Tuesday 17 December 2013

அவசியம் தேவை ஐந்து ஊட்டச்சத்துக்கள்...?



 குடும்ப நலனில் அதிக கவனம் உள்ள பெண்கள் கூட இந்த முக்கிய ஐந்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உணவில் சேர்த்துக்கொள்ள தவறிவிடுகின்றனர். உணவு தயாரிக்கும்போது இல்லத்தரசிகள் இதை கவனத்தில் கொண்டு உணவு தயாரித்தால் நம் குடும்பத்திற்கும், நம் உடலுக்கும் அத்தியாவசிய நன்மைகளை எளிதில் பெற்றுவிடலாம்.

1. வைட்டமின் ஈ

 வைட்டமின் ஈ சக்திவாய்ந்த ஆக்சிஜெனேற்றத் தடுப்பான் (antioxidant) இது உயிரணுக்களை (cells) பாதுகாக்கிறது, மேலும் உயிரணுக்களை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ள செய்து தோலில் ஏற்படும் புற ஊதா(UV) சேதத்திற்கு எதிராக செயல்படுகிறது. போதுமான அளவு வைட்டமின் ஈ கிடைக்கவில்லை என்றால் மற்ற சத்துக்களை உடலுக்கு உறுஞ்சுவதில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. ஒரு நாளைய தேவை 15 மிகி , ஆனால் நாம் பெறும் அளவு 6.4 மிகி, எனவே பற்றாக்குறை 57% என ஆய்வுகள் கண்டறிந்துள்ளது.

உணவில் தினமும் எந்தெந்த வகைகளில் வைட்டமின் ஈ சேர்த்துக்கொள்ளலாம்:

1 / 4 கப் முளைக்கட்டிய கோதுமையை ஊறவைத்து அரைத்து தோசையாக வார்த்து சாப்பிடலாம்
 ஒரு கைப்பிடியளவு ஏழு (அ) எட்டு பாதாம் பருப்பு.
ஒரு தேக்கரண்டி தாவர எண்ணெய் காய்கறி கலவைகளில் ஊற்றி கலந்து உண்ணலாம். பொதுவாக சமையலுக்கு உபயோகப் படுத்தும் சூரிய காந்தி எண்ணெய். (சண்ட்ராப்,சப்போலா, சநோலா போன்ற எண்ணெய்கள் )
1 நடுத்தர பப்பாளி .
1 கப் அறிந்த சிகப்பு குடைமிளகாயை கூட்டு (அ) பொரியல் செய்து உண்ணலாம் .
1 கப் வேகவைத்த வெள்ளை பீன்ஸ் கூட்டு (அ) பொரியல்.
மேலும் மீன்களில், கேரட், ப்ரோக்கோலியில் வைட்டமின் ஈ நிறைய உள்ளது.



2. பொட்டாசியம்

 பொட்டாசியம் ஒரு மின்பகுபொருள் (எலக்ட்ரோலைட் – electrolyte ). இது நமது நரம்பு மண்டலம் முனைப்பாக செயல்படவும், தசைககளை நயமாக(muscles tone) வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தை இயல்பான அளவில் வைத்திருக்க உதவுகிறது. போதுமான பொட்டாசியம் கிடைக்கவில்லை என்றால், விரைவில் எரிச்சல் அடைவோம் , பலவீனமாக உணர்வோம் எளிதில் களைப்படைவதாக உணர்வோம். இதை தவிர்க்க, நாம் போதுமான அளவு பொட்டாசியம் நிறைந்த உணவுகள் மற்றும் அளவான சோடியம் உண்ண வேண்டும். இந்த இரண்டு கனிமங்கள் (சோடியம் மற்றும் பொட்டாசியம்) நமது உடலில் சமநிலையில் இருக்க வேண்டும், ஏனெனில் உணவில் அதிக சோடியம் சேர்ப்பதாலும் பிரச்சினைகள் உண்டாகும்.

ஒரு நாளைய தேவை 4.700 மில்லி கிராம் , ஆனால் நாம் பெறும் அளவு 2.458 மில்லி கிராம். எனவே பற்றாக்குறை 48% என ஆய்வுகள் கண்டறிந்துள்ளது.

தினமும் எந்தெந்த வகைகளில் பொட்டாசியத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்:
1 நடுத்தர வேகவைத்த தோல் நீக்காத உருளைக்கிழங்கு பொரியல் செய்து சாப்பிடலாம்.
1 கப் சமைத்த பயறு, பருப்பு சூப் (அ)கூட்டு செய்து சாப்பிடலாம்.
1 கப் நறுக்கிய வாழைப்பழம்.



3. கால்சியம்

 கால்சியம் என்கின்ற கனிமம் வலிமை மிக்க வலுவான எலும்புகள் உருவாக உதவுகிறது, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரை நோய் வரும் ஆபத்தைக் குறைக்கிறது. கால்சியம் மற்றும் சில முக்கிய நோய்களை தடுக்க உதவிசெய்கிறது. டஃப்ட்ஸ்-புதிய இங்கிலாந்து மருத்துவ மையம் கிட்டத்தட்ட 84.000 பெண்களை வைத்து நடத்திய ஒரு ஆய்வில், விஞ்ஞானிகள் தினசரி 1,200 மிகி கால்சியம் உட்கொண்ட பெண்களுக்கு 33% நீரிழிவு நோய் தாக்குதல் குறைந்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர். ஒரு நாளைய கால்சியம் தேவை 1,000-1,200 மில்லி கிராம் , ஆனால் நாம் பெறும் அளவு 800 மில்லி கிராம். எனவே பற்றாக்குறை 20-33% என ஆய்வுகள் கண்டறிந்துள்ளது. மேலும் கால்சியம் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது என பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உடல் எடையும் குறைக்கக் கூடிய தன்மையும் கொண்டது.

