Saturday 30 November 2013

அரசு மருத்துவமனைகளில் இயற்கை வழி சிகிச்சை மையம்!

 


தற்போதைய அவசர உலகில் மன அழுத்தத்தின் காரணமாகவே பல்வேறு விதமான நோய்கள் வருகின்றன. இந்த மன அழுத்தத்தை போக்கவும், மன அழுத்தம் வராமல் தடுக்கவும் யோகா கலை உள்ளிட்ட இயற்கை சார்ந்த வாழ்க்கைத் தர சிகிச்சை மையம் தேவைப்படுகிறது.இதை உணர்ந்த முதல்வர் ஜெயலலிதா அண்மையில் தமிழ்நாடு சட்டசபை விதி 110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் ரூ.9 கோடியே 60 லட்சம் செலவில் அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் யோகா மற்றும் இயற்கை சார்ந்த வாழ்க்கைத்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி 18 மருத்துவ கல்லூரிகளிலும் ஒரு உதவி மருத்துவர் உள்ளிட்ட 4 பதவிகள் உருவாக்கப்பட்டு்ள்ளன. இந்த மையத்தில் நோயாளிகள் அறை, யோகா அறை அமைக்கப்படும். இங்கு நீர்வழிசிகிச்சை, மண் வழிசிகிச்சை, காந்த சிகிச்சை, கலர் சிகிச்சை அக்குபஞ்சர் உள்ளிட்ட பல சிகிச்சைகள் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு அதிகாரி ஒருவர்,”’’காந்தியடிகள் ஆங்கில மருத்துவத்தைவிட இயற்கையின் அடிப்படையிலே நமக்கு நாமே வைத்தியராக நம்முடைய நோய்களை குணமாக்க முடியும் என்பதைக் கடைப்பிடித்தார்.அந்த அடிப்படையில் தமிழகத்தில் அமைக்கபட்ம் இந்த மையங்களில் ஒவ்வொரு நோய்களுக்கும் பலவீனத்திற்கும் ஏற்ப உணவுமுறை ஆலோசனை,நீராவி குளியல்,முதுகு தண்டுவட குளியல்,மூலிகை மண்சிகிச்சை, எண்ணெய் மசாஜ், யோகா, அக்குபிரஷர் போன்ற சிகிச்சைகள் அளிக்கபடும்.

அத்துடன் உடல் பருமன், மூட்டுவலி, முதுகுவலி நீரழிவு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஆஸ்துமா, ரத்தக்கொதிப்பு, மற்றும் மாதவிடாய் கோளாறுகள் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் மன அழுத்தம், தூக்கமின்மை, மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படுவோருக்கு தேவையான மசாஜ், நீராவி குளியல், முதுகு தண்டுவடக்குளியல், மற்றும் தோல் ஆரோக்கியமாக – பளபளப்பாக இருக்க நீராவி குளியல், முகத்தில் மசாஜ் மற்றும் மண்சி கிச்சை அளிக்கப்படுகிறது. பாதங்களுக்கும் பாதுகாப்பான சிகிச்சை முறைப்படி அளிக்கப்படுகிறது.” என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment