Thursday 29 August 2013

குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை புதுமையாக கற்றுக்கொடுக்க உதவும் பயனுள்ள தளம்.

ஆங்கில மொழியை குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் சொல்லி கொடுக்க பலதரப்பட்ட இணையதளங்கள் இருந்தாலும் நாம் இன்று பார்க்க இருக்கும் தளம் குவிஸ் போட்டி மூலம் சற்றே வித்தியாசமாக குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை கற்றுக்கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


நம் குழந்தைகளும் ஆங்கிலத்தில் எழுத அல்லது பேச வேண்டும் என்று எண்ணும் பெற்றோர்களுக்கு உதவுவதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது எந்த விதமான ஆசிரியரும் தேவையில்லை ஆன்லைன் மூலம் எளிதாக குழந்தைகள் புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தை சொல்லி கொடுக்கின்றனர்.

இணையதள முகவரி : http://www.readingbear.org

போட்டி என்றாலே குழந்தைகள் மகிழ்ச்சியாகிவிடுகின்றனர் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளமும் ஒவ்வொரு பாடத்திற்கும் குவிஸ் போட்டி நடத்தி தன்னுடைய ஆங்கில அறிவில் நிலை என்ன என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்.இத்தளத்திற்கு Getting Started என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் எப்படி குழந்தைகள் எளிதாக ஆங்கிலம் கற்கலாம் என்ற வழிமுறையை தெரிவித்தும் இவர்கள் சொல்லி கொடுப்பதை எப்படி எளிதாக புரிந்து கொள்ளலாம் என்பதை பற்றியும் விவரிக்கின்றனர்.வலது பக்கத்தின் மேல் இருக்கும் Register என்ற பொத்தானை சொடுக்கி புதிய கணக்கு ஒன்று இலவசமாக உருவாக்கி கொள்ளலாம். 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் சொல்லி கொடுக்கின்றனர், ஒவ்வொரு பாடமும் நாம் கற்ற பின் உடனடியாக அதன் அருகில் இருக்கும் Take a Quiz என்ற பொத்தானை சொடுக்கி கற்று கொண்டதை சோதித்து கொள்ளலாம். குழந்தைகள் மட்டும் தான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை நாமும் ஒரு முறை இதைப்பார்த்தால் நம் ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொள்ளலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

0 comments:

Post a Comment