Saturday 5 October 2013

நடிகர் திலகத்தை உதாசீனபடுத்துவதா? சிவாஜி பேரவை ஆவேசம்!


“நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற கலைப் பொக்கிஷங்கள் காலத்தால் அழிக்க முடியாதவை, இன்னும் பல நூற்றாண்டு காலம் ஆனாலும் நடிக்க வரும் புதியவர்களுக்கு பாடங்களாக விளங்கிக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அப்படிப்பட்ட மகா கலைஞனாக வாழ்ந்து மறைந்த நடிகர் திலகத்தின் 86வது பிறந்த நாளில் (01.10.13) தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் எளிய அளவிலான நிகழ்ச்சிகூட ஏற்பாடு செய்யப்படவில்லை என்பது வருத்தத்தக்க விஷயமாகும்.” என்று நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை வேதனையுடன் குறிப்பிட்டுள்ளது.




5 - sivaji ganesh


நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்த நாள் விழா கடந்த 1 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. ஆனால் சிவாஜியின் பிறந்த நாள் விழாவை நடிகர் சங்கம் கொண்டாடவில்லை. இதற்கு பலதரப்பில் இருந்தும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள ஒரு கண்டன அறிக்கையில், ‘‘நடிப்புலகின் குருவாக, தந்தையாக, நடிகர்களுக்கெல்லாம் தலைமகனாக விளங்கி மறைந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.


அவர் மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற கலைப் பொக்கிஷங்கள் காலத்தால் அழிக்க முடியாதவை, இன்னும் பல நூற்றாண்டு காலம் ஆனாலும் நடிக்க வரும் புதியவர்களுக்கு பாடங்களாக விளங்கிக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.


அப்படிப்பட்ட மகா கலைஞனாக வாழ்ந்து மறைந்த நடிகர் திலகத்தின் 86வது பிறந்த நாளில் (01.10.13) தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் எளிய அளவிலான நிகழ்ச்சிகூட ஏற்பாடு செய்யப்படவில்லை என்பது வருத்தத்தக்க விஷயமாகும்.


ராதாரவி தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, நடிகர் திலகத்தின் பிறந்த நாள் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ‘‘நடிகர் தினம்’’ ஆக கொண்டாடப்படும் என்று அறிவித்து நடத்தினார். அதன்பிறகு, அந்த நடைமுறை நின்று போனது ஏன் என்று தெரியவில்லை.
நடிகர் சங்க பொறுப்பிலிருப்பவர்கள், படப்பிடிப்புகளில், வெளியூர்களில் இருந்திருந்தாலும்கூட, வேறு யாராவது சென்னையிலிருந்து நடிகர், நடிகைகளாவது சென்னையிலிருக்கும் நடிகர் திலகத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திருக்கலாம்.


தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்து, கட்டிக் காத்து வளர்த்த நடிகர் திலகத்திற்கு மரியாதை செய்யாத தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவையின் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.


நடிகர் திலகம் சிவாஜிக்கு உரிய மரியாதையை அளிக்காமல், தொடர்ந்து உதாசீனப்படுத்தினால், தென்னிந்திய நடிகர் சங்கத்தைக் கண்டித்து நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை போராட்டம் நடத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment