Saturday, 7 December 2013

பறவையா? பூவா? அதிசயம்!

தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு வகை பூ, கிளியின் உருவத்தை ஒத்தது. தூர இருந்து பார்த்தால் கிளியென்று ஏமாந்து விடுவர்.இந்த வகை பூக்கள் தாய்லாந்தில் மட்டுமே காணப்படுகின்றன.இந்த கிளிப் பூ மரத்தை தாய்லாந்துக்கு வெளியில் எடுத்துச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.இதனால் இந்த அரிதான பூ இனத்தை தாய்லாந்து நாட்டுக்கு சென்றால் மட்டுமே பார்க்க முடியு...

இ‌ப்படியு‌ம் ‌சில ம‌னித‌ர்க‌ள் !!

உன‌க்காக உ‌யிரையே‌க் கொடு‌ப்பே‌ன் எ‌ன்று காத‌ல் வசன‌ம் பே‌சி, காத‌லி‌த்து, க‌ல்யாண‌ம் செ‌ய்து கொ‌ண்டு ‌பிறகு ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் அடிதடி ரகளை நட‌ப்பது இய‌ல்பான ‌விஷய‌ம். ஒரு வேளை, காத‌லி‌த்து க‌னி‌ந்துரு‌கி, இறு‌தி‌யி‌‌ல் ‌ஏதேனு‌ம் காரண‌த்தா‌ல் ஒ‌ன்று சேர முடியாம‌ல் போனா‌ல், காதலனோ, காத‌லியோ செ‌ய்யு‌ம் ‌விப‌ரீத செய‌ல்களை இ‌ங்கு ‌நினைவூ‌ட்ட ‌விரு‌ம்பு‌கிறோ‌ம்.தான் கற்ற க‌ல்‌வியையு‌ம், பெற்ற அனுபவ‌த்தையு‌ம், பயன்படுத்தி, மற்றவர்களுக்கு நல்லது செய்வது‌ம் உ‌ண்டு, ‌சில‌ர் அதனை‌ப் பய‌ன்படு‌த்‌தி ‌தீமை செ‌ய்வது‌ம், பழிவா‌ங்குவது‌ம் உ‌ண்டு.இ‌தி‌ல் இர‌ண்டா‌ம்...

மனைவியின் மனதை கவர்வது எப்படி...?

டிப்ஸ் -1:மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர் பார்க்கிறாள். அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவிக்கு வெறும் ' உம் ' 'உம் ' என்று வேண்டாவெறுப்பாக பதிலளிக்காமல்,அவள் பேசுவது ' உப்பு சப்பில்லாத டப்பா ' மேட்டராக இருந்தாலும் அவள் முகம் பார்த்து கவனியுங்கள். 'உம்' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ! அப்படியா", " ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின்இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும். உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம்...

காலத்தை வென்று பிரகாசியுங்கள்!

                                          காலத்தை வென்று பிரகாசியுங்கள்ஒரு துறையில் நீங்கள் சில ஆராய்ச்சிகள் செய்கிறீர்கள். உங்கள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் சில விஷயங்களைக் கண்டுபிடிக்கிறீர்கள். அதை உலகுக்கு அறிவிக்க நினைக்கிறீர்கள். அந்த அறிவிப்பு விழாவுக்குஅந்தத் துறையில் உச்சாணிக் கொம்பில் உள்ள அறிஞரை அழைக்கிறீர்கள். அவர் உங்களுடைய ஆதர்ச...

ஒழுக்கம் அவசியமா?

ஒழுக்கம் என்ற சொல்லே பல இளைஞர்களுக்கு கசப்பான சொல்லாகத் தெரிகிறது. வாழ்க்கையை வாழத் துடிக்கும் வயதில் வாழ்ந்து முடித்த கிழடுகள் தங்களுக்குப் போடும் அனாவசியக் கடிவாளமாக பல இளைஞர்கள் நினைக்கிறார்கள். வாழ்வது ஒரு முறை அதில் அத்தனை அனுபவங்களையும் சுகித்து விட வேண்டாமா என்று நினைக்கிறார்கள். உண்மையில் வள்ளுவர் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை ஒழுக்கத்திற்கு தேவைக்கும் அதிகமாக முக்கியத்துவம் தந்து விடுகிறோமா? விடைக்கு ஒரு கதை...கதிர் ஒரு கட்டிளங்காளை. மிகவும் ஒழுக்கமானவன். எல்லா விஷயங்களிலும் கட்டுப்பாடுடையவன். தன் உடலை உடற்பயிற்சிகளாலும், யோகாசனங்களாலும்...

நட்பு ?

கூடிப் பழகுதலும், அடிக்கடி சந்தித்தலும், ஒருவரையொருவர் விசாரித்தலும் மட்டுமே நட்பாகிவிடாது. கூடிப் பழகாவிட்டாலும், மனதால், உணர்ச்சியால் ஒன்றுபடுவதே உண்மையான நட்பு என்கின்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.மனித வாழ்க்கையில் காதலைவிட சிறந்தது எதுவென்றால் அம்மாவின் அன்பிற்க்கு அடுத்ததாக சிலவேளைகளில் அம்மாவின் அன்பைவிட சிறந்தது நட்பாகும்.பாடசாலைக் காலத்தில் கிடைக்கும் நட்பு மிகவும் அலாதியானது. வாழ்க்கையின் எந்தக் கஸ்டங்களையும் அனுபவிக்காமல் அல்லது புரியாமல் அந்த பச்சிளம் வயதில் ஒருவருடன் ஒருவர் செல்லமாக சண்டைப்படுதல், கோபித்துக்கொண்டு சில நாட்கள் இருந்தாலும்...

திருமணம் - கட்டுரை!

திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான திருப்பத்தை உருவாக்கும் சடங்காகக் கருதப்படுகிறது. திருமணம் என்ற தமிழ்ச் சொல்லே மிக உயர்ந்த பொருளை உள்ளடக்கியது.திரு என்பது கண்டார் வியக்கும் தெய்வத் தன்மை என்ற பொருளைக் கொண்டது. இன்னார்க்கு இன்னார் என்பது தெய்வத்தின் செயலாகக் கருதப்படுகிறது.புலப்படாமல் அரும்பாக மறைந்திருந்த தெய்வத்தின் பங்கு மலர்ந்து இன்னார்க்கு இன்னார் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கும் போது அங்கே தெய்வீக மணம் கமழ்கிறது.சடங்கு...

தமிழ்ச்சொல் - வடமொழிச்சொல்!

அகம்பாவம் - தற்பெருமை.அக்கிரமம் - முறைகேடுஅசுத்தம் - துப்புரவின்மைஅதிகம் - மிகுதிஅனுக்கிரகம் - அருள்அபிவிருத்தி - வளர்ச்சிஅவசரம் - விரைவுஆகாரம் - உணவுஆசை - விருப்பம்ஆதாரம் - அடிப்படைஆரம்பம் - தொடக்கம்இந்திரியங்கள் - ஐம்பொறிகள்இரசிகன் - சுவைஞன்இருதயம் - உள்ளம்இலட்சியம் - குறிக்கோள்உஷ்ணம் - வெப்பம்உதாரணம் - எடுத்துக்காட்டுஉபயோகம் - பயன்ஏகாந்தம் - தனிமைகருணை - இரக்கம்கல்யாணம் - திருமணம்கிரயம் - விலைகும்பம் - குடம்சகோதரன் - உடன் பிறந்தான்சங்கீதம் - இசைசமாதானம் - அமைதிசர்வகலாசாலை - பல்கலைக் கழகம்சீக்கிரம் - விரைவுசீலம் - ஒழுக்கம்சுகந்தம் - நறுமணம்சொப்பனம்...

பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்!

 ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.Plastic waste - கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே- தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு...

புறக்கணிக்கப்பட்ட கவிதை!

'இன்று மிகச்சிறந்த கவிஞராக கொண்டாடப்படும் ஷெல்லி வாழும் காலத்தில் புறக்கணிக்கப்பட்டவர். தன்னுடைய கவிதையை வெளியிடுவதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டவர். அவர் இறந்து பதினேழு ஆண்டுகள் கழித்துத்தான் அவரது கவிதைகள் அவரது மனைவியால் வெளியிடப்பட்டன.1810 ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் ஷெல்லி. தனது 17 வயதில் நாத்திகத்தின் அவசியம் (The Neccessity of Atheism) என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்காக அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அத்துடன் அவரது கல்லூரிப்படிப்பு முடிந்தது. தொடர்ந்து இதுபோன்ற...

சீதனம்!

சீதனம். இது அகராதியில் இல்லாத வார்த்தையுமல்ல.. புதிதாக மெருகேற்றப்பட்ட சொல்லும் அல்ல.. ஆனால் நிரந்தரமானது. எல்லா சமுதாய மட்டத்தின் இதயத்துக் குள்ளும் அடங்கி இதயத்தை அடைக்க வைக்கிற வலிமைமிக்க வார்த்தை. இவ்வையகத்துக்கு பெண் வரம் வேண்டி வந்த சமுகத்தின் காதுகளுக்கு நெருப்பை ஊற்றும் சொல் மட்டுமல்ல.. பெண்ணுக்குப் பெண்ணே (பெரும்பாலும்) எதிரியானவள் என்று வெளிச்சம் போட்டுக்காட்டும் கலங்கரை விளக்கம்.இந்தச் சீதனம் காலத்துக்குக் காலம் உருமாறி பணமாகப், பொருளாக, நகையாக மாற்ற மடைந்து தற்போது எதுவுமே வேண்டாமெனக் கூறி (அவசரப்படவேண்டாம்) சிறிதாக ஒரு வீடு அல்லது...

மனப் போராட்டத்தை தவிர்ப்பது எப்படி?

பயனற்ற, தேவையற்ற, நம்பிக்கை இல்லாத, மோசமான எண்ண உணர்வுகளை; நாம் பயனுள்ள, தேவையான, நம்பிக்கையான, மேன்மையான உணர்வுகளாக மாற்ற வேண்டும். இதை நம் அறிவால் ஆற்றலால் மாற்றி அமைக்க முயற்சிக்க வேண்டும். இது முடியுமா? என்ற எண்ணம் நமக்கு வரும், ஆனால் நம் மனது இடம் கொடுத்தால் நிச்சயம் முடியும். தியானம், சுவாசப்பயிற்சி, மகிழ்ச்சி தரும் இயற்கை சூழல்களுக்கு செல்லுதல். வழிபடும் ஆலயங்களுக்கு செல்லுதல், இசை கேட்பது, இசை கருவிகளை மீட்டுவது, நகைச்சுவை உணர்வை ஏற்படுத்தும்...

காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா?

"தற்போது அனைத்து வங்கியின் காசோலை ஒரே அளவில் உள்ளது. எனவே காசோலையில் தேதி, பெயர், தொகை - எண்ணால் மற்றும் எழுத்தால் உரிய இடத்தில் வீட்டில் உள்ள பிரிண்டரில் டைப் செய்ய வழி முறை உள்ளதா?" என்று கேட்டிருந்தார். நான் வோர்டில் இந்த செட்டிங்சை செய்து வைத்திருந்தேன். ஆனால் அதைவிட எளிதாக காசோலை கணக்குகளை எளிதில் கையாளும் வண்ணம் எக்செல்லில் ஒரு இலவச டெம்ப்ளேட் கிடைத்தது. அதன் மூலம் நம் வீட்டில் கூட பிரிண்டரில் காசோலையில் பெயர் தேதி தொகைகளை எளிதாக...

மனிதனை பற்றிய சில உண்மைகள்! ! ! !

 * இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வதுமாதத்திலிருந்துஉரு வாகின்றன.* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள்ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும்40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி...

கிரெடிட் கார்டும்.. கஸ்டமர் கேரும்.?

கிரெடிட் கார்டு புழக்கம் அதிகமாக இருக்கற காலம் இது.. பெரும்பாலும் ஐ.டி துறையினர்தான் கிரெடிட் கார்டுக்கு அடிமையாய் இருக்காங்க.. ஒருமுறை கிரெடிட்கார்டை யூஸ் பண்ணிப் பழக்கப்படுத்திட்டோம்னா.. எந்தக் கடைக்குப் போனோம்னாலும் சரி.. நமக்கு எவ்வளவு சம்பளம்.. எவ்வளவுக்கு சாப்பிட வைச்சிருக்கோம் எதுவும் நினைப்பு இருக்காது.. எடுத்து சரக்.. முடிஞ்சது.. அடுத்து பில் வந்ததுக்குப் அப்புறம்தான் மண்டையில ஏறும்.. இதுக்கெல்லாம் பணம் கட்டனுமான்னு..பொருட்கள் வாங்கினது...

வெட்கப்படும் பிராணி மனிதன்தான்…(பொன்மொழிகள்)

1.  சந்தோஷத்தைவிட கஷ்டங்கள் மனிதனுக்கு நிறைய,நல்ல படிப்பினைகளை சொல்லிக் கொடுக்கின்றன.-விவேகானந்தர்2.  மூடனுக்கு அறிவுரை கூறினால் நமக்குத்தான் கேடு வரும்.-எமவ்ரென்3.  கடைசிவரை அமைதியாக இருப்பதுமிகவும் பெருமைக்குரிய விஷயம்.-வில்லியம் ஜேம்ஸ்4. அரைகுறை படிப்புக்கு அகந்தை அதிகம்.-மாத்யூ5. உயர வேண்டுமானால் பணிவு வேண்டும்.-சாப்மன்6.  எல்லாவிதத் தவறுகளுக்கும் அடிப்படைக் காரணம் அகங்காரம்.-கிப்ஸன்7.  இடையூறுகளும் துன்பங்களுமேமனிதனை மனிதனாக்குபவை.-மாத்யூஸ்8.  அறிவு என்பது மேஜை விளக்கு. அன்பு என்பது கலங்கரை விளக்கு.-லால்ரிட்ஜ்9. ...

ஜிமெயிலில் Handwriting உள்ளீட்டு வசதியை உருவாக்கிக்கொள்வதற்கு...?

கூகுள் நிறுவனமானது ஜமெயில் மற்றும் கூகுள் டொக்ஸ் ஆகியவற்றிற்கு தட்டச்சு மூலம் மட்டுமின்றி தற்போது கையால் எழுத்தும் எழுத்துக்களை உள்ளீடு (Input) செய்யும் வசதியை தந்துள்ளது.இதன் மூலம் கூகுள் டொக்ஸில் 20 இற்கு மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்தியும், ஜிமெயிலில் 50 இற்கு மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்தியும் உள்ளீடு செய்ய முடியும்.இதனை செயற்படுத்துவதற்கு முதலில் ஜிமெயிலினை ஓப்பன் செய்து, தொடர்ந்து செட்டிங்ஸ் செய்வதற்கான ஐகானை கிளிக் செய்யவும்.அதில் General பகுதியில் தென்படும் Enable input tools என்பதை தெரிவுசெய்யவும். இந்த ஒப்சன் தென்படைவில்லையாயின் Show all...

கணனி பராமரிப்பு பற்றி சூப்பர் டிப்ஸ்!

கணனிகள் இன்றைய கால கட்டத்தில் மனிதனின் மூன்றாவது கையாகவே மாறிவிட்டது எனலாம்.இருப்பினும் நாம் அந்த கணனியின் முழுத் திறனையும் பயன்படுத்தும் வகையில் அதனை வைத்திருக்கிறோமா? பராமரிக்கிறோமா? அதில் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய வேலைகளை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறோமா? என்றால், நிச்சயமாய் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.அப்படி நாம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய, ஆனால் பெரும்பாலானவர்கள் மேற்கொள்ளாத சில வேலைகளை இங்கு காணலாம்.சி.பி.யு (CPU)உங்கள் கணனியை நீங்கள் சுத்தமாக வைத்திருக்கிறீர்களா? கணனியை சுற்றிப் பரவும் தூசியும் அழுக்கும், கணனி சிபியுவில் புகுந்து,...

ஹாலிவுட் ஹீரோவுக்கு பயந்து டைட்டில் மாற்றிய பிரபுதேவா!

ஹாலிவுட் ஹீரோ சில்வஸ்டர் ஸ்டேலோனுக்கு பயந்து தான் இயக்கும் பட டைட்டிலை மாற்றினார் பிரபுதேவா. தமிழில் போக்கிரி, வில்லு உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபுதேவா தற்போது பாலிவுட் படங்களை இயக்குகிறார். ஷாஹித் கபூர் நடிக்கும் ஆர் ராஜ்குமார் படத்தை தற்போது இயக்கியுள்ளார். முன்னதாக இப்படத்துக்கு ராம்போ ராஜ்குமார் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. திடீரென்று அதை ஆர் ராஜ்குமார் என்று சுருக்கினார். ஹாலிவுட் ஹீரோ சில்வஸ்டர் ஸ்டேலோன் ஏற்கனவே ராம்போ பெயர்கொண்ட...

