விஜய்யின் அடுத்த மெகா படமான ஜில்லாவின் முதல் தோற்றம் இன்று வெளியானது. | |||
தலைவா பட தலைவலியிலிருந்து வெளிவந்துள்ள விஜய், ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாய சூழலில் நடித்து வரும் படம் ஜில்லா. இந்தப் படத்தில் விஜய்யுடன் மோகன் லால் நடித்துள்ளார். குடும்பப் பாங்கான அதேநேரம் ஆக்ஷன்- நகைச்சுவை கலந்த படமாக ஜில்லா உருவாகியுள்ளது. ஆர்.டி.நேசன் இயக்கத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. டி இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசையை டிசம்பரில் ஸ்டார் மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது. பொங்கல் ஸ்பெஷலாக வரும் ஜில்லாவின் முதல் தோற்ற வடிவமைப்பு இன்று வெளியாகியுள்ளது. இதில் கழுத்து நிறைய மலர் மாலைகளுடன், கூடவே ரூபாய் நோட்டுகளையும் அணிந்து அட்டகாச சிரிப்புடன் போஸ் தருகிறார் விஜய். |
Friday, 1 November 2013
Home »
சினிமா விமர்சனம்..!
» ஜில்லாவின் முதல் தோற்றம் வெளியானது!
0 comments:
Post a Comment