கோண்ட்வானா என்பது இந்தியாவில் உள்ள ஒரு ஊரின் பெயர் (எந்த மாநிலம் என தெரியவில்லை தெரிந்தவர்கள் கமெண்ட் இல் சொல்லுங்கள்) உலகில் முதன் முதலில் அந்த ஊரில் தான் கோண்ட்வானா கண்டத்தின் படிமங்கள் கண்டறியப்பட்டன. எனவே அந்த ஊரின் பெயரையே கண்டதுக்கும் சூட்டிவிட்டனர். கோண்ட்வானா கண்டத்தில் அண்டார்டிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, ஆப்ரிக்கா, மடகஸ்கார், ஆஸ்திரேலியா இணைந்திருந்தன.
கோண்ட்வானா கண்டத்தில் இருந்து பிரிந்து வந்தது தான் நமது இந்தியா. ஆப்ரிக்காவிலிருந்து இந்தியா பிரியும் பொழுது கூடவே மடகஸ்கார் பிரிந்தது (இந்த நிகழ்வை சுட்டிக்காட்டும் அனிமேஷன் படத்தை மேலே காணலாம்).
TETHYS கடலில் இந்தியா வடக்கு நோக்கி நகர்ந்து ஆசியாவுடன் இணைந்தது. இந்த மோதலில் ஆசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இமயமலை கிளர்ந்து எழுந்தது. இன்று இமயமலை இருக்கும் இடத்தில அன்று இருந்தது TETHYS கடல் தான். இன்றும் இமயமலையில் கடல் வாழ் உயிரினங்களின் எச்சங்களை கண்டறிந்த வண்ணமே உள்ளனர். இந்தியா கோண்ட்வானாவில் பிரிந்து ஆசியாவுடன் இணைந்தது சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு.
ஆனால் விந்திய மலை தொடரும் தமிழக, கர்நாடக, ஆந்திர நிலப்பகுதிகள் 30 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளன. வடஇந்தியா மட்டுமே கோண்ட்வானாவில் இருந்து பிரிந்து வந்து தென்இந்தியாவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் இணைந்தது என்று கூறும் வரலாற்று ஆசிரியர்களும் உண்டு.
MESOSAURUS
LYSTROSAURUS
CYNOGNATHUS
கோண்ட்வான கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் உயிரினங்கள்
60,00 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவை அடைந்த மனிதர்களில் ஒரு பிரிவினர் சீனாவை நோக்கி சென்றனர் இன்னோர் பிரிவினர் இந்தியாவுக்குள் வந்தனர்.
நியாண்டர்தால் இன மக்களும் அதற்கு முந்தய இனமான homoerectus என்ற இனமும் இந்தியாவில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. நியாண்டர்தால் இனமக்களும் வேறு சில இன மக்களும் பயன்படுத்திய ஆயுதங்கள் சென்னைக்கு அருகில் அந்தரம்பாக்கம், கர்நாடகத்தின் சில பகுதிகளில் கிடைத்துள்ளன. நவீன இன மக்களின் வருகைக்கு பின்பு அந்த இனங்கள் அழிந்திருக்கலாம் அல்லது நாமே அளித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
மனிதன் இந்தியாவிற்கு வருவதற்கு 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலும் டைனோசர் நடமாடியிருக்கின்றன . டைனோசர் இருந்த பொழுதே ராட்சச பறவை இனங்களும் இந்தியாவில் இருந்துள்ளன ஒரு விமானம் அளவுக்கு உருவம் உள்ள பறவை இனங்கள் கூட இருந்துள்ளன. மேலும் 17 வகையான யானை வகைகள் இருந்திருக்கின்றன. ஆனால் அதில் இபொழுது இருப்பது வெறும் 2 வகையே ஒன்று இந்திய யானை மற்றொன்று ஆப்ரிக்கா யானை.
நெடிய பயணத்தை முடித்த மனிதர்கள் ஒரு இடத்தில் நிலையாக வசிக்க ஆரம்பித்தனர். உடன் நாகரிகம் தோன்ற ஆரம்பித்தன.
மனித நாகரிகம் முதலில் எங்கு தோன்ற ஆரம்பித்தது அடுத்த பதிவில் பார்ப்போம்.
0 comments:
Post a Comment