகளுக்காக செய்யும் பணச்செலவு குறைவதோடு, நம் கண்முன்பே ஆரோக்கியமான முறையில் வளர்க்கப்படும் காய்கறிகளைப் பெறலாம்.

அதுமட்டுமல்லாமல் இக்காலத்தில் வளரக்கூடிய காய்கறிகளுக்கு அதிகமான கவனிப்பு வேண்டும் என்பதில்லை. எனவே தமிழ் போல்ட் ஸ்கை குளிர்காலத்தில் வளரக்கூடிய சில காய்கறிகளை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை உங்கள் தோட்டத்தில் வளர்க்க ஆரம்பித்து, பணத்தை மிச்சப்படுத்துங்கள்.

தக்காளி
அன்றாட சமையலில் சேர்க்கப்படும் தக்காளியின் விலை தற்போது அதிகமாக இருப்பதால், அத்தகைய தக்காளியை வீட்டிலேயே இக்காலத்தில் பயிரிட்டால், தக்காளியானது நன்கு வளரும். ஏனெனில் நவம்பர் மாதம் தக்காளி சீசன். ஆகவே இந்த தக்காளியை பயிரிட்டு, தக்காளியைக் கொண்டு பல்வேறு ரெசிபிக்களை சமைத்து சாப்பிடுங்கள்.

பசலைக்கீரை
இந்த பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான பசலைக்கீரை குளிர்காலத்தில் நன்கு வளரக்கூடியது. ஆகவே இந்த கீரையின் விதையை வாங்கி பயிரிட்டுங்கள். இதற்கு அளவான பராமரிப்பு இருந்தால், இது நன்கு வளரும்.

வின்டர் ஸ்குவாஷ்

வின்டர் ஸ்குவாஷ் கூட குளிர்கால காய்கறி தான். இத்தகைய காய்கறியை தோட்டத்தில் விதைத்தால், இது விரைவில் வளரும்.
 
முட்டைக்கோஸ்

சாலட்டுகளில் அதிகம் சேர்க்கப்படும் முட்டைக்கோஸின் சீசன் நவம்பர் மாதம் தான். எனவே இந்த காய்கறியை தோட்டத்தில் வளர்த்து, சமையலில் அதிகம் சேர்த்து, அதன் பல்வேறு நன்மையைப் பெறுங்கள்.

அஸ்பாரகஸ்


அஸ்பாரகஸை அதிகம் சாப்பிட்டால், காதலுணர்ச்சியானது அதிகரிக்கும். எனவே நவம்பர் மாதத்தில் இதனை தோட்டத்தில் பயிரிட்டு, காதலுணர்வை அதிகரித்து, துணையுடன் காதலை பரிமாறிக் கொள்ளுங்கள். அதற்கு அந்த செடியின் ஒரு சிறு பகுதியை வைத்து வளர்க்க வேண்டும்.

வெங்காயத்தாள்


சுவைக்காகவும், மணத்திற்காகவும் சேர்க்கப்படும் வெங்காயத்தாள் கூட குளிர்காலத்தில் வளரக்கூடிய காய்கறியாகும். இந்த காய்கறியை விதைத்தப் பின், வெங்காயமானது வருவதற்கு முன் பறிக்க வேண்டாம். இல்லாவிட்டால், அது இனிப்புச் சுவையுடன் இருக்கும்.

பட்டாணி


என்ன இந்த மாதம் பட்டாணியின் விலை குறைவாக உள்ளதா? அதற்கு காரணம் நவம்பர் மாதம் தான் பட்டாணியின் சீசன். எனவே இந்த பட்டாணியின் விதையை ஒரு ஈரமான துணியில் கட்டி, முளைக்க ஆரம்பிக்கும் போது, அதனை விதைக்க வேண்டும்.

லெட்யூஸ்


லெட்யூஸ் கூட குளிர்கால காய்கறியாகும். எனவே இதனை இப்போது தோட்டத்தில் வைத்தால் நன்கு வளரும். 

ஸ்மார்ட் போன்களுக்கான அழகிய வால்பேப்பர்கள்!

 http _www.mobileswall.com_ 

டெஸ்க்டாப்பில் கூட பழைய வால்பேப்பரை புதிப்பிக்காமல் அப்படியே வைத்திருக்கலாம் தப்பில்லை! ஆனால் கையிலேயே வைத்திருக்கும் ஸ்மார்ட் போனில் ஒரே வால் பேப்பரை வைத்திருந்தால் போரடித்து விடாது. அது தான் ஸ்மார்ட் போனில் விரும்பிய போதெல்லாம் வால் பேப்பரை மாற்றிக்கொள்ளும் வசதியை தருகிறது மொபைல்ஸ் வால் இணையதளம்.

ஏதோ புகைப்பட கண்காட்சியை பார்ப்பது போல இந்த தளம் அழகான புகைப்படங்களாக காட்சி அளிக்கிறது. எல்லாமே செல் போனில் வால் பேப்பராக டவுண் லோடு செய்வதற்கானவை. வரிசையாக ப‌டங்களை பார்த்து விட்டு தேவையான படத்தை கிளிக் செய்து ஸ்மார்ட் போன் திரைக்கு மாற்றிக்கொள்ளலாம்.

