Sunday, 1 September 2013

இனி காலை 8 டூ இரவு 8 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை: மத்திய அரசு பரிசீலனை!

”பெட்ரோல், டீசல் விற்பனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒன்று, நகர்ப்புறங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் விற்பனை நிலையங்களை திறந்து வைப்பது. அதாவது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை விற்பனையை நிறுத்தி வைக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.”என்று மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

sep 2 petrol-pump_
 

இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மிகவும் குறைவு என்பதால், வளைகுடா நாடுகளில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக மத்திய அரசு அதிக அளவில் அன்னிய செலாவணியை பயன்படுத்துகிறது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போது உயர்ந்து இருப்பதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து உள்ளதாலும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடும் தொகை மிகவும் அதிகரித்து உள்ளது. 

பெட்ரோலிய பொருட்களை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விற்க முடியாததன் காரணமாக, 2013–2014–ம் நிதி ஆண்டில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடியாக உயர்ந்து விடும் என மத்திய அரசு கருதுகிறது.

இதனால் சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்த வேண்டும் என்றும், மேலும் பெட்ரோல், டீசல், மண்எண்ணெய் ஆகியவற்றின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டும் என்றும் கோரி பெட்ரோலிய துறை மந்திரி வீரப்ப மொய்லி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருக்கிறார். 

இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஆகும் செலவை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பெட்ரோலிய துறை அமைச்சகத்தை மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டு உள்ளார். 

பெட்ரோல், டீசல் விற்பனையை குறைக்கும் வகையில் சில சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இதுபற்றி அமைச்சர் வீரப்ப மொய்லி ,”நாம் இப்போது ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருப்பதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாத வகையில் சில சிக்கன நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே சில நாடுகளில் எடுக்கப்பட்டு உள்ளன. 

பெட்ரோல், டீசல் விற்பனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒன்று, நகர்ப்புறங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் விற்பனை நிலையங்களை திறந்து வைப்பது. 

அதாவது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை விற்பனையை நிறுத்தி வைக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முறையை அமல்படுத்தும் பட்சத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த யோசனை பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் இதுபற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இந்த சிக்கன நடவடிக்கையின் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பில் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு குறைக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.

பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரி வருகிற 16–ந் தேதி முதல் 6 வாரங்களுக்கு நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. பெட்ரோல், டீசலின் பயன்பாட்டை 3 சதவீதம் குறைக்கும் பட்சத்தில் ரூ.16 ஆயிரம் கோடி சேமிக்க முடியும் என்று கருதுகிறோம்.இவ்வாறு மத்திய மந்திரி வீரப்ப மொய்லி கூறினார். 

இரவில் பெட்ரோல் விற்பனை நிலையங்களை மூடும் யோசனைக்கு பாரதீய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுபற்றி அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் கூறுகையில்; பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறந்து இருப்பது மிகவும் அவசியம் என்று கூறிய அவர், காலை நேரத்தில் விற்பனை நிலையங்கள் மூடி இருந்தால் மக்கள் தங்கள் வாகனங்களுக்கு எப்படி பெட்ரோல், டீசல் நிரப்புவார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார். 

டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்சியை வடிவமைக்கிறது கூகுள்



டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்சியை கூகுள் நிறுவனம் விரைவில் தயாரிக்க உள்ளது.
தொழில்நுட்ப துறையில் முன்னணியில் இருக்கும் கூகுள் நிறுவனம், கடந்த 2010ம் ஆண்டு கார்களில் தானியங்கி தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இருப்பினும் எந்தவொரு நிறுவனமும் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை.

இதனையடுத்து தானாகவே கார்களை உற்பத்தி செய்ய நினைத்த கூகுள், டிரைவர் இல்லாமல் இயங்கும் ரோபோ டாக்சிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக காரில் கமெராக்கள், ரேடார்கள் மற்றும் கணனி தொழில்நுட்பங்களை கூகுளே வழங்கவுள்ளது.
இந்த கார்கள் பயணிகளை ஏற்றிச் சென்று குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும்.

இதற்கான பணிகள் முடிவடைந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் லண்டன் வீதிகளில் சோதனை ஓட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த கார்களால் சாலை விபத்துகள் மிகவும் குறைவாக இருக்கும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது.
போக்குவரத்து துறையையே இக்கார்கள் அடியோடு மாற்றிவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Google considering turning self-driving cars into a 'robo-taxi' service:

Although Google’s self-driving cars have been a technological success the search-giant has had difficulty finding a method of getting the vehicles into mainstream use. However, new reports now suggest that the company is considering using their vehicles to create an autonomous ‘robo-taxi’ service.

