ஷங்கரின் ஐ படத்தில் தனது மூன்றாவது பாடலை எழுதியுள்ளார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. | |||
அந்நியன் படத்திற்கு பிறகு ஷங்கர் - விக்ரம் கூட்டணயில் உருவாகி வரும் திரைப்படம் ஐ. இப்படத்தில் விக்ரமுடன், எமி ஜாக்சன், சந்தானம், சுரேஷ் கோபி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துவருகிறார். தற்போது இளைஞர்களின் தனது புதுபுது டெக்னாலாஜி வரிகளால் கவனம் ஈர்த்த மதன் கார்க்கி இதில் பாடல் எழுதி வருகிறார். தற்போது இப்படத்திற்காக இவர் எழுதிய மூன்றாவது பாடல் பதிவு செய்யப்பட்டது. அப்பொழுது ஷங்கர் மற்றும் ரஹ்மான் மதன் கார்க்கியை வெகுவாக பாராட்டினார்களாம். அதுமட்டுமின்றி இவர் எழுதி சமீபத்தில் வெளியான 'ப்ரேயர் சாங்'கையும் தாங்கள் ரொம்ப ரசித்தோம் என்று தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்கள். இது பற்றி தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில் தெரிவித்த கார்க்கி, கடந்த மாதம் விஜய் சேதுபதி நடித்துள்ள இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா படத்திற்காக நான் எழுதிய 'ப்ரேயர் சாங்க்' பாடல் யூடியுபில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த பாடலுக்கு, ரஹ்மான் சாரிடமும், ஷங்கர் சாரிடமும் இருந்து பாராட்டு கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி என கூறியிருந்தார். |
Monday, 23 September 2013
Home »
சினிமா விமர்சனம்..!
» ஐ படத்திற்காக 3வது பாடல் ரெடி!
0 comments:
Post a Comment