ஆப்பிலா, ஆன்ட்ராய்டா, வின்டோசா இவற்றில் எந்த மாதிரி என நம்மிடல் உள்ள போனுக்கு ஏற்ற வடிவில் தேர்வு செய்து டவுண்லோடு செய்து கொள்ளலாம். 640-Smiley-Face-lஅவரவர் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்ய் வசதியாக படங்களை இயற்கை காட்சிகள், இசை, சினிமா, விலங்குகள் என பலவிதமான தலைப்புகளின் கீழ் பார்க்கும் வசதியும் இருக்கிறது.

எல்லா படங்களுமே ரசிக்கவும் வியக்கவும் வைக்கின்றன. இந்த ரசனையை கருத்தாக தெரிவிக்கலாம். அப்படியே டிவிட்டர் ,பேஸ்புக் வழியே பகிர்ந்து கொள்ளலாம்.

இணையய‌தள முகவரி:  http://www.mobileswall.com/

ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்ற சூப்பரான வழி!

 http _www.coolphototransfer.com_ 

கூல் ஃபோட்டோ டிரான்ஸ்பர் செயலி(அப்) ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு எளிதாக இடமாற்றம் செய்து அசத்துகிறது.இந்த செயலியை பயன்படுத்தும் போது  வழக்கமாக செல்போனில் உள்ள புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் யூஎஸ்பி கேபில் தேவைப்படும் அல்லவா? ஆனால் இந்த செயலி கேபில் எதுவும் இல்லாமலேயே வைபீ மூலமாக புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்றி விடுகிறது.

இது புகைப்படங்களை மாற்றுவதற்கான சுலபமான வழி மட்டும் அல்ல, விரைவான வழியும் கூட என்கிறது இந்த செயலி.
அது மட்டும் அல்ல சும்மா ஜாலியாக புகைப்படங்களை மாற்றலாம் என்கிறது. அதாவது விதவிதமான முறையில் ப‌டங்களை ,அனிமேஷன் பாணியில் படங்களை மாற்றலாம். எப்படி தெரியுமா? செல் போனில் உள்ள புகைப்படத்தின் மீது கையை வைத்து அப்படியே தள்ளிவிட்டால் அது கம்ப்யூட்டருக்குள் போய்விடும். அல்லது போனை கம்ப்யூட்டர் மேலே வைத்து மானிட்டர் மீது வைத்தாலும் புகைப்படம் இடம் மாறிவிடுகிறது.

இதே போல போனை குலுக்கினாலும் புகைப்படல் கம்ப்யூட்டருக்குள் போய் உட்கார்ந்து கொள்கிறது. புகைப்படத்தை கைகளால் பெரிதாக்கி அப்படியே தள்ளி விட்டாலும் புகைப்படம் கம்ப்யூட்டருக்கு சென்று விடுகிறது. உங்களுக்கு விசில் அடிக்க தெரியுமா? அடித்து பாருங்கள். அசந்து போவீர்கள். காரணம் விசில் அடித்தாலும் புகைப்படம் இடம்மாறிவிடுகிறது.

இந்த அனிமேஷன் வசதிகளை தான் புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்ற கூலான வழி என கூல் ஃபோட்டோ டிரான்ஸ்பர் வர்ணிக்கிறது. இதற்கான விளக்க வீடியோவே சூப்பராக இருக்கிறது.ஆன்ட்ராய்டு போன் இருந்தால் பயன்படுத்தி பாருங்கள்.

டவுண்லோடு செய்ய:http://www.coolphototransfer.com/

தற்கொலையைத் தடுக்க உதவிய ஃபேஸ்புக்!



எதையுமே ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்வது இளம் தலைமுறைக்கு வழக்கமாக இருக்கிறது. இதனால் சில நேரங்களில் பாதகமான விளைவுகள் ஏற்படலாம் என்றாலும், சில நேரங்களில் எதிர்பாராத விதமாக நல்ல பலனும் உண்டாகலாம். இதற்கு அழகான உதாரணமாக, அமெரிக்காவில் தற்கொலை மனநிலையில் இருந்த இளைஞர் ஒருவரை காவலர்கள் ஃபேஸ்புக் மூலம் காப்பாற்றியுள்ளனர்.

18 வயதான அந்த இளைஞர், நியூஜெர்சியில் உள்ள வாஷிங்டன் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதனுடன் பாலம் அமைந்துள்ள ஹட்சன் நதி படத்தையும் இணைத்திருந்தார்.

இந்தச் செய்தியை பார்த்து பதறிய ஃபேஸ்புக் நண்பர் ஒருவர், நியூஜெர்சி காவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் துறைமுக ஆணைய காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

துறைமுக ஆணைய காவலர்கள் குறிப்பிட்ட அந்த இளைஞரின் ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்து, அவர் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு பாலத்தில் தேடிப்பார்த்தனர். பின்னர் வாலிபரின் செல்போன் மூலமும் தேடினர். ஆனால் பயனில்லை. உடனே காவல் துறை அதிகாரி மைகேல்ஸ், ஃபேஸ்புக் வழியே அந்த இளைஞரைத் தொடர்பு கொண்டார். நண்பர்கள் யாரையாவது தொடர்பு கொள்ளவும் எனும் அவரது வேண்டுகோளுக்கு பதில் இல்லை.

