Monday 2 December 2013

கையால் மலம் அள்ளுவது சரியா..?


இது ஒரு "மனிதத் தன்மையற்ற செயல்" என்று ஐ.நா. சபை கூட அறிவித்துள்ளது. இந்திய அரசாலும் இப்படிப்பட்ட உலர் கழிவறைகளை (கையால் மலம் அல்லும் கழிவறை) 1993ல் தடை செய்யப்பட்டது. ஆனால் நடந்தது என்ன..?

இந்தியாவில் இன்னமும் 7 லட்சம் உலர் கழிவறைகள் இருக்கிறது. ஏன் தமிழ்நாட்டில் மட்டும் 53,000 கழிவறைகள் இருக்கிறது.

இதில் இன்னொரு கவலைப்பட வேண்டிய விஷயம் என்றால், இதை வைத்தே நம் நாட்டில் இந்த சாதியைச் சேர்ந்தவன் இந்த தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்ற கொடுமை, இன்றைய தினங்களில் கூட எந்த அளவிற்கு ஊடுருவி இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்.

என்னவென்றால், ஐ.எல்.ஓ அமைப்பின் ஆய்வு ஒன்று கூறுகிறது : கையால் மலம் அள்ளும் பெண் தொழிலாளிகளில் 96 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள்.

இப்படிப்பட்ட 7 லட்சம் உலர் கழிவறைகளில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் தெரியுமா..? இப்படிப்பட்ட மனித தன்மையற்ற தொழிலில் யார் வேலை செய்வார்.? என்று எண்ணிவிட வேண்டாம்.

இந்திய அளவில் 1,18,474 பேர் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 11,896 பேர்.

கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், 7 லட்சம் கழிவறைகளில் 1.18 லட்சம் வேலை செய்கிறார்கள் என்றால், ஒவ்வொரு தொழிலாளியும் தலா 5 முதல் 8 கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பது தானே உண்மை.

இப்படிப்பட்ட தொழிலார்களுள் பலர் நோய் தாக்கியோ அல்லது நச்சு வாயு தாக்கும் விபத்திலோ இறந்து விடுகிறார்கள்.

அப்படி மலம் அள்ளி வேலை செய்துதான் பிழைக்க வேண்டுமா.? என்று அவர்கள் இருந்துவிட முடியாது.

ஏனென்றால் அவர்களைப், பற்றி இருப்பது வறுமை என்னும் கொடிய நோய். நம் நாட்டை முதலாளி வர்க்கத்திற்கு தாரை வார்த்ததின் விளைவு, வறுமை அவர்களை துடிக்க துடிக்க கொன்றுவிடுகிறது.

இதைப் பற்றி எந்த ஊடகங்களோ பெரிதாக இவர்கள் படும் கஷ்டங்களை வெளியிடவில்லை என்பது வருத்தமாக உள்ளது.

0 comments:

Post a Comment