Friday, 20 December 2013

குடலில் புண் - அறிகுறிகள் என்ன?



பொதுவாக முன் குடலில் ஏற்படும் புண் (Duodenal Ulcer) காரணமாக பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர்.

வெறும் வயிற்றில் எரிச்சல், அதிக பசி, சாப்பிட்டவுடன் வலி நின்று விடுதல், மசாலா - காரம் அதிக உள்ள உணவுகளைச் சாப்பிட்டவுடன் எரிச்சல் ஆகியவை முன் குடல் புண்ணின் முக்கிய அறிகுறிகளாகும்.

காற்றுடன் புட்டிகளில் அடைக்கப்பட்ட பானங்களை (Aerated Drinks) தொடர்ந்து சாப்பிடும் நிலையில் எரிச்சல் அதிகக்கும். பழச் சாறுகள் சாப்பிடலாம்.

இரைப்பையில் புண் - அறிகுறிகள் என்ன?


இரைப்பையில் புண் (Gastric Ulcer) இருந்தால் பசி குறைவாக இருக்கும். அதாவது இரண்டு இட்லி சாப்பிட்ட உடனேயே பசி அடங்கி விடும். சாப்பிடுவதற்கு முன்போ அல்லது சாப்பிட்ட பிறகோ இரைப்பை புண் காரணமாக வலி ஏற்படலாம்.

கண்டுபிடிப்பது எப்படி?

வயிற்றில் வலி ஏற்பட்ட உடனேயே சுயமாக "அல்சர்' என அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. ஏனெனில் மேலே சொன்ன வயிற்றுப் புண் பிரச்னைகளில், இரைப்பையில் புண் ஏற்பட்டிருந்தால், ஆபத்தாக முடிய வாய்ப்பு உண்டு.

ஏனெனில் இரைப்பையில் ஏற்பட்டுள்ள ஆரம்ப நிலைப் புற்று நோய் காரணமாகக் கூட வலி ஏற்படலாம். எனவே எண்டாஸ்கோப்பி பசோதனை மூலம் உணவுக் குழாய் முதல் சிறு குடல் வரை எந்த இடத்தில் புண் உள்ளது, புண்ணின் தீவிரத் தன்மை, புண்ணுக்கான உண்மையான காரணம் ஆகியவற்றைத் தெந்து கொள்வது அவசியம்.

குறிப்பாக இரைப்பையில் புற்று நோய் காரணமாக புண் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியம்.

பாக்டீயாவைக் கண்டுபிடிப்பது எப்படி?


எண்டோஸ்கோப்பி பசோதனை செய்யும்போதே தேவைப்படும் நிலையில் சதையைக் கிள்ளி எடுத்து சதைப் பசோதனையையும் ("பயாப்ஸி') செய்துவிட முடியும். இதிலிருந்து வயிற்றுப் புண் பிரச்சினைக்கு எச் பைலோ பாக்டீயா காரணமா எனக் கண்டுபிடித்துவிட முடியும்.
புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே...:

உணவு விழுங்க முடியாத பிரச்னை - புரையேறுதல் - குரலில் மாற்றம் ஆகிய அறிகுறிகள் ஒருங்கிணைந்து இருத்தல், உணவு விழுங்குதல் பிரச்னையுடன் முதுகில் வலி, வயிற்றுப் புண் உள்ளிட்டவற்றை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக எண்டோஸ்கோப்பி பசோதனை செய்யும் நிலையில் புற்று நோய் பாதிப்பை உடனடியாகக் கண்டுபிடித்துவிட முடியும்.

உணவுக் குழாயில் உள்ள புற்று நோய் பாதிப்பு, உடலின் பிற பகுதிகளுக்குப் பரவாமல் உள்ள நிலையில் அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்தி விட முடியும். எனவே ஆரம்ப நிலை பசோதனையே சிறந்தது.

உணவுக் குழாய் புற்று நோய் தீவிரமாகி இருந்தால், பாதித்த உணவுக் குழாயை அகற்றி விட்டு, இரைப்பையை உணவுக் குழாயாக மாற்றும் அறுவைச் சிகிச்சை செய்யப்படும். இதன் மூலம் நோயாளியால் ஓரளவு மீண்டும் சாப்பிடத் தொடங்க முடியும்.

குறைவாகத்தான் சாப்பிட முடியும் என்றாலும்கூட, பசிக்கும் போதெல்லாம் நோயாளி சாப்பிடலாம்.

இரைப்பை புற்று நோய்:


முன்பே சொன்னது போல், வயிற்றுப் புண்ணுக்கு சோதனை செய்யும்போது இரைப்பையில் புற்று நோய் காரணமாக புண் இல்லை என்பதை உறுதி செய்வது அவசியம். இரைப்பையில் புற்று நோய் பாதிப்பு ஆரம்ப நிலையில் இருந்தால், பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி குணப்படுத்தி விடலாம்.

ஆனால், இரைப்பை முழுவதும் புற்று நோய் பரவியிருந்தால், முழு இரைப்பையையும் அகற்றி விட்டு, உணவுக் குழாயை சிறு குடலுடன் சேர்க்கும் அறுவைச் சிகிச்சை செய்யப்படும். இதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.

மது வேண்டவே வேண்டாம்:


தொடர்ந்து சிறிது அளவு மது குடிக்கும் நிலையில் இதய நலன் பாதுகாக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இது சயானது அல்ல. ஏனெனில் எந்த அளவு மது குடித்தால் இதயத்துக்கு நல்லது.

எந்த அளவு குடித்தால் கெடுதல் என்றோ இதுவரை நிரூபணங்கள் எதுவும் இல்லை. எனவே இதய நலனைக் குறிப்பிட்டு மதுப் பழக்கத்தை மேற்கொள்வதை இரைப்பை-குடல் மருத்துவம் ஏற்றுக் கொள்ளாது.

இதேபோன்று உடல் முழுவதுக்கும் தீங்கு விளைவிக்கும் புகைப் பழக்கம் கூடவே கூடாது. யானை சாப்பிடுவது போன்று நார்ச் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு சாப்பிடும் நிலையில், மலச்சிக்கல் இருக்கவே இருக்காது.

மலச்சிக்கல் இல்லாத நிலையில் ஜீரண உறுப்புகள் தொடர்பான நோய்கள் வராமல் பெருமளவுக்குத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

0 comments:

Post a Comment