உங்களிடம் உங்கள் அப்பா பயன்படுத்திய பழைய எக்ஸ்பி அல்லது விண்டோஸ் 98 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டராக இருந்தாலும், அல்லது புதிய கம்ப்யூட்டராக விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் இருந்தாலும், சில பிரச்னைகள் எல்லா வகை கம்ப்யூட்டர் செயல்பாட்டிலும் இருப்பதாக நாம் உணர்வோம். சில உண்மையிலேயே பிரச்னைகளாக இருக்கும். சில நாமாக எண்ணிக் கொள்பவையாக இருக்கும். இங்கு அத்தகைய பிரச்னைகள் குறித்தும், அவற்றிற்கான தீர்வுகள் சார்ந்தும் சில தகவல்களைப் பார்க்கலாம்.
1. முதலில் இதனை முயற்சிக்க:
1. முதலில் இதனை முயற்சிக்க:
எந்தக் கம்ப்யூட்டராக இருந்தாலும், சிக்கல் கொடுப்பது எந்த புரோகிராமாக இருந்தாலும், அவற்றை மூடி, மீண்டும் இயங்க வைத்தால், எந்தப் பிரச்னைக்கும் தீர்வாக அது அமையும். கம்ப்யூட்டர் சிஸ்டம் செயல்பாட்டில் பிரச்னை என்றால், கம்ப்யூட்டர் இயக்கத்தினை முழுமையாக நிறுத்தி, மீண்டும் இயங்க வைப்பது நல்லது. அதே போல, கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட துணை சாதனமாக இருந்தால், அதன் இயக்கத்தினையும் நிறுத்தி, கம்ப்யூட்டர் இணைப்பையும் எடுத்துவிட்டு, பின்னர் இணைத்துச் செயல்படுத்திப் பார்க்கவும்.
2. மிகவும் மெதுவாக செயல்படுகிறது:
2. மிகவும் மெதுவாக செயல்படுகிறது:
கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கிச் சில ஆண்டுகள் ஆன பின்னர், எல்லாரும் கூறும் குற்றச்சாட்டு இது. கம்ப்யூட்டர் இயக்கம் முன்பு போல் இல்லாமல், மெதுவாக இருப்பதாகக் கூறுவார்கள். இந்தப் பிரச்னை இருந்தால், முதலில் இதற்கு உங்கள் கம்ப்யூட்டர் தான் பிரச்னை தருகிறதா எனப் பார்க்கவும். தரவிறக்கம் செய்யப்படுவது வீடியோவாக இருந்தால், பழைய இணைய தளமாக இருந்தால், அவை மெதுவாகத்தான் உங்கள் கம்ப்யூட்டரை அடையும். எனவே, உங்கள் கம்ப்யூட்டரில் பிரச்னை இருக்க வாய்ப்பில்லை. எனவே, எதனால் பிரச்னை ஏற்படுகிறது என்பதனைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னையைக் கூறி தீர்வு கேட்ட பலர், பின்னர், இது இணைய இணைப்பின் வேகக் குறைவினால் வந்தது என்று ஒத்துக் கொண்டுள்ளனர். இணைய இணைப்பின் வேகத்தினை Speedtest.net என்னும் தளம் சென்று, பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
பிரச்னை உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் என்று உறுதியாகத் தெரிந்தால், கீழ்க்கண்டவற்றைச் சோதனை செய்திடவும்.
2.1 ஹார்ட் ட்ரைவில் தேவையான இடம் உள்ளதா? இல்லை எனில், பைல்களை நீக்கி இடம் அமைக்கவும்.
2.2 கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில், உங்களுக்குத் தேவைப்படாமலேயே, சில புரோகிராம்கள் இயக்கப்பட்டு ராம் நினைவகத்தில் தங்கிக் கொண்டு, கம்ப்யூட்டர் செயல்பாட்டினைத் தாமதப்படுத்தும். msconfig கட்டளை மூலம், சிஸ்டம் கான்பிகரேஷன் விண்டோ பெற்று, அதில் Startup என்ற டேப்பினைத் தட்டிப் பார்த்து, தேவையற்ற புரோகிராம்கள் தொடக்கத்தில் இயங்குவதனை நீக்கி அமைக்கலாம். இந்த செயல்பாட்டினை அவ்வப்போது மேற்கொள்வது நல்லது.
3. தரவிறக்கச் செயல்பாடு அதிக நேரம் எடுக்கிறது:
ஸ்பீட் டெஸ்ட் டாட் நெட் தளம் மூலம், இணைய இணைப்பின் வேகத்தினைப் பார்க்கவும். உங்களுக்கு இணைய இணைப்பினை வழங்கும் நிறுவனம், உறுதி செய்த வேகத்தில், குறைந்தது 60% ஆவது வேகம் இருக்க வேண்டும். வேகம் சரியாக இருந்தால், நீங்கள் தேவை இல்லாமல், பெரிய பைல்களைத் தரவிறக்கம் செய்வதனை நிறுத்தலாம். உங்களுடைய நெட்வொர்க் இணைப்பில் உள்ள சாதனங்களுக்குப் புதிய ட்ரைவர் புரோகிராம்கள், அவற்றின் இணைய தளங்களில் இருந்தால், அவற்றை அப்டேட் செய்திடவும்.
4. தானாக ரீஸ்டார்ட் செய்திடும் பிரச்னை:
4. தானாக ரீஸ்டார்ட் செய்திடும் பிரச்னை:
கம்ப்யூட்டர், செயல்பாட்டில் இருக்கும்போதே, தானாக ரீஸ்டார்ட் ஆகும் பிரச்னையைப் பலர் எதிர் கொண்டுள்ளனர். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள கிராபிக்ஸ் கார்ட், மதர்போர்ட், நெட்வொர்க் கார்ட் ஆகியவை, புதிய ட்ரைவர் புரோகிராம்களுடன் அப்டேட் செய்திருப்பதை உறுதி செய்திடவும். இவை சரியாக அப்டேட் செய்யப்பட்டிருந்தால், அடிக்கடி ரீஸ்டார்ட் செய்வதற்குக் காரணம், வைரஸ், மால்வேர், அட்வேர், மதர்போர்ட் சூடாவது ஆகியவை ஆக இருக்கலாம். மின் இணைப்பிலிருந்து கம்ப்யூட்டரை விடுவித்து, சிபியு டவரைக் கழற்றி, அதில் பொருத்தப்பட்டுள்ள சிறிய மின் விசிறிகளைச் சோதனை செய்திடவும். அதில் உள்ள அதிகமான தூசு அனைத்தையும் நீக்கவும். இப்போது வருகின்ற கம்ப்யூட்டர் சிஸ்டங்களில், சிஸ்டம் குறிப்பிட்ட அளவிற்கு மேலாக வெப்பச் சூழ்நிலையைச் சந்தித்தால், தானாக மூடப்படும் வசதியுடன் வருகின்றன.இவற்றால் கூட, கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் செய்யப்படலாம்.
5. டெஸ்க்டாப்பில் எதிர்பாராத நேரங்களில் பாப் அப் விளம்பரங்கள்:
5. டெஸ்க்டாப்பில் எதிர்பாராத நேரங்களில் பாப் அப் விளம்பரங்கள்:
உங்கள் பிரவுசர் இயக்கப்படாத நேரங்களில் கூட, பாப் அப்பாக்ஸ் எழுந்து வந்து, வர்த்தக ரீதியான விளம்பரங்களைக் காட்டுகின்றனவா? அப்படியானால், அட்வேர் எனப்படும் தேவையற்ற புரோகிராம் ஒன்று, உங்கள் கம்ப்யூட்டரில் வந்து அமர்ந்து கோண்டுள்ளது என்று பொருள். இத்தகைய விளம்பரங்கள்,நமக்கு எந்த விதத்திலும் பயன் இல்லாததாகவே இருக்கும். இதனை நீக்க, சிறப்பாகச் செயல்படும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு ஒன்றினை இயக்கி, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து பைல்களையும் ஸ்கேன் செய்திடலாம். சந்தேகப்பட்ட கோப்புகள் இருப்பின், அவற்றை நீக்கிவிடலாம்.
