Thursday, 22 August 2013

நகைச்சுவை விருந்து! வாழ்விற்கு மருந்து!!!

"டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?"

"ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்."
-----------------------------------------------------------------------------------------------------------
"அந்த ஆள் எப்பவும் மத்தவங்க கையைத் தான் எதிர்பார்ப்பாரு..."
"ஏன்...?"
"அவருதான் கைரேகை ஜோசியம் பார்க்கறவராச்சே...!"
-----------------------------------------------------------------------------------------------------------
"மன்னர் புறமுதுகிட்டு ஓடிவரும்போது அவருக்குப் பின்னால் நிறைய பேர் ஓடி வருகிறார்களே... யார் அவர்கள்?"
"அது மன்னரின் புறமுதுகுக்குப் பாதுகாப்பு தரும், பிறர் முதுகிட்ட படையாம்!"
-----------------------------------------------------------------------------------------------------------
"எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?"
"அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்... எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!"
------------------------------------------------------------------------------------------------------------
"மாப்பிள்ளைப் பையனுக்கு மாத வருமானம் ஐயாயிரம். வீட்டை விட்டு எங்கேயும் போக வேண்டியதில்லை."
"என்ன வேலை?" "ரிட்டயர்டு ஆகிப் பென்சன் வாங்குறார்!"
------------------------------------------------------------------------------------------------------------
"எதுக்குய்யா ஒவ்வொரு ரீல்லயும் படத்தோட டைரக்டர் நடுவுல வந்து ஏதாவது ஒரு கேரக்டரை தொட்டுட்டுப் போறாரு?"
"அவரோட போன படத்துல, டைரக்டறோட "டச்"சே இல்லைன்னு விமர்சனம் எழுதிட்டாங்களாம்.... அதான்....!"
------------------------------------------------------------------------------------------------------------
"தலைவரால சட்டசபையே அதிர்ந்திடுச்சாம்..."
"அடேங்கப்பா ... அப்படி என்ன பேசினாரு?" "பேசலைய்யா... குறட்டை விட்டாரு!"
------------------------------------------------------------------------------------------------------------
"என்னய்யா இது... படத்தோட கதையை சிலேட்டுல எழுதிட்டு வந்திருக்கே..."
"அடுத்த படத்துக்காவது வித்தியாசமா கதை எழுதுன்னு நீங்கதானே சார் சொன்னீங்க!"
-------------------------------------------------------------------------------------------------------------
"பாட வந்தவங்க, எதுக்கு கையில கிளவுஸ் எடுத்து மாட்டிக்கறாங்க...?"
"குத்துப்பாட்டு பாடப் போறாங்களாம்!"
-------------------------------------------------------------------------------------------------------------
"தினமும் கீரையே வாங்கிட்டுப் போறீங்களே... உங்க வீட்டுக்காரர் ஒண்ணும் சொல்ல மாட்டாரா?"
"அவர் ஒரு வாயில்லாப் "பூச்சி"ங்க... அதான்!"
--------------------------------------------------------------------------------------------------------------
"டாக்டருக்கும், ஆக்டருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.... எப்படின்னு சொல்லு?"
"ரெண்டுபேருமே தியேட்டருக்கு வரவச்சுதான் கொல்லுவாங்க!"
------------------------------------------------------------------------------------------------------------
"போலீஸா இருந்த நான் சாமியாரா ஆகியிருக்கக் கூடாது!"
"ஏன் சாமி?"
"எல்லாரும் போலீஸாமியார்"னு சொல்றாங்களே!"
------------------------------------------------------------------------------------------------------------
"கோடை விடுமுறையைக் கொண்டாட கபாலிக்கிட்ட ஐடியா கேட்டது தப்பாப் போச்சா... ஏன்?"
"ஜெயிலை சுத்திப் பார்க்கலாம்... வாங்கன்னு கூப்பிடறான்!"
------------------------------------------------------------------------------------------------------------
"இவர் மெகா சீரியல் தயாரிப்பாளரான்னு சந்தேகமா இருக்கு..."
"ஏன் சார்..?"
"கதையை ரெண்டு வரியில சொல்லச் சொல்றாரே!"
------------------------------------------------------------------------------------------------------------
"இளவரசர் தோற்றத்தில் மன்னர் போலவே உள்ளார்..."
"தோற்றத்திலா... அல்லது தோற்றதிலா"
-------------------------------------------------------------------------------------------------------------
"அவர் சீலிங் ஃபேன் ரிப்பேர் பண்றவர்னு எப்படிச் சொல்றே..?"
"எப்போ கேட்டாலும், "தலைக்கு மேல வேலை இருக்கு"ன்னு சொல்றாரே!"

0 comments:

Post a Comment