Sunday 22 December 2013

அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்!



நமது சமையலில் முக்கிய இடம்பெறும் தேங்காய், நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தலை முதல் பாதம் வரை மென்மை, பளபளப்பை தாராளமாய் அள்ளித்தரும் தேங்காய், நம்மை தன்னம்பிக்கையுடன் நடைபோட வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

* வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல் போய்விடும்.

* வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். முகம் கருப்பாவதை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்­ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.

- கேரள பெண்கள் ஏன் கொள்ளை அழகுடன் ஜொலிக்கிறார்கள் என்பதற்கான காரணம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே...!

0 comments:

Post a Comment