The self-driving vehicles would pick-up and drop-off passengers without human intervention, and would presumably be paired with a mobile application.

Google recently led an investment of $258 million in Uber, a three-year old taxi-hailing app now valued at $3.5bn. Uber started by offering customers the chance to order high-end vehicles from their mobiles within minutes, but the service has been so popular that a string of competitors have emerged (including Lyft, Hailo and Sidecar) whilst taxi unions and local governments have sought to obstruct the service’s growth.
It’s not clear whether Google would operate a fleet of cars themselves or hire out their expertise to other companies. Tech reporter Amir Efratihas said that Google had previously considered offering the service as a trial to specific cities as they have with Google Fibre. This would hopefully stimulate interest in the project and pressure other industry players to get involved.

Rival car-makers including Mercedes-Benz, Nissan and Toyota have all developed prototype self-driving cars and sources within the industry believe that these incumbent players are unwilling to welcome Google into the fold.

However, last Thursday German newspaperFrankfurter Allgemeine Zeitung reported that Google was nearing a deal with Continental, a major automotive supplier based in Germany, suggesting that the Californian tech company are moving towards manufacturing their own vehicles.

Currently Google’s self-driving cars use the Toyota Prius, a full-hybrid hatchback that typically costs around $25,000 in the US, and retrofit these with an array of sensors, cameras and computers. Although no official prices for the finished vehicles have been released, it’s expected that the necessary technology costs upwards of $100,000.

It would be an incredible risk for Google to cough up the funds necessary to start manufacturing vehicles, and although the self-driving cars are operated from within Google X (an R&D lab that houses all of the company’s ‘moonshots’ or high-risk projects) it still seems more likely that the company will continue to explore alternative avenues.

As well as finding a business model that works Google also face an uphill battle with regulation and local laws. The cars have been cleared to drive in four states in the US, and UK legislators have also given permission for tests of autonomous vehicles.

Google’s cars have so far only been involved in two accidents – one involved the car being rear-ended after stopping at a red light and the other occurred after a human driver took control of the vehicle.

சர்க்கரை நோயாளிகளுக்கான மிகச் சிறந்த பழங்கள்!



நீரிழிவு நோய் வருவதற்கு காரணம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான்.
மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

கிவி

கிவி பழம் நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

செர்ரி

செர்ரி பழங்களில் கிளைசீமிக் இன்டெக்ஸின் அளவு 20 மற்றும் அதற்கு குறைவாகத் தான் இருக்கும்.

எனவே இதனை அவ்வப்போது அளவாக சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

கொய்யா

கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும்.
அதுமட்டுமின்றி கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.

பீச்

மிகவும் சுவையான பீச் பழத்திலும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. எனவே இந்த பழத்தையும் தைரியமாக நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.

பெர்ரிப் பழங்கள்
 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த ஒரு பயமும் இன்றி பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றை சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

அன்னாசி

அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டி-வைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது.

பேரிக்காய்

சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் பேரிக்காயை சாப்பிடுங்கள். ஏனென்றால் பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

பப்பாளி

பப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.

அத்திப்பழம்

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ள உதவும். அதிலும் இதனை தினமும் அளவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

தர்பூசணி

தர்பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இதனை அளவுக்கு மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு நீர்ச்சத்தானது கிடைத்து, உடல் வறட்சியானது தடுக்கப்படும்
.
மாதுளை

அழகான சிவப்பு நிறத்தில் உள்ள மணிகளைக் கொண்ட மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக்கூடிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

முலாம்பழம்

முலாம் பழத்திலும் தர்பூசணியைப் போன்றே கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. ஆனால் இதில் நல்ல அளவில் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால், அளவாக சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.

நட்சத்திரப் பழம்

இந்த பழமும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற, இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் பழமாகும். ஆனால் அளவாக சாப்பிட வேண்டும்.

வெள்ளை கொய்யா(White Jamun)

நாவல் பழத்தைப் போல் இது மிகவும் பிரபலமாக இல்லாவிட்டாலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான ஒரு பழம்.

இதனை நீரிழிவு நோயாளிகள், தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

நெல்லிக்காய்

கசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும்.

இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.

ESI கழகத்தில் ஹிந்தி மொழி பெயர்ப்பாளர் பணி!

மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ESI -ல் காலியாக உள்ள இந்தி மொழி பெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Hindi Translator

காலியிடங்கள்: 62

sep 1 - vazhikatti esi

 


சம்பளம்: ரூ.9,300 – 34,800

வயதுவரம்பு: 28-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: இளங்கலை பட்டத்துடன் இந்தி அல்லது ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட ஏதாவதொரு பட்டப் படிப்பை முடித்து இந்தி அல்லது ஆங்கிலம் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ESI Fund Account No.1, New Delhi என்ற பெயரில் டி.டி.யாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.


விண்ணப்பிக்கும் முறை: 


தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.esic.nic.in/recruitment.php என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும். அல்லது வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Joint Director(Recruitment), E.S.I. Corporation, Panchdeep Bhawan, C.I.G.Marg. New Delhi -110002.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.10.2013

புதுப்பிக்கப்படாத பாலிசிகளை அக்டோபருக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்: எல்.ஐ.சி. தகவல்!

கடந்த 5 ஆண்டுகளுக்குட்பட்ட புதுப்பிக்கப்படாத பாலிசிகளை, பாலிசிதாரர்கள் வரும் அக்டோபர் மாதத்துக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் எனறும் பாலிசி இலக்கை அடையும் நோக்கத்தில் தவறான தகவல்கள் தரும் முகவர்கள் குறித்து பாலிசிதாரர்கள் புகார் அளித்தால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.எனவும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின்( எல்.ஐ.சி) தென்மண்டல மேலாளர் சித்தார்த்தன் கூறினார்.


sep 1 - lic policies

 


இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் 57-ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை(செப்.1) கொண்டாடப்படுகிறது. இது குறித்து எல்.ஐ.சி. தென்மண்டல மேலாளர் சித்தார்த்தன் செய்தியாளர்களிடம் பேசும் போது,”தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளத்தை உள்ளடக்கிய எங்கள் நிறுவனத்தின் தென்மண்டலத்தில் வாடிக்கையாளர் வசதிக்காக, தற்போது 264 கிளைகள், 248 துணை கிளை அலுவலங்கள் உள்ளன. 57- ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, 10 ஆயிரம் மக்கள்தொகை உள்ள பகுதிகளில், 2014- ஆம் ஆண்டு மார்ச்சுக்குள் 234 சிறு கிளைகள் நிறுவப்பட உள்ளன.பங்குச் சந்தையுடன் தொடர்புடைய பாலிசிகளை எடுப்பதற்கு முன் அவை குறித்த சந்தேகங்களை வாடிக்கையாளர்கள் தங்கள் முகவர்களிடம் தெளிவாக கேட்டறிய வேண்டும். பாலிசி இலக்கை அடையும் நோக்கத்தில் தவறான தகவல்கள் தரும் முகவர்கள் குறித்து பாலிசிதாரர்கள் புகார் அளித்தால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் 1.7 கோடி பேர் உட்பட தென்மண்டலத்தில் எல்.ஐ.சி. வாடிக்கையாளர் அல்லாதவர்களாக கண்டறியப்பட்டுள்ள 2.5 கோடி பேரை, நடப்பு நிதியாண்டில் பாலிசிதாரர்களாகச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த 5 ஆண்டுகளுக்குட்பட்ட புதுப்பிக்கப்படாத பாலிசிகளை, பாலிசிதாரர்கள் வரும் அக்டோபர் மாதத்துக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்காக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் வட்டித் தொகையில் இருந்து 2,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். இதுதொடர்பான விவரங்களை எல்.ஐ.சி. அலுவலகங்கள் மற்றும் முகவர்களிடம் பாலிசிதாரர்கள் பெறலாம்.செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை, மண்டலம் மற்றும் கிளை அலுவலங்களில் பாலிசிதாரர் சிறப்பு சேவை மையங்கள் செயல்படும். இவற்றில் பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசி தொடர்பான பல்வேறு சந்தேகங்களைக் கேட்டறியலாம்” என்றார் சித்தார்த்தன்.

கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச்சிறந்த 25 மனிதர்களில் முதல் இடத்தைப் பிடித்தார் ரஜினி!!

என்டிடிவி நிறுவனம் தனது வெள்ளி விழாவையொட்டி, கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச்சிறந்த 25 மனிதர்கள் யார்? என்று நாடு தழுவிய ஒரு கருத்துக்கணிப்பை இணையதளம் மூலம் நடத்துகிறது. பொதுமக்கள் அதில் நேரடியாக வாக்களிக்கலாம். இந்த பட்டியலில் கடந்த 25 ஆண்டுகளில் வாழும் இந்தியர்களில் மிகச்சிறந்த 25 பேர் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினி முதலிடம் பிடித்துள்ளார்.

sep 1 rajini-kanth

 


அவருக்கு அடுத்தபடியாக சச்சின் டெண்டுல்கர் 2-வது இடத்திலும், அப்துல் கலாம் 3-வது இடத்திலும், ஏ.ஆர்.ரஹ்மான், டோனி, கபில்தேவ், ரத்தன் டாடா என அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆளுமை கொண்ட விவிஐபிக்கள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளனர். ஆன்லைனில் வெளியாகும் நேரடியான கருத்துக்கணிப்பு என்பதால், ஒவ்வொரு நாளும் வாக்குகளின் அடிப்படையில் யாருக்கு என்ன இடம் என்ற விவரம் அந்த நிறுவன இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. 

