மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானத்தின் கலக்கல் காம்பினேஷனில் வெளியான படம் 'வணக்கம் சென்னை'. |
தேனியில் இருந்து வேலைக்காக புறப்படும் சிவாவையும், லண்டனில் இருந்து புகைப்படம் எடுப்பதற்காக கிளம்பும் ப்ரியா ஆனந்தையும் அன்புடன் வரவேற்கிறது சென்னை. இருவருக்கும் சென்னை புதிது என்பதால், தங்கள் குடியேறும் வீட்டின் ப்ரோக்கரின் தில்லு முல்லால் ஒரே வீட்டில் குடியேறும் சூழல் ஏற்படுகிறது. பின் என்ன வந்தாரை வாழ வைக்கும் சென்னை, இவர்கள் இருவரையும் ஒரே வீட்டில் எலியும் பூனையுமாக டான்ஸ் ஆட வைக்கிறது கலகலப்புடன். ஹோலிப்பண்டிகையில் ப்ரியா ஆனந்த் பூசிய வண்ணத்தில் கலர்புல்லாக, காதலின் நிறம் தேட ஆரம்பித்து விடுகிறார் சிவா. இந்நிலையில் இவர்களை ஏமாற்றி வீட்டு ப்ரோக்கராக நமது கொமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என்ட்ரி கொடுக்க. அதை தெரிந்தும், தெரியாததைப் போல் சிவா சமாளித்து விட்டு விடுகிறார். பின் தன் காதலை ப்ரியா ஆனந்துடன் சொல்ல முயற்சிக்கிறார். ஆனால், ப்ரியா ஆனந்துக்கு ஏற்கெனவே நிச்சயதார்த்தம் நடந்திருப்பது தெரிய வருகிறது. இதனால் கோபமடைந்த சிவா, தங்களை ஒன்றாக தங்கவைத்து எஸ்கேப்பான சந்தானத்தை கண்டுபிடித்து மாறுகால் மாறுகை வாங்குகிறார். அதற்கு பரிகாரம் செய்வதற்கு இவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக சிவாவிடம் சரண்டர் ஆகிறார் சந்தானம். வழக்கம் போல் சில முயற்சிகளில் மிஸ் ஆகி, இறுதில் ப்ரியா ஆனந்துக்கும் காதல் மலர்கிறது. அங்கதான் கதையில ஒரு ட்விஸ்ட்... ஒன்னுமில்லைங்க நம்ம ப்ரியா ஆனந்துக்கு நிச்சயம் பண்ண அந்த அமெரிக்க மாப்பிள்ளை... ஆ..சாரி..சாரி... இதில் லண்டன் மாப்பிள்ளையாக ராகுல் ரவிந்திரன் என்ட்ரி கொடுக்கிறார். அப்புறம் என்ன, இவங்க காதல் கைகூடுச்சா..? இல்ல பிரிஞ்சுட்டாங்களா..? என்பது மீதிக்கதையின் சுருக்கம். சிவா வழக்கம்போல் ஒரே ஸ்டைலில் வந்து ஏதோ நடிக்க முயற்சி செய்திருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பிரதர்! ப்ரியா ஆனந்த் தனது கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ, அதை கச்சித்தமாக செய்திருக்கிறார். கேட்ஸ் ஆப் ப்ரியா! சந்தானம் கொஞ்சம் இடைவெளிவிட்டு(படத்தில்) வந்தாலும், கொமெடி சரவெடியை கோலாகலமாகவே வெடிக்கவைத்திருக்கிறார். ராகுல் நவிந்திரன், லண்டன் மாப்பிளையின் தேவைக்கேற்ப நடித்துள்ளார். பின், நிழல்கள் ரவி, ரேணுகா, ப்ளாக் பாண்டி, ஊர்வசி, நாசர், மனோபாலா, சுவாமிநாதன், ஆர்த்தி என்று அவரவர்கள் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தியுள்ளனர். அறிமுக பெண் இயக்குனரான கிருத்திகா உதயநிதிக்கு வாழ்த்துக்கள். தான் நினைத்ததை பெர்பக்ஷனோடு எடுத்திருக்கிறார். கதையில் சில இடங்களில் ஓட்டை, உடசல்கள் தெரிந்தாலும் அதை தனது கொமெடிக் கலந்த திரைக்கதையால், நம் கண்களை மறைத்து விடுகிறார். அனிருத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இப்படத்திற்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறது. லண்டன், சென்னை, தேனீ ஆகிய இடங்களுக்கு நம்மை பிக்னிக் கூட்டிச் செல்கிறது ரிச்சர்ட்.எம்.நாதனின் ஒளிப்பதிவு. அதுவும் 'ஓ பெண்ணே..பெண்ணே' பாடல் கமெரா வெவ்வேறு கோணங்களில் நகர்வது மிக அழகு. சல்யூட் ரிச்சர்ட்! படத்தின் திரைக்கதை நீண்ட நேரம் பயணித்தாலும்... பார்ப்பவர்களின் பார்வைக்கு சற்றும் சலனம் தராமல், தத்தம் தனது பணியை வெகு சிறப்பாக செய்திருக்கிறார் எடிட்டர் டி.எஸ்.சுரேஷ். சூப்பர் பாஸ்! மொத்தத்தில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி, லாஜிக் விதிகளையும் மறந்து திரையரங்குக்கு வருவோரை பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறது இந்த வணக்கம் சென்னை. நடிகர்கள்: சிவா, சந்தானம், ராகுல் ரவிந்திரன் நடிகைகள்: ப்ரியா ஆனந்த், ஊர்வசி, ரேணுகா, ஆர்த்தி ஒளிப்பதிவு: ரிச்சர்ட்.எம்.நாதன் இசை: அனிருத் இயக்கம்: கிருத்திகா உதயநிதி தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலின் |
Saturday, 12 October 2013
Home »
சினிமா விமர்சனம்..!
» பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறது - வணக்கம் சென்னை!.
0 comments:
Post a Comment