இதையடுத்து அதிகாரி மைக்கேல்ஸை அழைக்குமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நல்ல வேளையாக கொஞ்ச நேரம் கழித்து அந்த இளைஞர், அதிகாரி மைக்கேல்சை செல்போனில் தொடர்பு கொண்டார். பஸ் ஒன்றில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். வீட்டில் பிரச்சினை என்றும் கூறியிருக்கிறார். மைக்கேல்ஸ் அவரிடம் ஆறுதலாகப் பேசி தன்னை நேரில் சந்திக்க வைத்தார். அதன் பிறகு அந்த இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஆலோசனை பெற வைத்தார்.

தற்கொலை என்பதே அந்த கணத்தின் தடுமாற்றம் தானே. சரியான நேரத்தில் தலையிட்டதால் அந்த இளைஞர் தற்கொலைக்கு முயல்வது தடுக்கப்பட்டது.

கடந்த 2010 ம் ஆண்டு டைலர் கிலமண்டி எனும் இளைஞர் ,ஃபேஸ்புக் பக்கத்தில் வாஷிங்டன் பாலத்தில் இருந்து குதிக்கப்போகிறேன் என்று தெரிவித்து விட்டு, சொன்னதைப் போலவே தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இந்த முறை ஃபேஸ்புக் மூலம் தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை அமெரிக்காவின் நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ளது.

சூறாவளிக்கு நேசக்கரம்

ஃபேஸ்புக் தொடர்பான மற்றொரு செய்தி. பிலிப்பைன்சில் பயங்கர சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிதி அளிக்கும் வசதியை ஃபேஸ்புக் ஏற்படுத்தித் தந்துள்ளது. சூறாவளி பாதித்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் செஞ்சிலுவை சங்கத்திற்கு நிதி அளியுங்கள் எனும் வேண்டுகோளை ஃபேஸ்புக் பயனாளிகளின் டைம்லைன் பகுதி மீது இடம் பெற வைத்துள்ளது. ஃபேஸ்புக் இப்படி நிதி திரட்ட வேண்டுகோள் விடுப்படுது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது. பயர்பாக்ஸ் (firefox) உலாவியில் அதன் தேடல் கட்டம் அருகே பிலிப்பைன்சுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலம் உதவுங்கள் எனும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விலகும் இளசுகள்

ஃபேஸ்புக் பற்றி மற்றொரு செய்தி, அதன் இளைய பயனாளிகள் பலரும் வாட்ஸ் அப் (whats app) போன்ற குறுஞ்செய்தி செயலி சேவைகளுக்கு மாறிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது. பிரிட்டன் பயனாளிகள் மத்தியில் இந்த மாற்றம் நிகழ்ந்து வருகிறது. ஃபேஸ்புக்கில் பெரியவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது மற்றும் வாட்ஸ் அப் போன்ற சேவைகளில் நண்பர்களுடன் அந்தரங்கமாக உரையாட முடிவது போன்றவை இதற்கான காரணமாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் ,இளைஞர்கள் மத்தியில் பிரபலமான தளம் எனும் பெருமையை ஃபேஸ்புக்கிடம் இருந்து வீடியோ பகிர்வு தளமான யூடியுப் தட்டிபறித்துள்ளதாகவும் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

முதல் நாள் அனுபவம் : வில்லா (பீட்சா - II)

                   

அப்பா (நாசர்) இறந்தவுடன், அவருக்கு பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு வில்லாவைப் பற்றி தெரிய வருகிறது. உடனே மகன் (அசோக் செல்வன்) அந்த வில்லாவிற்கு செல்கிறார். அங்கு என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை.


1 மணி நேரம் 42 நிமிடங்கள் தான் படம் என்பதால், சொல்ல வந்த கதையை தெளிவாக கூறியிருக்கிறார் இயக்குநர் தீபன். லியோ ஜான்பால் எடிட்டிங்கும், சந்தோஷ் நாராயணனின் இசையும் படம் பார்ப்பவர்களை, படத்தோடு ஒன்ற வைக்கிறது.

டைப் ரைட்டரில் சாதாரணமாக டைப் செய்து கொண்டிருக்கும் காட்சிக்கு கூட, தீபக்குமார்பதியின் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படம் பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது.

வரைந்த ஓவியத்தில் இருப்பது எல்லாம் நிஜமாக நடைபெறுவது போல ஒரு குறும்படம் வெளியானது. அதனை வைத்து தான் இப்படத்திற்கு இயக்குநர் திரைக்கதை அமைத்திருக்கிறார் போலும்.

பீட்சா படத்தைப் போல இப்படத்தில் சுவாரசிய காட்சிகள் இல்லாதது பெரிய குறை. பீட்சா படத்தின் தீம் மியூசிக்கை உபயோகித்தவர்கள், அப்படத்தினைப் போலவே சில சுவாரசியமான காட்சிகளுக்கு மெனக்கெட்டு இருக்கலாம். படம் முடிந்தவுடன், க்ளைமாக்ஸ் காட்சியை பற்றி நீண்ட நேரம் யோசித்த பிறகே புரிகிறது.

பீட்சா படத்தினைப் பார்த்தவுடன் இருந்த ஒரு இனம் புரியாத உணர்வு, ஏனோ இரண்டாம் பாகமான வில்லாவில் இல்லை. மற்றபடி இந்த வில்லாவிற்கு போய் வரலாம்.

அமெரிக்க அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் இரண்டு டயனோசர்களின் படிமங்கள் ஏலத்திற்கு விடப்படவுள்ளன!



அமெரிக்க அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும், மிகவும் அரிதான, சண்டையிட்டதில் உயிரிழந்ததாக கருதப்படும் இரண்டு டயனோசர்களின் படிமங்கள் ஏலத்திற்கு விடப்படவுள்ளன.


தென் அமெரிக்காவில் 680 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய வகை டயனோசர்களின் உடல் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டன. மிகவும் அரிதான, சண்டையிட்ட நிலையில், உயிரிழந்ததாக கருதப்படும் இந்த டயனோசர்களின் படிமங்கள் அமெரிக்காவின், நியூயார்க் நகரில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இவை ஏலம் விடப்படுகின்றன.


இவற்றில் 26 அடி நீளம் கொண்ட டயனோசர் மட்டுமின்றி, 36 அடி நீளம் கொண்ட மற்றொரு டயனோசரும் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளன. இவை பலகோடி அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கழிவுகளை அழித்து மனித குலத்தை காப்போம்!

 

கழிவு என்பது எல்லா இடங்களிலும் எல்லோராலும் உருவாக்கப்படுவதே. நகரங்களில் மீதமாகும் கழிவுகளுக்கு வடிகாலாக கிராமங்களை மாற்றிவிடுவது என்பது இயற்கையின் சமநிலையை பாதிக்கும் முக்கிய விஷயங்களில் ஒன்றாகும்.தற்போது வேகமாக மாறிவரும் கலாசார மாற்றங்களினால் புதியன புகுதலும் பழையன கழிதலும் சாதாரணமான நிகழ்வு என்றாலும்கூட பழையவற்றை சுற்றுச்சூழல் மாசுபடாமல் கழிப்பதை மனித சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் சுற்றுச்சூழல் மிகப்பெரிய பாடத்தை நமக்கு கற்றுக்கொடுக்கும்.

முந்தைய காலங்களில் கழிவுகளை ஒரு குழி வெட்டி அதில் கொட்டி அது மக்கியபின் விவசாயத்திற்குப் பயன்படுத்தி வந்தனர். தற்போது கண்ட இடங்களில் கழிவுகளைக் கொட்டுவதால் கிருமிகள் பெருகி நோய்கள் ஏற்படவே வழிவகுக்கின்றன.

கழிவு என்று பார்க்கும்போது திடக்கழிவு, திரவக்கழிவு என்றும், அவற்றில் மக்கும் தன்மையுள்ளது, மக்காத தன்மையுள்ளது என்றும் பிரித்துப் பார்க்க வேண்டும். அரசு தற்போது விளம்பரங்களின் மூலமும் செயல் விளக்கப் படங்கள் மூலமும் கழிவு மேலாண்மை குறித்து மக்களுக்கு அவ்வப்போது விளக்குகிறது. ஆனாலும் சிலர் இதன் முக்கியத்துவத்தை உணராமல் செய்யும் செயல்கள், அவர்களை மட்டுமல்லாது மொத்த மனித சமுதாயத்தையும் பாதிக்கும் செயலாக மாறிவிடுகிறது.

கழிவு மேலாண்மை என்பது முதலில் வீடுகளிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். அன்றாடம் வீடுகளில் உருவாகும் கழிவுகளில் மக்கும் கழிவை தனியாகவும், மக்காத கழிவை தனியாகவும் சேகரிக்கவேண்டும். கழிவுகளை அழிக்க நகராட்சி, மாநகராட்சிகளையே நம்பியிராமல் அவற்றை பயனுள்ளவாறு எப்படி மாற்றி உபயோகப்படுத்துவது என்று அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் கிடைக்கும் பயிற்சிகளைப் பெற்று மனித குலம் வாழ வழிவகை செய்யவேண்டும்.

கழிவுகளை மக்கவைத்து அதை எடுத்து செடிகளுக்கும் வீட்டுத் தோட்டங்களுக்கும் பயன்படுத்தலாம். தற்போது கழிவுகளிலிருந்து பயோ காஸ், மின்சாரம் தயாரித்தல் என பல்வகை நவீன பயன்பாட்டு முறைகள புழக்கத்தில் உள்ளன.

கழிவுகளை திறந்தவெளிகளில் சேகரிக்காமல் குழிகள் சேகரித்து அவற்றை மூடி மக்க வைத்து உரம் தயாரிக்கலாம்.மக்காத கழிவுகள் என்பது கட்டுமானக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், தொழிற்சாலைகளில் உருவாகும் கழிவுகள். கட்டுமானக் கழிவுகளை நீர் நிலைகளில் கொட்டுவதால் நீர் ஆதாரம் பாழ்படுவதுடன் நீரின் தன்மையும் மாசுபடுகிறது.

பிளாஸ்டிக் கழிவுகள் எப்போதும் அழியாதவை. அவற்றின் உபயோகத்தை குறைக்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும். நிலத்தில் இடப்படும் பிளாஸ்டிக் கழிவு எத்தனை காலமானாலும் மக்காமல் அப்படியே மண்ணில் இருந்து கொண்டு நீரின் வழித்தடத்தை அடைத்தும், மரங்களின் வேரினை கீழிறங்க விடாமலும் செய்யும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இதை உணர்ந்த அரசு தற்போது சாலைகள் அமைக்க இந்த பிளாஸ்டிக் கழிவுகளை உபயோகப்படுத்தும் திட்டத்தை கணடறிந்து செயல்படுத்தி வருகிறது.