தினமும் எந்தெந்த வகைகளில் கால்சியத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்:

250 மில்லி கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் (அ) மோர்.
3 அவுன்ஸ் எலும்புடன் உண்ணக்கூடிய சூடை மீன், அயிரை, நெத்திலி போன்றவற்றை வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து தொக்கு (அ) குழம்பு செய்து சாப்பிடலாம்.
1/2 கப் டோபு என்றழைக்கப்படும் சோயாக்கட்டியை காய்கறிகளுடன் பொரியல் செய்து சாப்பிடலாம். கேழ்வரகு உணவிலும் அதிக அளவில் கால்சியம் சத்து அடங்கியுள்ளது. இதை நம் ஊர் கிராமப்புறங்களில் அதிகம் புட்டு, களி, ரொட்டி என செய்து சாப்பிடுவார்கள். எனவேதான் உடல் வலிமை கூடி , இறுக்கமாகி (muscle toning)உறுதியும் பெற்று காணப்படுவர்.

4. வைட்டமின் எ


 இந்த ஊட்டச்சத்து கண்பார்வை, குறிப்பாக இரவு நேர பார்வை, தோல், ஈறு மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு ஊக்கியாகவும் மற்றும் வைரஸ்களுக்கு எதிராக போராடவும் உதவுகிறது. வயது ஏற ஏற புலனுணர்வு செயல்பாட்டை பாதுகாக்க அதிக வைட்டமின் ஏ தேவைப்படுகிறது, யூட்டா மாநில பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு அதிக அளவில் கரோட்டின் (உடலினுள் இதிலிருந்து வைட்டமின் எ தயாரிக்கப்படுகிறது ) ஆண்டியாக்ஸிடண்ட்கள் உட்கொண்ட முதியவர்களின் மன வீழ்ச்சி வேக விகிதம் குறையத் தொடங்கியது கண்டறியப்பட்டது. ஒரு நாளைய தேவை 700 மைக்ரோ கிராம் , ஆனால் நாம் பெறும் அளவு 558 மைக்ரோ கிராம். எனவே பற்றாக்குறை 20-33% என ஆய்வுகள் கண்டறிந்துள்ளது.

உணவில் வைட்டமின் எ எப்படி சேர்த்துக்கொள்ளலாம் :

1 சிறிய சர்க்கரை வள்ளிக் கிழங்கை வேகவைத்து உண்ணலாம்.
1 / 4 கப் பூசணி கூட்டாக (அ) அவியல் செய்து சாப்பிடலாம்.
1 நடுத்தர கேரட் பொரியல், கூட்டு (அ) பச்சையாக சிறு துண்டுகளாக்கி சாப்பிடலாம்.
1 கப் பரங்கிக்காய் பொரியல், கூட்டு.
1 / 4 கப் சர்க்கரை பாதாமி/apricot .
 1 நடுத்தர பப்பாளி.



5. மக்னீஷியம்

 ஒரு நாளைய தேவை 320 மில்லி கிராம் , ஆனால் நாம் பெறும் அளவு 267 மில்லி கிராம். எனவே பற்றாக்குறை 17% என ஆய்வுகள் கண்டறிந்துள்ளது.

மெக்னீசியம் உடலில் நடக்கும் நூற்றுக்கணக்கான இரசாயன மாற்றங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. மரபணுக்கள் சரியாக (helping your genes function properly) வேலை செய்ய ஆற்றலை சேமித்து (storing energy) கொடுத்து உதவுகிறது, இது எலும்புகள் வலிமையுடன் இருக்க , நரம்புகள் மற்றும் தசைகள் தொய்வில்லாமல் நயத்துடன் பராமரிக்க மற்றும் ரத்தம் தடையில்லாமல் சீராக உடல் முழுவதும் பாய உதவுகிறது.

இந்த தாது, பரிந்துரைக்கப்பட்ட 38% கிடைக்கப்பெற்றால் வளர் சிதை மாற்ற நோய் அறிகுறி (metabolic syndrome) தவிர்க்கப்படுவதை சிடிசி ஆய்வு அறிக்கை கண்டுபிடித்துள்ளது. மேலும் அதிக வயிற்றுக் கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் ஆபத்துகள் கட்டுக்குள் உள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

உணவில் மெக்னீசியம் எப்படி சேர்த்துக்கொள்ளலாம் :

1 கப் சமைத்த கருப்பு மொச்சை கூட்டு, பொரியல் (அ) குழம்பு.
1 அவுன்ஸ் (6 முதல் 8 முழு) முந்திரி, பாதாம் பருப்பு.
1 கப் வெண்டைக்காய் பொரியல் (அ) கூட்டு.
1 கப் சமைத்த பழுப்பு மட்டை அரிசி, ஓட்ஸ், பார்லி,கோதுமை குருணை ரவை.
1 கப் சமைத்த பசலிகீரை.

0 comments:

Post a Comment