Sunday 1 September 2013

புதுப்பிக்கப்படாத பாலிசிகளை அக்டோபருக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்: எல்.ஐ.சி. தகவல்!

கடந்த 5 ஆண்டுகளுக்குட்பட்ட புதுப்பிக்கப்படாத பாலிசிகளை, பாலிசிதாரர்கள் வரும் அக்டோபர் மாதத்துக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் எனறும் பாலிசி இலக்கை அடையும் நோக்கத்தில் தவறான தகவல்கள் தரும் முகவர்கள் குறித்து பாலிசிதாரர்கள் புகார் அளித்தால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.எனவும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின்( எல்.ஐ.சி) தென்மண்டல மேலாளர் சித்தார்த்தன் கூறினார்.


sep 1 - lic policies

 


இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் 57-ஆவது ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை(செப்.1) கொண்டாடப்படுகிறது. இது குறித்து எல்.ஐ.சி. தென்மண்டல மேலாளர் சித்தார்த்தன் செய்தியாளர்களிடம் பேசும் போது,”தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளத்தை உள்ளடக்கிய எங்கள் நிறுவனத்தின் தென்மண்டலத்தில் வாடிக்கையாளர் வசதிக்காக, தற்போது 264 கிளைகள், 248 துணை கிளை அலுவலங்கள் உள்ளன. 57- ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, 10 ஆயிரம் மக்கள்தொகை உள்ள பகுதிகளில், 2014- ஆம் ஆண்டு மார்ச்சுக்குள் 234 சிறு கிளைகள் நிறுவப்பட உள்ளன.பங்குச் சந்தையுடன் தொடர்புடைய பாலிசிகளை எடுப்பதற்கு முன் அவை குறித்த சந்தேகங்களை வாடிக்கையாளர்கள் தங்கள் முகவர்களிடம் தெளிவாக கேட்டறிய வேண்டும். பாலிசி இலக்கை அடையும் நோக்கத்தில் தவறான தகவல்கள் தரும் முகவர்கள் குறித்து பாலிசிதாரர்கள் புகார் அளித்தால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் 1.7 கோடி பேர் உட்பட தென்மண்டலத்தில் எல்.ஐ.சி. வாடிக்கையாளர் அல்லாதவர்களாக கண்டறியப்பட்டுள்ள 2.5 கோடி பேரை, நடப்பு நிதியாண்டில் பாலிசிதாரர்களாகச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த 5 ஆண்டுகளுக்குட்பட்ட புதுப்பிக்கப்படாத பாலிசிகளை, பாலிசிதாரர்கள் வரும் அக்டோபர் மாதத்துக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்காக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் வட்டித் தொகையில் இருந்து 2,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். இதுதொடர்பான விவரங்களை எல்.ஐ.சி. அலுவலகங்கள் மற்றும் முகவர்களிடம் பாலிசிதாரர்கள் பெறலாம்.செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை, மண்டலம் மற்றும் கிளை அலுவலங்களில் பாலிசிதாரர் சிறப்பு சேவை மையங்கள் செயல்படும். இவற்றில் பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசி தொடர்பான பல்வேறு சந்தேகங்களைக் கேட்டறியலாம்” என்றார் சித்தார்த்தன்.

0 comments:

Post a Comment