கவுதம் மேனனின் சட்டென்று மாறுது வானிலை!

வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் என்று சினிமா பாடல் வரிகளை தனது படங்களுக்கு டைட்டிலாக வைக்கும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், அடுத்தப்படத்துக்கும் பாடல் வரியை டைட்டிலாக வைத்துள்ளார். அவர் இப்போது இயக்கும் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். புதுமுகம் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார்.ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்தப் படத்துக்கு சட்டென்று மாறுது வானிலை என்ற சினிமா பாடல் வரி டைட்டிலாக...

இறுதிக்கட்டத்தில் ‘ஐ’

இறுதிகட்டத்தை எட்டியுள்ளது ஷங்கரின் 'ஐ'.பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம் நடிக்கும் திரைப்படம் ஐ.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.படப்பிடிப்பு இன்னும் பத்து நாட்களில் முடிவடையும் நிலையில் உள்ளதால் அதன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் ஷங்கர்.'ஐ' படத்திற்காகத் தன்னுடைய உடலமைப்பை மிகவும் மாற்றியுள்ள விக்ரம் மீண்டும் பழைய உடலமைப்பைப் பெற்ற பின்னர் இயக்குனர் தரணியின்...

எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டலில் ரீ – ரிலீஸாகிறது!

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு முன்னாள் வந்து சக்கை போடு போட்ட கர்ணன், பாசமலர், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களை தற்போது டிஜிட்டலில் புதுப்பித்து ரிலீஸ் செய்தனர். ரசிகர்கள் இப்படங்களையும் ஆர்வமாக பார்த்தார்கள். இதில் கர்ணன் படம் கணிசமாக வசூல் ஈட்டியது. இந்நிலையில் அந்த டிஜிட்டல் வரிசையில் ஆயிரத்தில் ஒருவன் படமும் மறுபடியும் ரிலீஸாகிறது.மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மெகா ஹிட் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் முக்கியமான படமாகும். 1965–ல் இப்படம் ரிலீசானது....

ஒரே டிவி இரண்டு சேனல்கள் ஒரே நேரத்தில் சாத்தியாமாயிடுச்சி!

டி வி பார்க்க ஆரம்பித்த காலம் முதல் ரிமோட்டுக்கு நடக்கும் தின ரகளைகள் உலகம் முழுவதும் உண்டு. அந்த வகையில் மக்களுக்கு ஒரு நல்ல விஷயமாக சமீபத்தில் ஓலெட் (OLED) வகை டிவிகளை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் நீங்கள் ஒரெ டிவியில் இரண்டு சேனல்களை லைவாய் பார்க்க முடியும்.எப்படி? டிவியை ஆன் செய்த பிறகு ஆப்ஷன் 1 ஆப்ஷன் 2 சேனலை செலக்ட் செய்து அப்புறம் ஆளுக்கு ஒரு கண்ணடியை போட்டால் அந்த அந்த கண்ணாடிக்கு அந்த அந்த சேனல் மட்டும் தெரியும். இதன் திரை சினிமா திரை போன்று...

குட்டீஸ்களுக்கு உணவு ஊட்டும் போது பொறுமை முக்கியம்!

 குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு. சில குழந்தைகள் உணவை விழுங்காமல் அப்படியே வெளியே தள்ளிவிடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்....

‘ரிவர்ஸபிள் யூ எஸ் பி’ – இது எப்படி மாட்டினாலும் வேலை செய்யுமாக்கும்!

