Friday 11 October 2013

தாஜ்மஹாலில் செருப்பு விளம்பரம:உலக அழகி மீது வழக்கு!


தாஜ்மகாலை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகள் புல்வெளி மற்றும் தோட்டப்பகுதி வரை மட்டும் செருப்பு அணிந்து செல்லலாம். இந்நிலையில் உலக அழகி ஒலிவியா செருப்பு மற்றும் சந்தன பை ஒன்றை அனுமதியின்றி தடை செய்யப்பட்ட பகுதிக்கு எடுத்துச் சென்றதாகவும் அங்கிருந்த நினைவுச் சின்னத்தின் மீது அமர்ந்ததாகவும் உலக அழகி மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று ஆக்ரா தொல்பொருள் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.


11 - tajmahal -miss-universe.j


உலக அழகி ஒலிவியா கல்போ. 10 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை வைத்து பிரபல செருப்பு தயாரிப்பு நிறுவனம் தனது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.
நேற்று உலக அழகி ஒலிவியாவை வைத்து தாஜ்மகாலில் படப்பிடிப்பு நடத்தியது. ஒலிவியா விதவிதமான மாடல்களில் செருப்புகளை அணிந்து இருந்தார்.



மேலும் தாஜ்மகாலில் உள்ள ‘டயானசீட்’ என்ற இடத்தில் அமர்ந்து போஸ் கொடுத்தார். இது மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா நினைவாக சலவைக்கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது.1992–ல் டயானா ஆக்ரா வந்து தாஜ்மகாலை பார்வையிட்டதன் நினைவாக ‘டயானா சீட்’ உருவாக்கப்பட்டது. இங்குதான் டயானா அமர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்.
இதற்கிடையில் தாஜ்மகாலின் உள்ளே எந்த படப்பிடிப்பும் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் தடையை மீறி உலக அழகியை வைத்து படப்பிடிப்பு நடத்தியது பற்றி தாஜ்மகால் நினைவுச்சின்ன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து உலக அழகி ஒலிவியா கல்போ மீது ஆக்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஆக்ரா தொல்பொருள் ஆய்வாளர் என்.கே.பதக் தெரிவித்தார்.


Miss Universe in police case over Taj Mahal photos

Indian police said Thursday they had filed a case against Miss Universe for conducting an unauthorised footwear fashion shoot at the Taj Mahal which was slammed as an “insult” by the monument’s caretaker.


0 comments:

Post a Comment