சென்னையில் நடந்து வரும் சினிமா நூற்றாண்டு விழாவின் ஒரு நிகழ்ச்சியாக சூர்யாவை பேட்டி கண்டுள்ளார் லிங்குசாமி. | ||
சிங்கம் 2 வெற்றியை தொடர்ந்து சூர்யா, லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் லிங்குசாமி, சூர்யாவை பேட்டி கண்டுள்ளார். லிங்குசாமி: நீங்கள் அம்மா பிள்ளையா, அப்பா பிள்ளையா? சூர்யா: வீட்டுக்கு நான்தான் முதல் பிள்ளை. எப்படி எஸ்கேப் ஆயிட்டேன் பார்த்தீங்களா. லிங்குசாமி: கார்த்தியும், நீங்களும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் யார் வில்லன், யார் ஹீரோ? சூர்யா: அப்படி ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கோம். சினிமால நான் ஹீரோவா நடிச்சாலும் வீட்டுல நான் ஒரு சைலண்ட் வில்லன். கார்த்தி ரொம்ப நல்ல பையன். அதனால இரண்டு பேரும் நடிக்கிற படத்தில் கார்த்தி தான் ஹீரோ. நான் வில்லன். அதற்காக கிளைமாக்சுல அடியெல்லாம் வாங்க மாட்டேன். லிங்குசாமி: ரஜினி, கமல் ரெண்டு பேரும் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் பற்றி உங்கள் கருத்து? சூர்யா: ரஜினிசாரும், கமல்சாரும் இருக்கிற சினிமால அவுங்களோட நானும் இருக்கிறேங்கறதே ரொம்ப பெருமையான விஷயம். சினிமாவுக்கு வர்ற எல்லோருக்குமே அவுங்கதான் பென்ஞ் மார்க். அவர்கள் சாதனைகளை அவுங்களே உடைச்சாத்தான் உண்டு. வேற யாரும் பிரேக் பண்ண முடியாது. தலைக்கு ஏறாத வெற்றி, தளராத உழைப்பு இந்த இரண்டும் தான் அவர்களை உயரத்தில் வச்சிருக்கு. லிங்குசாமி: ஜோவை நீங்கள் சந்திக்காமல் இருந்திருந்தால்? சூர்யா: வாழ்க்கை இவ்வளவு அழகானதுன்னு தெரியாமலே போயிருக்கும். லிங்குசாமி: உங்கள் பார்வையில் இதுவரை வெளிவந்த தமிழ் சினிமாவில் டாப் டென் எது? சூர்யா: நான் சொல்றத ஒண்ணு ரெண்டு வரிசைப்படுத்த வேண்டாம். பராசக்தி, ஆயிரத்தில் ஒருவன், முள்ளும் மலரும், .தண்ணீர் தண்ணீர், 16 வயதினிலே, நாயகன், பாட்ஷா, மறுபக்கம், சேது, பருத்தி வீரன். லிங்குசாமி: உங்க நேர்மை பிடிச்சிருக்கு பத்துல உங்க படம் ஒன்றுகூட இல்லையே? சூர்யா: கொடுக்க முயற்சி பண்றேன். லிங்குசாமி: உங்களை பற்றி வந்த விமர்சனங்களில் உங்களுக்கு பிடிச்சது எது? சூர்யா: நேருக்கு நேர் படம் ரிலீசானப்போ உதயம் தியேட்டர்ல போயி படம் பார்த்தேன். அப்போ என்னை நிறைய பேருக்கு தெரியாது. படம் முடிந்து வெளியே வந்த சில ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டு படம் சூப்பர். நல்லா நடிச்சிருக்கீங்கன்னு கை கொடுத்து பாராட்டினாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு. திடீர்னு ஒரு ரசிகர் வேகமாக வந்து என் இரண்டு கையையும் பிடிச்சு சூப்பரா சொதப்பி இருக்கீங்க. அடுத்த படத்துலயாவது நடிக்க ட்ரை பண்ணுங்க பாஸ்னு சொல்லிட்டுப் போனார். நூறுபேர் பாராட்டினதை விட அந்த விமர்சனம் பிடிச்சிருந்தது. அவரு இந்த விழாவுக்குகூட வந்திருக்கலாம். பாஸ் நான் இப்போ நல்லா நடிக்கிறேனா? |
Monday 23 September 2013
Home »
சினிமா விமர்சனம்..!
» கார்த்திக்கு வில்லனாகும் சூர்யா!
0 comments:
Post a Comment