 யூ எஸ் பி எனப்படும் ஒரு டிவைஸ் வராத கணனியே இல்லை. இதன் முதல் தலை முறை இரண்டாம் தலைமுறைக்கு அடுத்து மூன்றாம் தலைமுறையில் நெக்ஸ்ட் ஜெனரேஷன் யூ எஸ் பி ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளனர். இதன் மூலம் நீங்கள் விரைவாக யூ எஸ் பி சேவையை பெற முடியும் என்பதை விட இதில் எந்த கோண்த்தில் இருந்தும் சொருக முடியும்.தற்போது நிறைய யூ எஸ் பிக்களை தவறான சைடில் சொருகி லேப்டாப் டேமேஜ் ஆகிவிடும் அல்லது யூ எஸ் பின் உடைந்து விடும். அல்லது சில டிவைசை மாட்டவே முடியாது என்பதுடன்...

கிருபானந்தவாரியார்-சொற்பொழிவிலிருந்து....

 கடவுளைக் காண தேவைப்படும் கண்ணாடி !!!ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான். “ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்” என்றான்.“தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.”“ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?”“தம்பீ, காண முயலுகின்றேன்.”“கடவுளைக்...

நிமிடங்களில் மாற்றம் !

ஏழு நிமிடங்களில் நம் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவர முடியுமா? முடியும் என்கிறார் 'தி 7 மினிட் சொல்யூஷன்’ என்கிற இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் அலிசன் லூயிஸ். ஏழு நிமிடங்களில் மாற்றம் என்பது இரண்டு அடிப்படை நம்பிக்கைகளை மனதில் கொண்டு சொல்லப்படுவது என்கிறார் அவர். முதலாவது, நீங்கள் மாற வேண்டும் என்று நினைத்த நேரத்திலேயே மாறுதல் வந்துவிடுகிறது. இரண்டாவது, மாற வேண்டும் என்று நினைத்த நிமிடத்தில் இருந்து அன்றாடம் சிறுசிறு அடிகளாக முன்னேற்றத்தை நோக்கிய பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். ஆக, மாற வேண்டும் என்கிற எண்ணம்தான் மாற்றத்துக்கான வித்து. ...

எதிரிகளை வெல்ல ஸ்லோகம்

ஓம் சுதர்ஸனாய வித்மஹேஜ்வாலாசகராய தீமஹிதன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்ஓம் சுதர்சனாய வித்மஹேமஹாஜ்வாலாய தீமஹிதன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்ஓம் சுதர்சனாய வித்மஹேஹேதிராஜாய தீமஹிதன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்ஓம் சுதர்சனாய வித்மஹேமஹாமந்த்ராய தீமஹிதன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்ஓம் சுதர்சனாய வித்மஹேசக்ரராஜாய தீமஹிதன்னோ சக்ரஹ் ப்ரசோதய...

குழந்தை விரல் சூப்புவது ஏன்?

மன்னன் யுவனாச்வன் எடுத்திருக்கும் முடிவை அறிந்த மந்திரிகள் திகைத்தார்கள். அவர்களுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. கூடிக் கூடி விவாதித்தார்கள். இஷ்வாகு மன்னனான யுவனாச்வனுக்கு வாரிசு இல்லை என்று நாடே கவலைப்படுகிறது. அரசியும் அளவற்ற வேதனையில் ஆழ்ந்திருக்கிறாள். இதனிடையில் மன்னன் கானகம் சென்று தவமியற்ற முடிவெடுத்து விட்டானே? மன்னன் முடிவை எப்படி மாற்றுவது? ‘‘மன்னா! இன்னும் சிறிதுகாலம் பொறுங்கள். நாங்கள் சில முனிவர்களை அணுகி வருகிறோம். தங்கள் ஜாதகத்தைக் காட்டி, யாகத்தாலோ மந்திரங்களாலோ தங்களுக்கு புத்திர பாக்கியம் கிட்ட வழியுண்டா என்று விசாரித்து...

மழை காலங்களில் சிறந்த உணவு எது?

மழை காலங்களில் சிறந்த உணவு எது என்று பலருக்கு தெரியாமல்இருக்கும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று குழப்பமாகஇருக்கும். சிலருக்கு ஒத்துக்கொள்ளும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.இதை தீர்க்க சில உணவு குறிப்புகள்1.மழைக் காலங்களில் எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம்சாப்பிடக் கூடாது. சூடாகச் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது பஜ்ஜி,போண்டா என சாப்பிடாமல், அதற்கு பதிலாக உப்புமா உருண்டை, இட்லிசாம்பார், பிரட் டோஸ்ட் என சாப்பிடலாம். நாம் தினமும்...