6. கூகுள் தவறும் வேளை:
6. கூகுள் தவறும் வேளை:
பிரவுசரை ஹைஜாக் செய்து தங்கள் கட்டுப்பாட்டில் சில ஹேக்கர்கள், உங்கள் கம்ப்யூட்டரைக் கொண்டு சென்றுவிடுவார்கள்.கூகுளில் நீங்கள் தேடும்போது, உங்களின் பெர்சனல் தகவல்களைத் தேடுவதற்காக, அவர்களாக வடிவமைத்த தளத்திற்கான லிங்க் தந்து, கிளிக் செய்திடச் சொல்வார்கள். உங்கள் பிரவுசர் ஹைஜாக் செய்யப்பட்டதனை உணர்ந்தால், அந்த பிரவுசரை அன் இன்ஸ்டால் செய்து, மீண்டும் பதிக்கவும். உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினையும் இயக்கி, மால்வேர் புரோகிராம்களை நீக்கவும்.
7. என் வை-பி இணைப்பு துண்டிக்கப்படுகிறது:
7. என் வை-பி இணைப்பு துண்டிக்கப்படுகிறது:
வை பி மூலம், இணைய இணைப்பு கொண்டிருந்தால், அதில் பிரச்னை ஏற்படுகையில், எந்த சாதனத்தில் பிரச்னை என்று அறிவது பெரிய சவாலாக இருக்கும். கம்ப்யூட்டரா? ரௌட்டரா, இணைய இணைப்பு வழங்கும் நிறுவனத்தின் சர்வரா? என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எதற்கும் உங்கள் இணைய இணைப்பு நிறுவனத்தை அழைத்து, பிரச்னையைக் கூறி, அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். ரௌட்டர், அவர்களின் சர்வர், இணைப்பின் நிலை ஆகியவற்றில் பிரச்னை இருந்தால், அவர்களால் துல்லியமாகக் கூற இயலும்.
அதே நேரத்தில், உங்கள் கம்ப்யூட்டர், வை பி இணைப்பின் எல்லைக்குள் இயக்கப்படுவதனையும் உறுதி செய்து கொள்ளுங்கள். சிக்னல்கள் மிகவும் குறைந்த சக்தியுடன் இருந்தால், இணைப்பு அடிக்கடி விட்டுப் போவது நடக்கும். இந்த பிரச்னையில் விண்டோஸ் சிஸ்டமும் கை கொடுக்கலாம். டாஸ்க் பாரில் உள்ள வை பி ஐகான் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். Troubleshoot problems என்பதனைத் தேர்ந்தெடுத்து இயக்கினால், இதன் மூலமும் பிரச்னை எங்குள்ளது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம்.
8. வெப்சைட் செக்யூரிட்டி சர்டிபிகேட்:
சில வேளைகளில், பெரிய பிரச்னைகளை, மிக எளிய முறையில் தீர்த்துவிடலாம். பல பிரச்னைகள், நம் சிஸ்டம் கிளாக் சரியான முறையில் இயங்காததனால் ஏற்படுகிறது என்று தொழில் நுட்ப வல்லுநர்கள் கூறுவார்கள். ஒரு இணைய தளத்தின் செக்யூரிட்டி சர்டிபிகேட் கம்ப்யூட்டரின் கடிகாரத்துடன் இணைந்தே செயல்படும். எனவே, சீமாஸ் பேட்டரி செயல் இழந்து, சிஸ்டம் கிளாக் செயல்பாட்டினை நிறுத்தி இருந்தால், இந்த பிரச்னை ஏற்படலாம். எனவே, சிஸ்டம் ட்ரேயில் உள்ள கடிகார ஐகானைக் கிளிக் செய்து, கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் தேதி மற்றும் நேரத்தினைச் சரியாக செட் செய்தால், இந்த வெப் செக்யூரிட்டி சர்டிபிகேட் பிரச்னையைத் தீர்த்துவிடலாம்.
