Tuesday 30 April 2013

இலவசமாக கட்டண மென்பொருள் தினமும் பெறலாம். - paid software full version free


"இலவசமாக கட்டணமென்பொருள் தினமும் பெறலாம்."
        இணையத்தில் கட்டண மென்பொருளுக்கு இணையாக வேலை செய்யும் அளவிற்கு இலவச மென்பொருட்கள் இருந்தாலும் அனைவரும் கட்டண மென்பொருளையே விரும்புவார்கள். ஏனென்றால் கட்டண மென்பொருளில் வைரஸ் தாக்கும் அபாயம் இருக்காது மற்றும் நம்முடைய ஈமெயில் கொடுத்து டவுன்லோட் செய்தால் அந்த ஈமெயில்களை பல spam கம்பனிகளுக்கு விற்று விடுவதால் நமக்கு தேவையில்லாத ஈமெயில்கள் வந்து தொந்தரவு செய்யும் அபாயங்கள் இருப்பதோடு கட்டண மென்பொருளில் ஒரே மென்பொருளில் பல வேலைகள் செய்யும் வசதி இருக்கும் ஆனால் பெரும்பாலான இலவச மென்பொருட்களில் இருக்காது ஆகவே அனைவரும் கட்டண மென்பொருட்களை விரும்புகின்றனர்.



அதெல்லாம் சரிப்பா நாங்களே சும்மா பொழுது போக்குக்கு கணினிய உபயோகிக்கிறோம் அதுக்கு நாங்க மென்பொருளை காசு கொடுத்து ஏன் வாங்க வேண்டும் யாராவது அந்த மென்பொருட்களை சும்மா கொடுத்தா சொல்லுப்பா நாங்க டவுன்லோட் பண்ணிக்கிறோம் என நீங்கள் கூறினால் உங்களை போன்றவர்களுக்கு ஒரு உபயோகமான தளம் உள்ளது. இந்த தளம் மென்பொருட்களை உங்கள் மெயிலுக்கே அனுப்பி வைப்பார்கள். இது மிகவும் பிரபலமான தளம் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் தெரியாதவர்களுக்காக.

இந்த தளத்தில் தினமும் ஒரு கட்டண மென்பொருளை இலவசமாக அறிமுக படுத்துவார்கள்.



அந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 24 மணி நேரம் கால அவகாசம் கொடுப்பார்கள் அதற்குள் அந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.

24 மணி நேரம் கழித்து டவுன்லோட் செய்தால் அந்த மென்பொருளை இலவசமாக பெற முடியாது காசுகொடுத்து தான் வாங்க வேண்டும் ஆக முந்தி கொள்வதே நல்லது.

இந்த தளத்தில் நாம் உறுப்பினர் நம் ஈமெயிலை கொடுத்து பதிந்து விட்டால் அந்த நாளுக்கான இலவச மென்பொருளை பற்றி நமது ஈமெயிலுக்கே அனுப்பி விடுவார்கள் அந்த லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம்.



இன்றைய இலவச மென்பொருள்



டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ததும் கொடுக்கப்படும் ஆக்டிவேசன் கீயை மறக்காமல் காப்பி செய்து மென்பொருளை register செய்து கொண்டால் தான் காலம் முழுவதும் இலவசமாக மென்பொருளை உபயோகிக்க முடியும்.

ஆனால் இந்த முறையில் உள்ள ஒரு குறை நாம் மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் அந்த பதிப்பில் இருந்து புதிய பதிப்பை அப்டேட் செய்ய முடியாது. அப்டேட் செய்ய வேண்டுமென்றால் காசு கொடுத்து ஆகவேண்டும்.



இந்த தளத்தில் சைட்பாரில் உள்ள விட்ஜெட்டில் subscribe by Email என்பதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் ஈமெயிலை கொடுத்து பதிந்து கொண்டால் உங்கள் மெயிலுக்கே தினமும் ஒரு இலவச மென்பொருளை பற்றி செய்தி அனுப்புவார்கள்.



இந்த பயனுள்ள தளத்திற்குசெல்ல - www.giveawayoftheday.com



இதை பற்றி உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள் அவர்களும் பயனடையட்டும்

0 comments:

Post a Comment