Monday, 23 December 2013

நீரிழிவு நோய்க்கு இன்சுலின் மாத்திரைகள் – இந்திய விஞ்ஞானிகள் சாதனை!




இந்தியாவின் மிகப் பெரிய மருத்துவ சவால்களுள் ஒன்றாக நீரிழிவு நோய் இருந்து வருகின்றது. வரும் 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது முன்னர் கணக்கிடப்பட்ட 87 மில்லியன் என்பதைவிட அதிகமாகும். டைப்-1 என்ற வகை நோய்க் குறைபாடு, உடலில் தேவையான இன்சுலின் சுரக்காதபோது ஏற்படும் ஒன்றாகும். உடலில் உள்ள இன்சுலின் ரத்தத்தில் உள்ள குளுகோசைக் கரைக்காவிடில் டைப்-2 எனப்படும் நோய்த் தாக்கம் தோன்றும். இது கடுமையான பிரச்சனைகளை உருவாக்கக் கூடியதாகும்.


இதற்கிடையில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட இன்சுலின் மருந்து இந்த நோய் கண்ட ஏராளமான மக்களுக்கு உயிர் காக்கும் மருந்தாகப் பயன்பட்டு வருகின்றது. ஆயினும், இந்த மருந்தை தினமும் ஊசி மூலம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் வலி தராத மாத்திரை வடிவத்தில் இந்த மருந்தினைப் பெற மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முயன்று வந்த இந்திய விஞ்ஞானிகள் தற்போது இன்சுலின் மாத்திரையை உருவாக்கி உள்ளனர். இது, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாகவும், வலி போக்கும் தகவலாகவும் அமைந்துள்ளது.


பெரும் ஆராய்ச்சிக்குப் பின் பஞ்சாப் , தேசிய மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள்தான் இந்த இன்சுலினை மாத்திரை வடிவத்தில் உருவாக்கி உள்ளனர். அதிலும் அமெரிக்காவில் இதற்கான ஆய்வை நடத்தி வரும் இவர்கள், முன்னோட்டமாக, இன்சுலின் மாத்திரையை எலிகளுக்கு கொடுத்து சோதனை செய்ததில் அதன் சர்க்கரை அளவு குறைந்து, நல்ல பலனை கொடுத்துள்ளது. இதையடுத்து, மாத்திரை வடிவத்தில் இன்சுலினை தயார் செய்யும் பணி வேக மெடுத்துள்ளது.

0 comments:

Post a Comment