9. பிரிண்டர் அச்சடிக்கவில்லை:
9. பிரிண்டர் அச்சடிக்கவில்லை:
உங்களுடைய பிரிண்டரின் ட்ரைவர் புரோகிராம் அப்டேட் செய்யப்பட்டு, உங்கள் பிரிண்டரில் தாள், டோனர் அல்லது இங்க் காட்ரிட்ஜ் எல்லாம் சரியாக இருப்பதாக வைத்துக் கொண்டால், உங்கள் பிரிண்டரை மின் இணைப்பிலிருந்தும், கம்ப்யூட்டரிலிருந்தும் கழட்டி, பின்னர் இணைக்கவும். இதனை அடுத்து, உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து நீங்கள் அச்சடிக்கக் கொடுத்த பைல்களின் நிலை அறிய, பிரிண்ட் வரிசை (print queue) பார்க்கவும். இதில் ஏதேனும் ஒரு பைலில் பிரச்னை இருந்தால், பிரிண்டர் உங்கள் கட்டளைக்குப் பின்னணியில் காத்துக் கொண்டு, அச்சடிக்காமல் இருக்கலாம். இங்கு கிடைக்கும் மெனுவில், 'Use Printer Offline’ என்ற ஆப்ஷனில் டிக் அடையாளம் இல்லாமல் இருப்பதனை உறுதி செய்திடவும். அச்சடிக்கையில், உங்கள் பிரிண்டர் ஆப் செய்யப்பட்டிருந்தால், ‘Use Printer Offline’ ஆப்ஷன் இயக்கப்படும் நிலை ஏற்படலாம். இதனால், அதன் பின்னர், அச்சிடக் கொடுக்கப்படும் பைல்கள் அச்சடிக்கப்படாமல் இருக்கும் சிக்கல் ஏற்படும்.
10. இமெயில் இணைப்புகளைத் திறக்க இயலவில்லை:
10. இமெயில் இணைப்புகளைத் திறக்க இயலவில்லை:
மின் அஞ்சல் செய்திகளுடன் இணைக்கப்பட்ட பைல்களைத் திறக்க இயலவில்லை எனில், அதனைத் திறப்பதற்கான புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் இல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. பொதுவாக பி.டி.எப். பைல்களில் இந்த பிரச்னை இருக்க வாய்ப்புண்டு. இதற்கான பி.டி.எப். ரீடர் புரோகிராமினை இலவசமாக இணையத்திலிருந்து டவுண்லோட் செய்து பதிந்து, பின்னர் திறக்கலாம். வேறு வகை பைல் எனில், பைலின் துணைப் பெயரினைக் கண்டறிந்து, அந்த வகை பைலைத் திறக்க என்ன புரோகிராம் வேண்டும் என்பதனைத் தேடி அறிந்து செயல்பட வேண்டும்.
11. புதிய கம்ப்யூட்டரில் என் பழைய ப்ரோக்ராம் செயல்படவில்லை:
11. புதிய கம்ப்யூட்டரில் என் பழைய ப்ரோக்ராம் செயல்படவில்லை:
இந்த பிரச்னை, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டருக்கு மாறுபவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக, விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலிருந்து, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறுபவர்கள், இது குறித்து கடிதங்கள் மற்றும் தொலைபேசி வழியாகவும் தெரிவித்துள்ளனர். இதற்குக் காரணம், நீங்கள் குறிப்பிடும் புரோகிராம், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்காது. மேலும், விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் புரோகிராம்கள், மேக் ஓ.எஸ். சிஸ்டத்தில் இயங்காது. மேலும், 32 பிட் சிஸ்டத்தில் இயங்கும் புரோகிராம்கள்,64 பிட் சிஸ்டத்தில் இயங்கும். ஆனால், மாறாக 64 பிட் சிஸ்டத்தில் இயங்கும் புரோகிராம்கள், 32 பிட் சிஸ்டத்தில் இயங்காது. ஆன்லைனில் இயங்கும் சில கேம்ஸ், புதிய கம்ப்யூட்டரில் இயங்காது. இதற்குச் சில ப்ளக் இன் புரோகிராம்கள் இல்லாததே காரணமாக இருக்கும். இதற்கு ஜாவா மற்றும் பிளாஷ் புரோகிராம்கள் காரணமாகவும் இருக்கலாம். பொதுவாக, பிரவுசர்கள், இவை தேவை எனில், உங்களுக்கு எச்சரிக்கை செய்திகளைக் கொடுத்து, இவற்றை இன்ஸ்டால் செய்திடச் சொல்லும்.
0 comments:
Post a Comment