தொழிற்சாலைகளில் உருவாகும் கழிவுகள் சில நச்சுத்தன்மையுடயதாக இருக்கின்றன. அங்கு உபயோகப்படுத்தப்படும் வேதிப்பொருள்களின் மீதி அப்படியே நிலத்தில் கொட்டப்படுவதால் நிலத்தின் தன்மையும், நீரின் தன்மையும் மாறிவிடுகிறது. அந்த மாசுபட்ட நீரினை உபயோகப்படுத்தும் மனிதர்களும் விலங்குகளும் நேரடியாக நோய்வாய்ப்படுவதுடன் பல பக்கவிளைவுகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. தொழிற்சாலைகள் லாபநோக்கை மட்டுமே பிரதானமாக பார்க்காமல் கழிவு மேலாண்மை குறித்து தொழிலாளர்களுக்கு பயிற்சியளித்து வேண்டிய உபகரணங்களை கொண்டு கழிவுகளை அழித்து மனித குலத்தை காக்க வேண்டும்.

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு. ஆனால் நீரின் மகத்துவத்தை மக்கள் உணரவில்லை என்பதுதான் உண்மை. பொதுவாகவே எல்லா நகராட்சிகளிலும், மாநகராட்சிகளிலும் சாக்கடை நீரினை கொண்டுபோய் குளங்களிலும் ஆறுகளிலும் விடுவதை பார்க்கிறோம். இது மிகத் தவறான செயலாகும். சாக்கடை நீரினை சுத்திகரிப்பு செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். சமீப நாள்களில் தண்ணீர் நுகர்வு மிக அதிகமாகவே காணப்படுகிறது. மக்கள் தண்ணீரினை அளவாக உபயோகப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.

நமக்கு உள்ளது ஒரே உலகம். நாம் வாழத் தகுந்ததாக இப் பூவுலகை மாற்றியமைக்க எல்லோருமே ஒன்றுசேர்ந்து அக்கறையுடன் பாடுபடவேண்டும்.

300 ரூபாய் செலவில் – சாதா டீவி – டச் ஸ்க்ரீன் டிவியாக மாற்ற முடியும்!

 

மனுஷன் டச் ஸ்க்ரீன் மொபைலை பயன்படுத்த ஆரம்பித்த பழக்கத்தில் பார்க்கும் பொருட்களை எல்லாம் டச் முறையில் உபயோகிக்க ஆசை.அந்த வரிசையில் டேப்ளட் / ஐபேட் / இப்போது லேப்டாப்பும் டச் ஸ்க்ரீன் வந்துவிட்டது. அப்புறம் இப்போது தொலைக்காட்சியில் மூவிங் சென்சார் தான் வந்திருக்கிறது.

அந்த வரிசையில் டச் ஸ்க்ரீன் வந்தால் நன்றாக இருக்கும் என எதிர்ப்பார்ப்பால் இந்த டெக்னாலஜி வர வைப்பதற்க்கு பதிலாய் வழக்காமான எல் சி டி / பிளாஸ்மா டிவியை 300 ரூபாய் செலவில் டச் ஸ்க்ரீனாய் மாற்ற முடியும் என வாஷிங்டன் பல்கலைகழக ஆராய்ச்சி நிருபித்திருக்கிறது.

இதில் குப்தா என்னும் இந்தியர் தான் முக்கிய பங்கு. இது மின்காந்த அலையால் நடக்கும் ஒரு அதிசயம். சீக்கிரம் வீட்ல இந்த ரிமோட் சண்டை பிரச்சினைக்கு ஒரு முற்றுபுள்ளி. சீரியல்ல நல்ல நடிக்காத ஆட்களை அறைய முடியுமே – ஐ ஜாலி ஆனா ஃபேஷன் டிவி ஓடும் போது கை கவனம்

3டி தொழில்நுட்ப உதவியுடன் சர்ஜரி!- அசத்தும் லண்டன் மருத்துவர்கள்!

 

பொதுவாக மனித மூளையில் நினைவுகள் எவ்வாறு பதிவாகின்றன என்ற கேள்விதான் மருத்துவ உலகின் மில்லியன் டாலர் கேள்வியாக நேற்று வரை இருந்தது. நியூரான்களின் உதவியோடு நினைவு களை சேமித்து வைத்து கொள்கிறது மூளை. இதில் சிக்கலான நரம்பு முனைகளின் வலை பின்னலை நேரடியாக கண்டறிய முடியாமல் மருத்துவ உலகம் திணறி வந்தது.


அதற்கு விடை கிடைக்கும் வகையில், மூளையில் நினைவுகள் பதிவாவதை ஒளிரும் துணுக்குகளைக் கொண்டு அதை 3டி படமாக காட்டி விஞ்ஞானிகள் குழு சாதனை படைத்தனர்.கடந்த ஜூலையில்.அமெரிக்க விஞ்ஞானி டான் அர்னால்டு இதை சாதித்து காட்டிய நிலையில் விபத்தில் சீர்குலைந்த முகத்தை 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சீர்படுத்தும் நவீன சிகிச்சை முறையை லண்டன் மருத்துவர்கள் அறிமுகப்படுத்தி உள்ளனர்.


ஸ்வன்சீஸ் மருத்துவமனையின் அட்ரியன் சுகர் தலைமையிலான மருத்துவர் குழு இந்த முயற்சியில் சாதித்துள்ளது. சமீபத்தில், பைக் விபத்தில் முகம் சிதைந்த நிலையி்ல் ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.அவருக்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, முகம் சீராக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் தலைப்பகுதி, ஒரு கருவி மூலம் 3டி முறையில் படம் பிடிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், முகம் சீரமைக்கப்படுகிறது.


இது குறித்து மருத்துவ குழுவின் ஈவான்ஸ் கூறுகையில், :நாங்கள் வழக்கமான அறுவை சி்கிச்சை முறையை தான் பின்பற்றுகிறோம். ஆனால், புதிய தொழில்நுட்பம் மூலம் முக சீரமைப்பை துல்லியமாகவும், விரைவாகவும் செய்ய முடிகிறது,’ என்றார்.

கழுத்து வலியும் அதை களையும் வழியும்!

நிமிடத்திற்கு நிமிடம் வேகமான வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தற்போதைய உலகில் பெரும்பாலான மக்களுக்கு கழுத்திலும், முதுகிலும் வலி ஏற்படுகிறது. அதிலும் சுமார் 70 சதவீத மக்கள் அடிக்கடியோ அல்லது அவ்வப்போதோ இந்த வலியினால் அவதியுறுகின்றனர்.நம் முன்னோர்கள் எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்ற சித்தர்களின் முதுமொழியை அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கலாம்.

உண்மையில் மனிதனின் இயக்கங்கள் அனைத்திற்கும் உள்ள சூட்சும பகுதிதான் சிரசு. பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள், பிரபஞ்ச சக்தியை உணரும் தன்மை அனைத்தும் சிரசின் வழியே தான் நடை பெறுகிறது. இத்தகைய சக்திகள் அனைத்தையும் தன்னுள் அடக்கி பல கோடிக் கணக்கான அணுக்களைக் கொண்ட பந்து போல தோற்றமளிக்கும் சிரசை தாங்கி நிற்பது கழுத்துப் பகுதிதான். கழுத்து உடலின் முக்கிய உறுப்பாகும். கழுத்தில்தான் முக்கிய நாடி நரம்புகள் நெருக்கமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும். உடலுக்கும் சிரசுக்கும் இரத்தம் மற்றும் நரம்புகள் பிரயாணம் செய்கின்றன. கழுத்தின் மையமாக தண்டுவட எலும்புகள் உள்ளன. இதில் ஏழு எலும்புகள் உள்ளன. அந்த எலும்பு சட்டத்தைச் சுற்றி தசைகளும், தசை நார்களும் உறுதி கொடுக்கின்றன. இந்த கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம்புகள் வெளிவருகின்றன.

மேலும் உணவுக்குழாய், மூச்சுக்குழாய் உள்ளன. மூளைக்கும் இருதயத்திற்கும் இடையேயான இரத்த ஓட்டம் கழுத்தின் வழியேதான் நிகழ்கிறது.முதுமைப் பருவத்தில் கழுத்து எலும்புகளின் இணைப்புகளில் ஏற்படும் தேய்மானத்தைத்தான் செர்விகல் ஸ்பாண்டிலோஸிஸ் என்று அழைக்கின்றனர். இதை தமிழில் தோள்பட்டை வாதம் என்கின்றனர். இது பொதுவாக நடுத்தர வயதுடையோரிடமும், முதியோரிடமும் குறிப்பாக ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வோரிடமும் காணப்படுகிறது.

குடல், வயிறு இவற்றின் மூலப் பகுதிகளில் உஷ்ணம் அதிகமானால் வயிற்றுப் பகுதியில் உள்ள அபான வாயுவின் அழற்சி காரணமாக குடல் மேலும் உஷ்ணப்பட்டு உடலில் உள்ள நீரானது அபான வாயுவால் மேல்நோக்கி தள்ளப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நீர் தலைப்பகுதிக்கு வந்து கோர்த்துக்கொள்ளும்.

பின்பு கழுத்து நரம்பு வழியாக முதுகுப் பக்கம் (பின்பகுதி) நீர் இறங்கும். இவ்வாறு இறங்கும் நீரானது கழுத்துப் பகுதிக்கு வரும்போது அதன் தன்மை மாறி பசை போல் கடினமாகிறது. பின்பு அது இறுகித் தடித்து கடினமானது போல் ஆகிவிடும். இதுதான் தோள்பட்டை வாதம். உதாரணமாக கடலில் உள்ள நீரானது அதிக வெப்பத்தால் ஆவியாவி மேல்சென்று மேகமாக மாறி பின் மழை நீராக பொழிவது போல் குடலில் உள்ள நீர் உஷ்ணமாகி ஆவியாக மாறி மேல்நோக்கி சிரசுக்கு சென்று அங்கு நீராக மாறி பிறகு கழுத்துப் பகுதிக்கு இறங்குகிறது. இதைத்தான் சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.

அறிகுறிகள்


கழுத்துப் பகுதியில் வலி ஏற்படும். கைகள் மரத்துப் போகும். சுண்டுவிரல் செயலிழுந்து போகும். மன எரிச்சல் உண்டாகும். தூக்கமின்மை ஏற்படும். எப்போதும் கோபம் கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். கண் எரிச்சல், உண்டாகும். எழுதும்போது கை விரல்களில் வலி ஏற்படும். படிக்கும்போது கழுத்து வலி உண்டாகும். மேலும் குனியும் போதும், நிமிரும்போதும் தலை சுற்றி கண்ணில் மின்னல் போல் தோன்றி உடல் அதிரும். நரம்புகள் இறுகும். ஒருசிலருக்கு நடக்கும்போது தலை சுற்றல் உண்டாகும்.

கழுத்து கடுத்து, தடித்து காணப்படும். மன நிம்மதியின்றி காணப்படுவார்கள். பித்த உடற்கூறு கொண்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் உண்டாகும். வாத உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து இறுகி திருப்ப முடியாத நிலை ஏற்படும். கப உடலமைப்பு கொண்டவர்களுக்கு கழுத்து பகுதி தடித்து உப்பு நீர் கலந்து கருத்துப்போய் பட்டை பட்டையாக தடித்து காணப்படும்.

அதிக வியர்வை உண்டாகும். கழுத்துப் பகுதியில் எரிச்சல் தோன்றும். ஒரு சிலருக்கு இடது பக்கமாக கழுத்துப் பகுதியிலிருந்து நீர் கீழிறங்கி தோள்பட்டையில் வலியை உண்டாக்கும். இது நெஞ்சு வலியைப் போன்று தோன்றும். நெஞ்சு வலிக்கும் தோள்பட்டை வலிக்கும் வித்தியாசம் கண்டறிவது கடினம்.

தொடர்ந்து பல நாட்களாக கழுத்து வலி காணப்படும் அந்த வலியானது தோள்வரை பரவும், கழுத்துப் பகுதியில் கை பட்டவுடன் வலி தோன்றும்.

கழுத்து வலி வரக் காரணம்

மலச்சிக்கல், குடலில் வாய்வுக் கோளாறு, மூலச்சூடு, தலையில் நீர் கோர்த்தல், மன அழுத்தம் போன்ற காரணங்களால் தோள்பட்டை வலி உண்டாகிறது.

கழுத்துவலியை தவிர்க்கும் முறை

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும். வாயுவை உண்டாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது தாகம் ஏற்பட்டால் குளிரூட்டப்பட்ட நீரோ, குளிர்பானங்களோ அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது.

வாகனங்களை மிதமான வேகத்தில் ஓட்ட வேண்டும். அடிக்கடி பிரேக் போடுவதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை சிறு சிறு தூரங்களுக்கு நடந்து செல்வது நல்லது. ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

கழுத்து வலிக்கு இந்திய மருத்துவ முறையில் நிறைய மருந்துகள் உள்ளன. குறிப்பாக வர்ம பரிகார முறையில் உள் மருந்துகள் சில கொடுத்து கழுத்துப் பகுதி தோள்பட்டைப் பகுதியில் எண்ணெய் தடவி சீராக கழுத்தை நீவிவிட்டு வந்தால் நாளடைவில் இரத்த ஓட்டம் சீராகும். தோள்பட்டை வலியும் நீங்கும்.

வர்ம பரிகார முறையில் இதை எளிதாக குணப்படுத்தலாம். அறுவை சிகிச்சை தேவையில்லை.

இதுபோல் சித்த மருத்துவ முறையில் சீர்கேடடைந்த உறுப்புகளுக்கு பலம் கொடுக்க கிழி ஒற்றடம், பிழிச்சல் முதலியன செய்வார்கள். இவ்வாறு செய்து வந்தால் நோயிலிருந்து விடுபட்டு உறுப்புகளில் உள்ள வலி, குத்தல், குடைதல், இசிவு, பிடிப்பு, வீக்கம் முதலியன மெல்ல மெல்லக் குறைந்து அவற்றின் தளர்ச்சி, செயலின்மை போன்றவை நீங்கி உடல் பலம் பெறும்.இந்த முறையில் சிகிச்சை செய்வதின் மூலம் கழுத்து வலிக்கு அறுவை சிகிச்சை செய்வதை தவிர்க்கலாம்.

உணவு


பொதுவாக வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளைக் குறைத்து எளிதில் சீரணமாகக் கூடிய சத்துள்ள பொருட்களை உண்பது நல்லது. கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒதுக்க வேண்டிய உணவுகள்


மொச்சை, உருளை, தக்காளி, வாயுவை உண்டாக்கு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

படுக்கை

தலையைணை இல்லாமல் தூங்குவது நல்லது. மேடுபள்ளம் இல்லாத சமமான படுக்கையே நல்லது. அதிக குளிர்காற்று உடலில் படும்படியாக படுக்கக்கூடாது. இத்தகைய நடைமுறைகளை கடைப்பிடித்தால் தோள்பட்டைவாதம் என்ற கழுத்து வலியிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.

பழைய தங்கத்தை விற்றால் நஷ்டமே!

