Saturday 2 November 2013

நள்ளிரவில் சுதந்திரம் ஏன்? பற்றிய தகவல்!


மவுண்ட்பேட்டன் இந்தியாவிற்க்கு சுதந்திரம் வழங்க முடிவு செய்துவிட்டு இங்கிலாந்து பாராளமன்ற அனுமதியும் பெற்றுவிட்டார், இதனை பத்திரிகையாளர் மத்தியில் அறிவிக்கும் போது ஒரு நிருபர் என்ன தேதி (தினத்தில்)... சுதந்திரம் கொடுக்க நினைத்துள்ளீர்கள் என்று கேட்டார். அதுவரை அது பற்றி யோசித்திராத மவுண்ட்பேட்டனின் மனதில் உடனடியாக வந்த தேதி ஆகஸ்ட் 15.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை சேர்ந்த 1,50,000 வீரர்கள் கிழ்க்கு ஆசியா கடற்படை கமாண்டராக இருந்த மவுண்ட்பேட்டனிடம் 1945 ஆகஸ்ட் 15இல் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்) சரண்டைந்தனர். எனவே ஆகஸ்ட் 15 அவர் வாழ்நாளில் மறக்க முடியாது தேதி, அதனால் ஆகஸ்ட் 15 இல் இந்தியாவிற்க்கும் சுதந்திரம் கொடுக்க முடிவு செய்தார்.

இவர் இதனை அறிவித்தவுடன் இந்தியாவிலுள்ள நம்மவர்கள் அந்த ஆகஸ்டு 15-ம் நாள் அஷ்டமி தினம் என்றும், அன்று நாடு சுதந்திரம் பெற்றால் நாடு நலம் பெறுமா எனவும் ஐயப்பாடு கொண்டனர். 17-ம் தேதி வேண்டுமானால் சுதந்திரம் பெறுவோம்; இவ்வளவு நாள்கள் பொறுத்தோம் இன்னும் இரண்டு நாள்கள் பொறுக்க முடியாதா என அங்கலாய்த்தனர்.

ஐவஹர்லால் நேருவிடம் இதுபற்றி முறையிட்டனர். அவருக்கு அஷ்டமி-நவமி இவற்றில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் மற்றவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆங்கில அரசை அணுகினார். சட்டம் இயற்றியாகிவிட்டது. இனிமாற்ற முடியாது என்று ஆங்கில அரசு மறுத்துவிட்டது. நம்மவர்கள் தீவிரமாக யோசித்தனர்.

ஆங்கிலேயர்களுக்கு புதியநாள் அதாவது மறுநாள் என்பது நள்ளிரவு 12 மணிக்கே தொடங்கிவிடுகிறது. ஆனால் நமக்கோ விடியற்காலை ஐந்து மணிக்குத்தான் தொடங்குகிறது. எனவே நள்ளிரவில் சுதந்திரம் வாங்கினால் ஆங்கில அரசுக்கு அது 15-ம் தேதியாகவும் நம்மவர்களுக்கு முக்கிய நாளாகவும் இருப்பதால் அஷ்டமி-நவமி பிரச்னை இல்லாது போகும் என்று நினைத்தனர். இதனால் தான் சுதந்திரத்தை பகலில் பெறாமல் நள்ளிரவில் பெற்றோம்.

0 comments:

Post a Comment