Sunday, 17 November 2013

திருமணங்களை நடத்தி வைக்கும் “ரோபோ’க்களை அடுத்து மாடு மேய்க்கும் ரோபோ ரெடி!




 சமீப காலமாக் ஜப்பானியர்கள் ரோபோக்களை வடிவமைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சிறிய ரக கார்களை ஓட்டும் மினி ரோபோக்கள், மனிதனின் கட்டளைகளுக்கு ஏற்ப சிறு சிறு பணிகளை செய்து முடிக்கும் வகையிலான ரோபோக்கள் போன்றவற்றை வடிவமைத்து ஜப்பானியர்கள் உலகின் பார்வையை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளனர்.

அத்துடன் திருமணங்களில் மணமக்களின் நண்பனாகவும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணியாளராகவும் செயல்படும் அதிநவீன ரோபோக்களையும் ஜப்பானிய நிபுணர் வடிவமைத்ததையடுத்து ஜப்பானை சேர்ந்த இளம் ஜோடிகள் பலரும் தங்கள் திருமணத்தில் இந்த அதி நவீன ரோபோக்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.இந்த வகையில், மாடு மேய்க்கவும் ரோபோக்களை ஆஸ்திரேலியாவில் உள்ள சில விஞ்ஞானிகள் வடிவமைத்து அசத்தி இருக்கிறார்கள்,

இதற்காக இந்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நான்கு சக்கரங்கள் கொண்ட ஒரு ரோபோவை தயாரித்துள்ளனர். இந்த ரோபோ மேய்ச்சலுக்கு மாடுகளை கொண்டு செல்லும். அது மட்டுமின்றி இரவில் மாடுகளை கண்காணிக்கும். விவசாயிகளுக்கு பெரும் பயன் அளிக்கும் இந்த ரோபோவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ரோபோ முற்றிலும் தானியங்கி முறையில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 nov 17 - tec robot-roundup.

0 comments:

Post a Comment