மூன்று ஆண்டுகளுக்கு தங்கம் வாங்காதீர்கள் என மத்திய நிதி அமைச்சர் வேண்டுகோள் விடுப்பது ஒருபக்கமிருக்க, உங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை தந்து சுத்தமான தங்கமாக மாற்றிக்கொள்ளுங்கள் என விளம்பரம் செய்யத் தொடங்கி இருக்கின்றன நகைக் கடைகள். இதற்கு போனஸும் கிடைக்கும் என்பது எக்ஸ்ட்ரா கவர்ச்சி. நகைக் கடைகள் பழைய தங்கத்தை வாங்குவதற்கு என்ன காரணம்? ஏன் போனஸ் தருகிறது? இதனால் மக்களுக்கு லாபமா, நஷ்டமா?

''நாம் அளவுக்கதிகமாக தங்கம் இறக்குமதி செய்ததால், நம் கையிருப்பில் இருந்த அந்நிய செலாவணி பெரிய அளவில் குறைந்தது. இதனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் ஏகத்துக்கு உயர்ந்தது. இதைத் தடுக்கும்விதமாக தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அதிக கட்டுப்பாடுகளை விதித்தது. 2 சதவிகிதமாக இருந்த இறக்குமதி வரியானது, கடந்த 18 மாதங்களில் 8 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யும் தங்கத்திற்கான மார்ஜின் தொகை முழுவதையும் செலுத்தினால்தான் தங்கத்தை வாங்கமுடியும் என வங்கிகளும் கட்டுப்பாடு விதித்தன. முழுத் தொகையும் செலுத்த அதிகமான பணம் தேவை. இதனால் நகைக் கடைகள் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளன. இதன் விளைவாக நகைக் கடைகள் தங்கம் இறக்குமதி செய்யும் அளவை வெகுவாக குறைத்துக்கொண்டுள்ளன.

கடந்த மே மாதத்தில் 162 டன் இருந்த தங்கத்தின் இறக்குமதி ஜூன் மாதத்தில் 38 டன்னாக- குறைந்தது. தங்கத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் நகைக் கடைகள் தேவையான தங்கத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கத் திட்டமிட்டன. இதற்கு காரணம், இந்திய வீடுகளில் மட்டும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக வேர்ல்டு கோல்டு கவுன்சில் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்தத் தங்கத்தில் 10 சதவிகித தங்கத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்கினால்கூட போதும் என நகைக் கடைகள் நினைக்கின்றன.

இதனால் பழைய தங்கத்தை சுத்தமான 916 தங்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். அதோடு பழைய தங்கத்திற்கு போனஸும் தருகிறோம் என்று விளம்பரம் செய்கின்றன. இப்படி போனஸ் தருவதால் வாடிக்கையாளர்களுக்கு லாபம் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அதில் உண்மை இல்லை.

பழைய தங்கத்தை விற்கும்போது நகைக் கடைகள் குறிப்பிட்ட சதவிகிதத்தைக் கழித்துவிடுகின்றன. இதனால் பழைய தங்கத்தை அன்றைய விலையில் எடுத்துக்கொண்டால்கூட உங்களிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பில் ஒரு சில சதவிகிதத்தைக் குறைத்துதான் மதிப்பீடு செய்வார்கள். இப்படி கழிக்கப்படும் தங்கத்தின் மதிப்பு என்பது உங்களுக்கு கொடுக்கும் போனஸ் தொகை மதிப்பைவிட அதிகமாக இருக்கும். நகைக் கடைகள் அதிகபட்சம் ஒரு கிராமிற்கு 100 ரூபாய் போனஸ் தரும். ஆனால், ஒரு கிராமிற்கு 250 ரூபாய் வரை  நகைக் கடைகள் லாபம் பார்க்க முடியும். நகைக் கடைகள் இப்படி செய்வதன் மூலம்  கடைகளில் இருக்கும் நகைகளும் குறையும். இதனால் வியாபாரமும் நடக்கும்.

மேலும், தங்க இறக்குமதியைக் குறைக்க தங்க காயின்கள், பார்கள் விற்கக் கூடாது என அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனாலும் நகைக் கடைகளுக்குதான் லாபம். ஏனெனில் காயின், பார்கள் விற்கும்போது குறைந்த அளவில்தான் சேதாரம் வசூலிக்க முடியும். இப்போது தங்கம் வாங்க நினைப்பவர்கள் ஆபரணமாகவே வாங்கும் கட்டாயத்தில் இருப்பதால் நகைக் கடைகளுக்கு லாபம்தான்.

சில நகைக் கடைகள் கள்ளச் சந்தையில் தங்கத்தை வாங்கு கின்றன. இப்படி வாங்கும் தங்கம் கணக்கில் வராது என்பதால் வரி எதுவும் கட்டுவதில்லை. இதனை கணக்கில்கொண்டு வருவதற்கும் பழைய தங்கத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கத் திட்டமிடுகிறார்கள்.

இப்போதுள்ள சூழ்நிலையில், உங்களுக்கு தேவை இருந்தால் மட்டுமே பழைய தங்கத்தை விற்று புதிய தங்க நகைகளாக மாற்றிக்கொள்ளுங்கள். கல் வைத்த நகைகளை மாற்றும்போது வாடிக்கையாளர்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படவே செய்யும். முடிந்தவரை ஏற்கெனவே நகை வாங்கிய கடைகளிலே திரும்பத் தந்து, புதிய தங்கமாக மாற்ற முயற்சி செய்யுங்கள்'' என்றார்.