மூன்று தினங்களுக்கு முன் 5-ம் இடத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு 7.03 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அவருக்கு அடுத்து சச்சின் டெண்டுகர் 6.99 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அமிதாப் பச்சனுக்கு 10-வது இடமும், ஷாரூக்கானுக்கு 13-வது இடமும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

பழைய ஐபோனுக்குப் பதில் புதுசு! – ஆப்பிளின் அதிரடி விரைவில் ஆரம்பம்!

ஆப்பிள் நிறுவனம் USல் ஆப்பிள் ஐபோன்களுக்கு ஒரு புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் டிரேட் இன் புரோகிராம் என்று அழைக்கப்படும் இந்த சலுகையின் மூலம் ஐபோன் பயன்படுத்துபவர்கள் தங்கள் பழைய ஐபோனை ஆப்பிள் ஸ்டோரில் கொடுத்து அதில் கிடைக்கும் பணத்தை புதிய ஐபோன் வாங்குவதற்க்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.


sep 1 Apple-iphone-5- 


செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி ஆப்பிள் தனது புதிய ஐபோன்களை வெளியிடும் என்ற தகவல் பரவலாக உள்ளது. ஆப்பிள் நிறுவனம் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை என்றாலும் ஆப்பிள் அறிவித்துள்ள இந்த சலுகை விரைவில் ஐபோன்கள் வரும் என்பதை உறுதி செய்கிறது.

பழைய ஐபோன்களுக்கு US மார்கெட் மற்றும் உலக அளவில் உள்ள மார்கெட்களில் வரேவேற்பு நிறைய உள்ளது. ஈபே(ebay) போன்ற ஆன்லைன் மார்கெட்டில் இது போன்று ஐபோன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பழைய ஐபோன்களுக்கு மவுசு இருப்பதால்தான் ஆப்பிள் நிறுவனம் இந்த சலுகையை வெளியிட்டுள்ளது.

பழைய ஐபோன்களுக்கு ஆப்பிள் ஸ்டோரில் எவ்வளவு விலை கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. அநேகமாக ஆப்பிள் ஐபோன் 5க்கு ரூ.18,000 முதல் ரூ.20,000 வரை விலை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேர்க்கடலையின் மகத்துவம்.

groundnut2

நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம். !!

பிரபல ஊட்டச்சத்து நிபுணர் அனிதா அவர்கள், “சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், புற்றுநோய், நரம்புமண்டல நோய்கள், ஞாபக மறதி நோய் போன்ற பல நோய்களைத் தடுக்கும் சக்தி வேர்க்கடலைக்கு உள்ளது” என்றார்.
தஞ்சை “பாரத் காலேஜ் ஆஃப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட்” – இல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டச்சத்துத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்த அவர், தற்போது இருப்பது வேலூர் பாகாயம் பகுதியில். ஊட்டச் சத்து ஆலோசகரான அவரிடம் பேசியதிலிருந்து…

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி பிளட் பிரஷரைத் தடுக்கும்?

வேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். வேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது. ஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை நல்ல உணவு.

சர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது?
நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள்.
வேர்க்கடலையில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு. அதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.

வேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன?
ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது. வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.
வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் பருமன் குறையும்.

இன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், “சாப்பிட்டது போதும்” என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும். எனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. இதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும். அடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.

வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.

வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.
வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.

நாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள். இப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும். பின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.

ஆனால் வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.

வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். பார்க்கின்ஸன், அல்ஸ“மர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.

இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது.
வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே? அது உடலுக்குக் கெடுதி இல்லையா?

தண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும். இதை நீரின் கொதிநிலை என்பார்கள். அதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள்.
எண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.

கடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம். பிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.
ஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320. இதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதிநிலையை அடையாது. அதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது. அதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும். இப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா?

ஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.
சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.
வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடலாமா? ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?
வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.
ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.

வேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது. எனவே புத்தம் புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.