Wednesday, 2 October 2013

நரைமுடியை கருமையாக்க சில வழிகள்!

பொதுவாக நரைமுடியை 30-40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம். ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது.இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது.அதுமட்டுமின்றி ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்களால் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு வழுக்கை...

Jolla அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி!

Jolla எனும் நிறுவனமானது தனது முதலாம தலைமுறை ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.5 அங்குல அளவு மற்றும் 960 x 540 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1.4 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Snapdragon Processor, பிரதான நினைவகமாக 1 GB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.141 கிராம் நிறையுடைய இப்புதிய கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றனவும்...

ஆட்டிப் படைத்த அமெரிக்கா: முடங்கி போன காரணம் இதுதான்!

அமெரிக்க அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் கதவடைப்பு நேற்று இரண்டாவது நாளாக அமலானது. ஒபாமாவின் பெடரல் அரசு அலுவலங்கள், சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் பல லட்சம் ஊழியர்கள் பாதி நாளில் நேற்று வீடு திரும்பி விட்டனர். அரசு வெப்சைட்கள் ‘இருட்டு’ மயமானது.யெல்லோஸ்டோன், அலாக்ரடஸ் போன்ற தேசிய பொழுதுபோக்கு பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் போன்றவையும் இழுத்து மூடப்பட்டன.ஆளும் ஜனநாயக கட்சி, எதிர்க்கட்சியான குடியரசு இரண்டுமே பரஸ்பரம் பிடிவாதமாக தங்கள் நிலையில்...

Smart Phone களுக்கு போடுகின்ற Lock’ஐ கணனியில் போட வேண்டுமா?

Android Phone களுக்கு போடுகின்ற லொக்கை (Lock) எமது கணனியிலும் போடலாம். இந்த Lock ஆனது Android போன்களுக்கான lock ஆகும். அதிகமானோருக்கு இந்த Android Lock பற்றி தெரியும்.ஆனால் கணனிகளுக்கு இவ்வாறான Lock போடுவது பற்றி அநேகமானோருக்கு தெரியாமல் இருக்கலாம்.இந்த Lock இல் நிறைய விடயங்கள் இருக்கின்றன. அதை Settings பகுதியில் சரி செய்து கொள்ளலாம். இந்த lock இன் Password ஐ மூன்று தடவை தவறுதலாக கொடுத்ததால் Alarm ( அலாரம் ) அடிக்கும். ஒரு நிமிடத்தின் பின்னர் நின்றுவிடும்.இதற்கு...

மன அழுத்தம் -சமாளிப்பது எப்படி?

ஸ்ட்ரெஸ் எனும் சீரியஸ் பிரச்னை!வேலை, வீடு என இரட்டைச் சுமை சுமக்கும் எல்லாப் பெண்களுமே அஷ்டாவதானிகள்தான். குடும்பத்துக்காக வேலையையோ,  வேலைக்காக  குடும்பத்தையோ விட்டுக் கொடுக்காமல், இரண்டையும் திறம்பட கையாளும் வித்தை தெரிந்த அவர்களுக்கு, தம்மையும்  கவனித்துக் கொள்ள  வேண்டும் என்பது மட்டும் ஏனோ மறந்து விடுகிறது. ‘முடியலியே...’ எனப் புலம்பிக் கொண்டாவது முடியாத  காரியங்களையும் முடித்துவிட்டு  அடுத்த வேலையைப் பார்க்கிற அவர்களுக்குத்...

தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்!

எச்சரிக்கை: பொது நலன் கருதியே இங்கு சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதற்கு விடையளிக்கும் பொறுப்பு அரசுக்கும், மருத்துவத்துறைக்கும் இருக்கிறது. யாரையும் அச்சுறுத்துவது நோக்கமல்ல. இதை கவனமாக படித்து உங்கள் குடும்ப மருத்துவரின் பரிந்துரையுடன் மருந்தை உட்கொள்ளுங்கள். தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுங்கள்.சந்தேகத்துக்கான விதை:அடிப்படை சுகாதார பாதுகாப்புக்கும் ஒவ்வொரு நாட்டின் சுகாதார மேம்பாட்டு தேவையிலும் தடுப்பூசிகள் முக்கிய...

அமெரிக்காவின் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்தியா பகிர்ந்துகொள்கிறது!

அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளின் வட்டத்தில் இந்தியா இருக்கிறது. அமெரிக்கா, தனது பாதுகாப்பு தொழில்நுட்பங்களை அதன் நெருங்கிய நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள ஒத்துக்கொண்டுள்ளது. ஐ.நா. பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்ற இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இந்திய அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் வர்த்தக அடிப்படையில் இல்லாமல், பாதுகாப்பு...

கைகளால் பலன்...(நீதிக்கதை)!

ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களிடம்...." இறைவன் நமக்குக் கொடுத்துள்ள கைகளால் என்ன பயன் " என்றார்.ஒரு மாணவன் " எதையும் சாப்பிடலாம் " என்றான்.மற்றவனோ 'யாரையும் அடிக்கலாம்' என்றான்.மூன்றாமவனோ " ஆசிரியர் அடிக்க வந்தால் தடுக்கலாம் " என்றான்.நான்காவது மாணவனோ "இறைவனை கை கொண்டு தொழலாம்" என்றான்.புத்திசாலி மாணவன் ஒருவன் எழுந்து " கை இருப்பதன் பலன் தானம் செய்வதற்கே,தர்மம் செய்வதற்கே.தானம் செய்வதால்,தர்மம் செய்வதால் இல்லாதவர்கள் மகிழ்வார்கள்.....

ஊட்டி ராஜ்பவன் உருவான வரலாறு!

சென்னையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு தான் ராஜ்பவன் என்று பெயர். ஆனால், ஊட்டியிலும் ஒரு ராஜ்பவன் இருப்பது பலர் அறிந்திராத விஷயம். சென்னை கவர்னர் மாளிகையில் என்ன வசதி உண்டோ, அத்தனையும் இங்கேயும் உண்டு. இந்த ராஜ்பவன் உருவாக்கப்பட்டதன் பின்னணியிலும் ஒரு வரலாறு உண்டு. தற்போது, ஊட்டியில் உள்ள ராஜ்பவன் 1876ம் ஆண்டு லாரன் ஆசிலம் டிரஸ்ட் அரசு இல்லம் கட்ட முடிவு செய்தது. அக்கால கட்டத்தில் சென்னை மகாண வைசிராயாக இருப்பவர்கள் கோடை காலத்தில் ஊட்டிக்கு வந்து தங்கி...

மிஷ்கினுடன் இணையும் கமல்!

இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்க்கும் திட்டத்தில் உள்ளாராம் உலக நாயகன்.கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கும் படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.முகமூடி தோல்வியால் வருத்தப்பட்ட மிஷ்கினை, இந்தப் படத்தின் வெற்றியானது மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது. பாடல்களே இல்லை, முக்கியமாக மிஷ்கினின் குத்துப்பாட்டு இல்லை, கதாநாயகி இல்லை. என பல இல்லை'கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி மிகப்பெரிய முத்திரையைப் பதித்திருக்கிறது.சமீபத்தில்...

போலிஸ் அவதாரம்! சிவகார்த்திகேயன்!

கொமடி கதாபாத்திரத்தில் இருந்து பொலிஸ் அவதாரம் எடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.       கொமடி நடிப்பில் புகுந்து விளையாடி தமிழக ரசிகர்களை எல்லாம் தன் வசப்படுத்திவிட்டார் சிவகார்த்திகேயன்.அப்படியே ஒரே மாதிரி   நடித்துக்கொண்டிருந்தால் ரசிகர்களுக்கும் போரடித்துவிடும். நடிப்பவருக்கும் சலிப்பு தட்டிவிடும்.இதனை நன்கு புரிந்துகொண்ட சிவகார்த்திகேயன் இப்போது ஓசைப்படாமல் தனது ரூட்டை மாற்றி இருக்கிறார்.சிவகார்த்திகேயன்...

மேய்வதைத் தவிர்ப்போம்: படிப்பதை பழக்கப் படுத்துவோம்!

தற்போது செய்தித்தாளை சில நொடிகளில் புரட்டிவிட்டுச் செல்வதும், விரல் நுனியில் உலகம் எனக் கூறிக்கொண்டு கணினியின் முன் அமர்ந்து நுனிப்புல் மேய்வதுபோல செய்திகளைப் படிப்பதும், நிகழ்வுகளைப் பார்ப்பதும் வாசிப்பாளர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது.ஒரு செய்தி அல்லது நிகழ்வு எதனை வெளிப்படுத்த முனைகிறது, அதன் மூலமாக புரிந்துகொள்ளவேண்டியது என்ன என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். அதற்குப் பின்னர் அடுத்த செய்தி அல்லது நிகழ்வினைப் படிக்க ஆரம்பிக்கும்போது அதனதன் அடிப்படை...

கர்ப்ப கால டயட்டும் உடற்பயிற்சியும்!

ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் மறுபிறவி என்பார்கள். காரணம் குழந்தையை கருவில் சுமக்கும் போது பெண்கள் உடல் ரீதியாகவும்  மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கின்றனர். இதனை எதிர்கொள்ள ஆரோக்கியமான உணவும் உடற்பயிற்சியும் அவசியம். கர்ப்ப காலத்தை மூன்று வகைகளாக பிரிக்கலாம் என்று ஆரம்பித்தார் உணவு ஆலாசகர் அம்பிகா சேகர். "முதல் மூன்று மாதம் வாந்தி, மயக்கம்,  சோர்வு போன்ற பிரச்சனைகள் இருக்கும். எந்த உணவையும் சாப்பிட பிடிக்காது". எனவே மாதுளம் பழசாற்றுடன்...